சீக்ரெட் உடைத்த டாப்ஸி!
காஃபி வித் கரண் நிகழ்ச்சி இந்தி திரையுலகில் மிகவும் பிரபலம். கரண்ஜோகர் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி, ஆறு சீசன்களைக் கடந்து, ஏழாவது சீசன் ஹாட் ஸ்டார் ஓ.டி.டி. தளத்தில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. காமெடி ஷோவாக அறியப்பட்ட இந்த நிகழ்ச்சியில் அண்மைக் காலமாக ஆபாச வாடை அடிக்கிறது. தொகுப்பாளர் கரண்ஜோகர் கெஸ்ட்டாக வரும் செலிப்ரட்டிகளிடம் தனிப்பட்ட அந்தரங்க விஷயங்கள் குறித்து கேள்வி எழுப்ப... சிலர் முகம் சுளிக்காமல் பதிலும் சொல்கின்றனர். அருவருக்கத்தக்க கேள்விகளை நெட்டிசன் கள் கண்டித்தாலும் அந்த எபிசோடுகள் மில்லியன் கணக்கில் ஹிட் அடிப்பதால் கரண்ஜோகரும் அதையே தொடர்கிறார். அண்மையில் டோலிவுட் நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம் அவர் கேட்ட கேள்விகள் ஆபாசத்தின் உச்சம். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பேசியுள்ள நடிகை டாப்ஸி, காஃபி வித் கரண் நிகழ்ச்சியை தாக்கி யுள்ளார். அனுராக் காஷ்யப் இயக்கத்தில் டாப்ஸி நடிப்பில் உருவாகி யுள்ள "தோபாரா'’படம் விரைவில் வெளி யாக இருப்பதால், அதற்கான ப்ரோமோஷ னில் பிஸியாக இருந்த டாப்ஸியிடம் "நீங்கள் ஏன் காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைக்கப்படுவதில்லை' என நெறியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு டாப்ஸி, "என்னுடைய செக்ஸ் வாழ்க்கை அந்த அளவிற்கு சுவாரசியமாக இல்லை' என நெத்தியடி பதில் கொடுத்தார். அன்றைய தினம் டாப்ஸியின் இந்தப் பதில்தான் சோசியல் மீடியாக்களில் தக் லைஃப் கன்டன்ட்.
"அந்த' காட்சி இல்லையாம்!
மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான "பிசாசு' திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், அதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித் திருக்கிறார். படத்தில் நடிகை ஆண்ட்ரியா 15 நிமிடங்கள் நிர்வாணமாக நடித்திருந்தார். தற்போது அந்தக் காட்சியை படக்குழு நீக்கிவிட்டதாம். படத்தில் குழந்தைகளைக் கவரக்கூடிய விஷயங்கள் நிறைய உள்ளனவாம். எனவே குழந்தைகள் ரசிக்கவேண்டிய படத்தில் நிர்வாணக் காட்சிகள் வேண்டாம் என இயக்குநர் மிஷ்கின் இந்த முடிவை எடுத்துள்ளாராம். ஆரம்பத்திலிருந்தே ஆண்ட்ரியா நிர்வாணமாக நடிக்கிறார் எனக் கூறி ஹைப் ஏற்றிவந்த படக்குழு, ரிலீஸ் நெருங்கியதும் அடித்திருக்கும் இந்த பல்டி அந்தர்பல்டி ரகம்.
ஸ்டார்ட் ஆக்ஷன் ரஜினி!
"அண்ணாத்த' படத்தைத் தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸுடன் கூட்டணி அமைத்திருக்கும் ரஜினிகாந்த், "ஜெயிலர்' படத்திற்காக தயாராகிவருகிறார். படத்தை நெல்சன் இயக்குகிறார். இப்படம் தொடர்பான அறிவிப்பு நெல்சனின் "பீஸ்ட்' பட ரிலீஸுக்கு முன்னரே வெளியான போதிலும் படம் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. "பீஸ்ட்' படம் சறுக்கியதால் படத்தின் கதையை மெருகேற்றுவதில் இயக்குநர் கூடுதல் மெனக்கெடல் போட்டுள்ளாராம். மற்றொருபுறம் படத்திற்கான செட் அமைக்கும் பணிகளும் ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. அண்மையில் தமிழக ஆளுநரைச் சந்தித்துவிட்டு திரும்பிய ரஜினிகாந்திடம், "ஜெயிலர் படப்பிடிப்பு எப்போது தொடங்கும்' என பத்திரிகையாளர்கள் கேட்க, "வரும் 15 அல்லது 22-ஆம் தேதியில் படப்பிடிப்பு தொடங்கும்' என்று ரஜினி பதிலளித்துவிட்டுச் சென்றார். படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நடிக்கவிருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் இருந்து கிடைக்கும் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய்யுடன் மோதும் சஞ்சய்தத்!
சோசியல் மீடியாக்களில் இருந்து பிரேக் எடுத்துள்ள லோகேஷ் கனகராஜ், ’"தளபதி 67'’ படத்திற்கான ஸ்டோரி டெவலப்மெண்டில் பிஸியாக உள்ளார். வம்சி இயக்கத்தில் "வாரிசு' படத்தில் நடித்துவரும் விஜய் அப்படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜுடன் இணையவுள்ளார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், ’"தளபதி 67'’டபுள் ஹீரோயின் சப்ஜெக்ட் என்று லேட்டஸ்ட் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தாவும், திரிஷாவும் நடிக்கவுள்ளனராம். அதேபோல, படத்தில் ஆறு வில்லன்கள் என்ற பேச்சும் கோலிவுட் வட்டாரத்தில் அடிபடுகிறது. அதில், முக்கிய வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் நடிக்க இருக்கிறாராம்.
-இரா.சிவா