முனைப்புடன் முருகதாஸ்!
பல வெற்றிப் படங்களைக் கொடுத்து டாப் இயக்குநராக வலம் வந்தவர் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால் சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால் பல டாப் ஹீரோக்களின் பட வாய்ப்பு களும், குறிப்பாக விஜய் பட வாய்ப்பும் கைநழுவிப் போனதாகச் சொல்லப்பட்டது. சமீபத்தில் சிம்புவிடம் ஒரு கதையைச் சொல்லி ஓ.கே. வாங்கியுள்ளதாகவும், அவரது கால்ஷீட்டுக்கு காத்திருப்பதாகவும் தகவல் வெளியானது.
ஆனால் தற்போது வந்திருக்கும் தகவலின்படி சிம்பு படத்திற்கு முன்பாக சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாகவும், இப் படத்தை லைட்ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் மது தயாரிப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தெரி விக்கின்றன. இப்படத்தை வெற்றிப்படமாகக் கொடுக்க வேண்டும் என்பதில் தீவிர முனைப்போடு ப்ரீ புரொடக்ஷன் பணிகளில் முழுக் கவனத்தையும் செலுத்தி வருகிறார் ஏ.ஆர் முருகதாஸ். இதற்குமுன் ஏ.ஆர். முருகதாஸ் கதையில் "மான் கராத்தே' படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்த நிலையில்... தற்போது அவரது இயக்கத்திலும் நடிக்கவுள்ளார். சிவகார்த்திகேயன் லைனப்பில் "அயலான்', "மாவீரன்' படங்களை அடுத்து கமல் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்சேதுபதி மிரட்டலில் அரண்மனை-4
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cinema1_133.jpg)
தமிழ் சினிமாவில் ஹாரர் ஜானரின் அலை சற்று ஓய்வெடுத்திருக்கும் நிலையில் தற்போது மீண்டும் தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது. அந்த வகையில் "பிசாசு 2' ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் "சந்திரமுகி 2' உருவாகிக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் அந்த லிஸ்டில் மீண்டும் ஒரு ஹாரர் படம் இணைந்துள்ளதாகத் தெரிகிறது. சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான "அரண் மனை' படம் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து 'அரண் மனை 2', 'அரண்மனை 3' உள்ளிட்ட அடுத்தடுத்த பாகங்கள் வெளியான நிலையில் அதன் தொடர்ச்சியாக தற்போது அடுத்த பாகமான 'அரண்மனை 4' படம் உருவாகவுள்ளது. இப்படத்தில் முதன்மை கதாபாத்தி ரத்தில் விஜய்சேதுபதி மற்றும் சந்தானம் கமிட்டாகியுள் ளார்கள். மேலும் ஹன்சிகா, ராஷிகண்ணா, ஆண்ட்ரியா உள்ளிட்டோரும் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் மூலம் முதல் முறை யாகச் சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்கவுள்ள விஜய்சேதுபதி "பீட்சா', "அனபெல் சேதுபதி' படத்திற்கு பிறகு ஹாரர் ஜானரில் நடிக்க வுள்ளார்.
கே.ஜி.எஃப். யுனிவர்ஸ்!
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cinema2_46.jpg)
"லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்' என்ற பாணியில் இயக்கு நர் லோகேஷ் கனகராஜ் படங்களை எடுத்துவரும் நிலையில், அவருக்கு டஃப் கொடுக்கும் வகையில் தற் போது கே.ஜி. எஃப் பட இயக்குநர் பிரஷாந்த் நீலும் இறங்கியுள்ள தாகத் தெரிகிறது. "கே.ஜி.எஃப்.2' படத்தை அடுத்து தற்போது பிரபாஸை வைத்து "சலார்' படத்தை இயக்கிவரும் பிரஷாந்த் நீல், "கே.ஜி.எஃப்.' கதையையும் "சலார்' கதையையும் தொடர்பு படுத்தி ஒரு புது யுனிவர்ஸை உருவாக்கியுள்ளார். அதனால் ராக்கி பாய் கதாபாத்திரம் இப்படத்தில் ஒரு கேமியோ ரோலில் வருவதால் யஷ்ஷை நடிக்க அணுகியுள்ளார் பிர ஷாந்த் நீல். அந்த கதாபாத்தி ரம் மூலம் இந்திய அளவில் தனக்கு கவனம் கிடைத்த தால், சற்றும் யோசிக்காமல் அதற்கு ஓ.கே சொல்லிவிட்டார் யஷ். இப்படத்தில் ராக்கி பாயை பார்க்க ஆவலாக உள்ளனர் அவரது ரசிகர்கள்.
அசத்துவாரா அஞ்சலி?
இயக்குநர் ராமின் "கற்றது தமிழ்' மூலம் அறிமுகமாகி "அங்காடி தெரு' மூலம் பிரபலமாகி, தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தவர் நடிகை அஞ்சலி. தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினை களாலும், அவர் நடித்த படங்கள் சரியாக போகாததி னாலும், அவரது மார்க்கெட் சற்று குறைந்தது. இருப்பினும் மனம் தளராமல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி களில் கவனம்செலுத்தி வருகிறார் அஞ்சலி. அந்த வகையில் தற்போது மீண் டும் இயக்குநர் ராம் இயக்கும் "ஏழு கடல் ஏழு மலை' படத்தில் நிவின்பாலிக்கு ஜோடியாக நடித்துள்ள அஞ்சலி, ஷங்கர்-ராம்சரண் கூட்டணியில் உருவாகும் படத்திலும் நடித்து வருகிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cinema_183.jpg)
இந்த இரண்டு படங்களைப் பெரிதும் நம்பியிருக்கும் அஞ்சலி, படம் வெளியானால் தனது மார்க்கெட் மீண்டும் உயரும் எனவும், தமிழ் மற்றும் தெலுங்கில் கவனிக்கப்படும் ஹீரோயினாக மாறுவேன் எனறும் குஷியில் உள்ளா ராம். அதன் காரணமாகத் தனது சம்பளத்தை அஞ்சலி உயர்த்தியுள்ள தாகக் கூறப்படுகிறது.
-கவிதாசன் ஜெ.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-01/cinema-t_6.jpg)