பலே பிரதீப்!

இரண்டு படங்களை இயக்கி வெற்றியைக் கொடுத்ததால் மார்க்கெட் எகிறிய பிரதீப் ரங்க நாதன், அடுத்தடுத்து படங்களை இயக்குவதற்காக தயாராகிக்கொண்டிருந்தார். இயக்குநர் ஆனதே நடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்றிருந் தவருக்கு இப்போது நடிக்கும் வாய்ப்பு கதவை தட்டியதும் ஓ.கே. சொல்லிவிட்டார். இயக்குநர் விக்னேஷ் சிவன், தற்போது பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார். தொடக்கத்தில் இந்த படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கமல் நிறுவனத்திற்கு பதிலாக தயாரிப்பாளர் லலித் நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கவுள்ளார்கள். இப்படத்திற்காக பிரதீப் ரங்கநாதனுக்கு பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளது. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அனிருத் இசையமைக்கிறார்.

சம்மதிப்பாரா சமந்தா?

cc

Advertisment

"புஷ்பா' படத்தில் சமந்தா நடனமாடிய, "ஊ... சொல்றியா மாமா' பாடல், அந்த படத்திற்கு பெரிய மார்கெட்டிங் காக அமைந்தது. இதனிடையே சில சர்ச்சைகளிலும் சிக்கியது. அதே பாடல்போல் புஷ்பா இரண்டாம் பாகத்திலும் ஒரு குத்துப்பாடல் அமைந் துள்ள நிலையில், அதற்கும் நடனமாட சமந்தாவை படக்குழு அணுகியது. ஆனால் அவரிடமிருந்து சரியான பதில் இல்லை. அதனால் மற்ற டாப் நடிகைகளான மலைக்கா அரோரா, திஷா பதானி, ஸ்ரீலீலா உள்ளிட்ட வர்களை முயற்சி செய்து வந்தனர். எதுவும் கைகூடாமல் போக... தற்போது மீண்டும் சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு. முதல் பாகத்தில் சமந்தாவின் நடனம் பட்டி தொட்டியெங்கும் ஹிட்டடித்ததால் அவரே இரண்டாம் பாகத்திலும் இருந்தால் படத்திற்கு நல்ல வலு சேர்க்கும் என படக்குழு நம்புகிறது. அதனால் அவரை எப்படியாவது நடனமாட வைக்க முயற்சிசெய்து வருகிறது.

அஜித் ஹேப்பி!

அஜித்தின் "விடாமுயற்சி' படப்பிடிப்பு, முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதில் த்ரிஷா, ரெஜினா கெஸாண்ட்ரா, அர்ஜுன், பிரியாபவானி ஷங்கர், ஆரவ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மகிழ் திருமேனி இயக்கி வரும் இப்படத்தில் அஜித் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் கார் சேசிங் காட்சிகள் இருக்கிறதாம். அதை ஹாலிவுட் தரத்தில் எடுக்கத் திட்டமிட்டுள்ளனர். அதனால் ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குநர்களை வரவழைத்து பெரும் பொருட்செலவில் படமாக்கி முடித்துள்ளார்கள். காட்சியைப் பார்த்த அஜித்தும் மகிழ் திருமேனியும் ரொம்ப ஹேப்பியாம். காட்சி அருமையாக வந்துள்ளதாம். அதனால் அதே மகிழ்ச்சியுடன் அடுத்தடுத்த காட்சிகளை தீவிரமாக எடுத்துவருகிறார்கள்.

Advertisment

பொங்கல் ரேஸில் கேப்டன் மில்லர்!

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் "கேப்டன் மில்லர்' படம் டிசம்பர் 15ஆம் தேதி வெளியாகவுள்ளதாக முன்பு படக்குழு தெரிவித்தது. ஆனால் திடீரென 2024 பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. பெரும் பொருட்செலவில் இப்படம் உருவாகிவரும் நிலையில், முன்பு படத்தின் நீளம் அதிகமாகி விட்டதாக வும் அதனால் இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால் லேட்டஸ்ட் தகவலின்படி, 2 பாகங்களாக வெளியிடும் திட்டம் கைவிடப்பட்டு, ஒரே பாகமாக வெளியிட முடிவெடுக்கப்பட்டுள்ளது. அந்த பாகம் நல்ல வரவேற்பு பெரும் நிலையில் அடுத்த பாகம் கண்டிப்பாக எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை வெளியிட தொடர் விடுமுறை சரியாக இருக்குமென தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்து பொங்கலை குறிவைத்துள்ளது. ஏற்கனவே பொங்கல் ரேசில் லால் சலாம், அயலான், வணங்கான், அரண்மனை 4 உள்ளிட்ட படங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

cc

புத்தாண்டு ட்ரீட்!

சூர்யா -சிவா கூட்டணியின் "கங்குவா' படக்குழு படப்பிடிப்பை முடிக்கவுள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்துவருகிறது. இந்த மாதத்திற்குள் முடியவுள்ளதாக சொல்லப்படும் நிலையில்... அடுத்தகட்ட பணிகளை சிறிது பிரேக் விட்டு தொடங்க திட்டமிட்டுள்ளார்கள். ஜனவரி மாதம் முதல் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை ஆரம்பித்து 2024 ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியிட பிளான் போட்டுள்ளனர். அதே தேதியில்தான் கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகும் "இந்தியன் 2' படத்தையும் வெளியிடத் திட்ட மிடப்பட்டுள்ளது. அதனால் இரண்டு பெரிய ஹீரோக் களின் படங்கள் ஒரே நேரத்தில் வெளி யாவதாக தெரி யும் சூழலில், ரசிகர்களுக்கு அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டு நல்ல ட்ரீட்டாக இருக்கும்.

-கவிதாசன் ஜெ.