விஜய்-அட்லீ வெயிட்டிங்!

cc

தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியாகவுள்ள "வாரிசு' படத்தில் நடித்துள்ள விஜய், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் "தளபதி 67' படத்தில் நடிக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் மீண்டும் ஒரு படம் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியான நிலையில், இதுகுறித்து அவர்களுக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தபோது, "விஜய்யின் 68-வது படத்தை அட்லீ இயக்குவது உறுதியாகியுள்ளது' என்கின்றனர். பான் இந்தியா படமாக இப்படத்தை எடுக்க திட்டமிட்டு வருவதாகவும், பிரம்மாண்ட பொருட்செலவில், அதாவது விஜய் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் இப்படத்தை உருவாக்கவிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். அட்லீ தற்போது ஷாருக்கானை வைத்து இயக்கிவரும் "ஜவான்' படம் அடுத்த ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி வெளியாகிறது. விஜய்யும், லோகேஷ் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார். எனவே, விஜய் மற்றும் அட்லீ இருவரும் அவரவர் படத்தின் பணிகளை முடித்துவிட்டு, இந்தப் படத்தில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாலா புது கூட்டணி!

"வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகியதால் மிகவும் அப்செட்டில் இருந்த பாலா, அந்த படத்தில் அதர்வாவை நடிக்க வைக்க முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது வந்திருக்கும் லேட்டஸ்ட் தகவலின்படி "வணங்கான்' படத்தில் அதர்வா நடிக்கவில்லை என்றும், அதற்குப் பதில் பாலா, அருண்விஜய்யை ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அருண்விஜய் தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் "அச்சம் என்பது இல்லையே' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்துவிட்டு, பாலாவின் "வணங்கான்' படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமல் பேனரில் விஜய்சேதுபதி!

ff

Advertisment

கமல்ஹாசன், ஆரம்ப காலகட்டத்தில் தனது தயாரிப்பு நிறுவனமான 'ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்' மூலம் தொடர்ந்து படங்களை தயாரித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக அந்த எண்ணிக்கை குறைந்தது. ஆனால் கடைசியாக தயாரித்த "விக்ரம்' வசூலில் பெரும் வெற்றியைக் கண்டதால், மீண்டும் அடுத்தடுத்து படங்களை புக் செய்து வருகிறார். அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படமும், உதயநிதி நடிக்கும் புது படத்தையும் தயாரிக்க உள்ளதாக அறிவித்தார் கமல்ஹாசன். ஆனால் உதயநிதி, அமைச்சராக பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, "படங்களில் இனி நடிக்கமாட்டேன்' எனக்கூறி, கமல் படத்திலிருந்து விலகினார். இதையடுத்து அந்த படத்தில் யார் நடிப்பார் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்த நிலையில்... அதில் தற்போது விஜய்சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கமல் தயாரித்து நடித்த "விக்ரம்' படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் இக்கூட்டணி இணையவுள்ளதாக கூறப்படுவதால் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்ட்ரியா "மனுஷி'!

dd

நயன்தாராவின் ஹிட் மூவிஸ் வரி சையில் "அறம்' படமும் முக் கியமான ஒன்றாகும். இயக்குநரின் கோபிநயினார் இயக்கிய "அறம்' படத்தில் நயன் நடித்தபோது, அந்தப் படம் நயனின் அரசியல் பிரவேச படமாக பரபரப்பாக அப்போது பேசப்பட்டது. அதே கோபிநயினார் நயனுக்காக "ஒரு' என்ற கதையை உருவாக்கி வைத்து காத்திருந்தார். நயனின் பிஸியான ஷெட்யூலால் கோபிக்கு கால்ஷீட் கிடைக்கவில்லை. பார்த்தார்... இப்போது ஆண்ட்ரியாவை வைத்து "மனுஷி' என்ற பெயரில் படத்தை தொடங்கிவிட்டார். அதிலும் இந்தப் படத்தின் கதையைக் கேட்ட இயக்குநர் வெற்றிமாறன், தனது பேனரில் "மனுஷி'யை தயாரிக்கவுள்ளார்.

அனுஷ்கா கம்பேக்!

கடந்த சில வருடங்களாக பெரிய அளவில் ஹிட் கொடுக்கவில்லை அனுஷ்கா. பட வாய்ப்புகளும் குறைந்தது. இதற்கு அனுஷ்கா உடல் எடை அதிகரித்ததே காரணமாக சொல் லப்படுகிறது. இந்த நிலையில், தற்போது தனது உடல் எடையைக் குறைத்து பழையபடி, செகண்ட் இன்னிங்ஸை தொடங்கியுள்ள அனுஷ்கா, தீவிர முனைப்புடன் நல்ல கதையம்சம் கொண்ட கதைகளை தேர்வு செய்வதில் கவனம் செலுத்தி வருகிறா ராம். அந்தப் படத்தை "ராதே ஷியாம்' படத்தை தயாரித்த "யுவி கிரியேஷன்ஸ்' நிறுவனம் தயாரிக்க முழுவீச்சில் படப் பிடிப்பு நடை பெற்றுவருகிறதாம். "அனுஷ்காவுக்கு இப்படம் ஒரு கம்பேக் படமாக அமையும்' என டோலிவுட்டில் பரவலாக பேசப் படுகிறது.

-கவிதாசன் ஜெ.