கீர்த்தியின் ஹிந்தி வெப் சீரிஸ்!

பாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ் என்டர்டெயின்மென்ட் புதிய வெப் சீரிஸ் ஒன்றை தயாரிக்கிறது. இதில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். "கபாலி' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ராதிகா ஆஃப்தேவும் இதில் முக்கிய பாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். "தெறி' ஹிந்தி ரீ-மேக்கில் நடிப்பதற்கு முன் இந்த வெப்சீரிஸில் நடித்து முடிக்க கீர்த்தி சுரேஷ் திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக அடிக்கடி மும்பைக்கு பறக்கிறார் என்றும் தெரிவிக்கின்றன திரைத்துறை வட்டாரங்கள்.

cc

நெகிழ்ந்த ஹனி!

மலையாளத்தைத் தாண்டி தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வரும் ஹனி ரோஸ், தென்னிந்திய அளவில் பரிட்சயமுள்ள நாயகியாக வலம் வருகிறார். அதனால் அவரது படங்களும் தற்போது பான் இந்தியா படங்களாக வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் அவர் லீட் ரோலில் நடித்துள்ள படம் ‘ரேச்சல். மலையாளத்தில் படமாக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. சமீபத்தில் மொத்த படப்பிடிப்பும் முடிந்துள்ளது. படம் பற்றி கூறிய ஹனி ரோஸ், “""இப்படத்தில் நடித்த 47 நாட்கள், என் வாழ்க்கையில் மறக்க முடியாத அத்தியாயம். கதாநாயகி யாக எனது 18 வருட திரை அனுபவத்தில், இது போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்தது முதல்முறை'' ’என நெகிழ்ந்துள்ளார். படம் குறித்த ரிலீஸ், டீசர் உள்ளிட்ட அப்டேட்டுகள் விரைவில் வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார்.

நெகட்டிவ் நயன்தாரா!

தனது திரைப் பயணத்தில் 20 ஆண்டுகளை கடந்துள்ளார் நயன்தாரா. இதற்காக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் சில தயாரிப்பாளர்கள் கடுப்பிலும் இருக்கிறார்கள். காரணம், சமீபகாலமாக அவர் நடித்த தமிழ் படங்கள் அனைத்தும் படுதோல்வியடைந்துள்ளன. அதை சரிக்கட்டும் விதமாக அவருடன் இன்னோரு படத்தை கமிட் செய்ய அணுகினால், "அவுட்டோர் ஷூட்டிங் வரமுடியாது, ப்ரொமோஷனுக்கும் வரமுடியாது...' என ஏகப்பட்ட கண்டிஷன் போடுகிறாராம். அதோடு முன்பு வாங்கும் சம்பளத்தைவிட கூடுதல் சம்பளம் கேட் கிறாராம். மேலும் தொழில் தொடங்கிய பின்பு அதிலும் கவனம் செலுத்தி வருவதால் கமிட் செய்யப்பட்ட படங்களுக்கு கால்ஷீட் தரமுடியாமல் தவித்துவருகிறாராம் நயன்தாரா. அதனால்தான், துரை.செந்தில்குமார் இயக்கத்தில் கமிட்டான படம் கைவிடப்பட்டதாக கோலிவுட்டில் முணுமுணுக்கபடுகிறது. இப்படி தொடர்ந்து நயன்தாரா பற்றி நெகட்டிவ் ரிப்போர்ட்டுகள் பரவலாக சுற்றிவர... அது தற்போது அவரின் காதுக்கு போய்விட்டதாம். அதனால் தொடர்ந்து அதை சரிக்கட்ட, விக்னேஷ்சிவனுடன் டிஸ்கஷனில் ஈடுபட்டு வருதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அல்லு-அட்லீ காம்போ!

குறுகிய காலத்தில் கோலிவுட்டைத் தாண்டி பாலிவுட்டிற்கு சென்ற அட்லீ, ஷாருக்கானை வைத்து "ஜவான்' என்ற வெற்றிப்படத்தை கொடுத்துவிட்டதால், இந்திய அளவில் கவனிக்கப்படும் இயக்குநராக இருக்கிறார். அவரிடம் முன்னணி ஹீரோக்கள் பலரும் கதை கேட்டு வருகின்றனர், அந்த வகையில் விஜய் மற்றும் ஷாருக்கான் இருவரும் அட்லீயிடம் கதை பண்ணச் சொல்லியுள்ள நிலையில், அதற்காக கதை எழுதி வருகிறார். சமீபத்தில் அல்லு அர்ஜுனை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி யுள்ளார். அது சுமுகமாகவும் முடிந்துள் ளது. அதனால் இப்படத்தின் பணிகளை தற்போது அட்லீ தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பணிகள் முழுவீச்சில் நடைபெற படப்பிடிப்பு 2024 இறுதியில் ஆரம்பிக்கத் திட்ட மிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதோடு அல்லு அர்ஜுன் இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிகின்றன. இப்படத்திற்கு அனிருத்தை இசையமைப்பாளராக கமிட் செய்துள்ளார் அட்லீ. அடுத்த மாதம் இறுதியில் அறிவிப்பை வெளியிடும் நோக்கில் படக்குழுவினர் இருக்கிறார்கள்.

லெஜண்ட் செகன்ட் மூவி!

சரவணா ஸ்டோர் குழுமத்தின் உரிமையாளரான சரவணன் அருள் கடந்த ஆண்டு வெளியான "தி லெஜண்ட்' படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகமாகியிருந்தார். இதையடுத்து லெஜண்ட் சரவணனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாக பேச்சுகள் எழுந்த நிலையில், புதிய படத்தின் தகவல் வெளியாகி யுள்ளது. துரை.செந்தில்குமார் இயக்கத்தில் அவர் நடிக்க கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை பிரம்மாண்டமாக எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. துரை.செந்தில்குமார், "எதிர் நீச்சல்', "காக்கி சட்டை', "கொடி', "பட்டாஸ்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது சூரியை ஹீரோவாக வைத்து அவர் ஒரு படம் இயக்கிவரும் நிலையில், அதை முடித்துவிட்டு லெஜண்ட் சரவணன் படத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

-கவிதாசன் ஜெ.