தமிழ் சினிமாவில் பொதுவாக ஹீரோக்களை வைத்தே படத்தின் விநியோகம், பட்ஜெட் போன்றவை திட்டமிடப்படுகிறது. இவ்வளவு ஏன் ரசிகர்கள் கூட ஹீரோக்களுக் காகதான் திரையரங்குகளில் படம் பார்க்கத் திரள் கின்றனர். இதை அனைத் தையும் மாற்றி இயக்கு நர்களுக்காகவும் ரசிகர்கள் கூடுவார்கள் என்ற புதிய டிரெண்டை உரு வாக்கிய சில இயக்குநர்களில் முக்கியமானவர் வெற்றிமாறன்.
வெற்றிமாறன் கோலிவுட்டிலிருந்து டோலிவுட்டுக்கு பறக்கத் திட்டமிட்டுள்ளாராம். "ஆர்.ஆர்.ஆர்.' படத்தின் மூலம் பான் இந்தியா ஸ்டாராக மாறியுள்ள ஜூனியர் என்.டி.ஆரை சந்தித்து வெற்றிமாறன் கதை சொல்லிய தாகவும், கதையைக் கேட்ட உடனே அவரும் ஓ.கே. சொல்லியதாகவும் கூறப்படுகிறது. மேலும், ஐந்து மொழி களில் இப்படத்தைப் பிரம்மாண்டமாக வெளியிடத் திட்டமிட்டு, இதற்காகப் பிரபல தயாரிப்பாளர்களிடம் கதை குறித்த விவாதம் நடைபெற்று வருவதாகவும் டோலிவுட் வட்டாரங்கள் முணுமுணுத்து வருகின்றன. ஏற்கனவே "ஆர்.ஆர்.ஆர்.' பட விழாவில் பேசிய ஜூனியர் என்.டி.ஆர் தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த தகவலால் அவரது ரசிகர்கள் ஏகத்துக்கும் குஷியாக உள்ளனர்.
நாகசைதன்யா -சோபிதா டேட்டிங்!
தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா கடந்த 2017-ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் கடந்த ஆண்டு இருவரும் பிரிந்தனர். இதையடுத்து இருவருமே தங்களது நடிப்பு வேலைகளில் மும்முரமாகிவிட்டனர். இதனிடையே, நாக சைதன்யா நடிகையும் மாடல் அழகியுமான சோபிதா துலிபாலாவை காதலித்து வருவதாகவும், இருவரும் இணைந்து டேட்டிங் செய்து வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்த தகவல் பொய் என்றும், நாக சைதன்யாவின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் இதுபோன்ற செய்திகளைத் திட்டமிட்டு சமந்தாவின் பி.ஆர் டீம் பரப்பி வருவதாகவும் இணையத்தில் சிலர் குற்றம்சாட்டி வந்தனர். இதைப் பார்த்துக் கடுப்பான சமந்தா, "பெண்கள் குறித்து வதந்திகள் பரவினால் அது உண்மை என்றும், ஆண்கள் குறித்து வதந்திகள் பரவினால் அதைப் பெண்கள்தான் திட்டமிட்டுப் பரப்புவதாகவும் கூறுகிறார்கள். சம்பந்தப்பட்டவர்களே கடந்து சென்றுவிட்டனர். தேவையில்லாத வேலையில் மூக்கை நுழைக்காமல் உங்களது பணியிலும், குடும்பத்தைப் பற்றியும் கவனம் செலுத்துங்கள்'' என்று காட்டமாகப் பதிலளித்துள்ளார்.
வலம்வரும் மாயோன் ரதம்!
சிபிராஜ், தன்யா ரவிச்சந்திரன், ராதாரவி உள்ளிட்டோர் நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்தோடு உருவாகியுள்ள படம் "மாயோன்'. புராணக்கதைகளை மையப்படுத்தி அறிவியலுக்கும் ஆன்மிகத்துக்குமான விவாதத்தை முன்னிறுத்தி வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியாகியுள்ளது இப்படம். இசைஞானி இளையராஜா இசையில் கிஷோர் இயக்கத்தில் உருவாகியுள்ள "மாயோன்' புதுமையான கதைக்களம் மட்டுமின்றி தொழில்நுட்பங்களாலும் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது. பார்வைத்திறன் சவால் உள்ள ரசிகர்கள் ரசிக்கும் வகையில் இந்தியாவிலேயே முதன்முறையாக ஆடியோ விளக்கத்துடன் வெளியான இப்படத்தின் டீசர், ட்ரைலர் நல்ல வரவேற்பைப் பெற்றநிலையில், படத்தையும் இதே தொழில்நுட்பத்துடன் உருவாக்கியுள்ளது படக்குழு. இதன்மூலம் பார்வையற்றோரும் இப்படத்தை ரசிக்க முடியுமாம்.
ஜூன் 24 அன்று வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கும் இப்படம் குறித்து படத்தின் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் பேசுகையில், "பண்டைய தமிழர்களின் ஆன்மிக அறிவியலும் சிறியவர்களுக்குப் பிடித்த அறிவியல் மாயாஜாலங்களும் இப்படத்தில் இருப்பதால், எல்லா வயதினரையும் நிச்சயம் இந்த படம் ஈர்க்கும். மேலும், இதில் தொல்பொருள் ஆராய்ச்சியாளராக வரும் கதாநாயகன் சிபி சத்யராஜ், கதாநாயகி தன்யாவுக்கும் கோவில் அறங்காவலராக வரும் ராதாரவிக்கும் இடையே நடக்கும், நவீன அறிவியலா? ஆன்மீகமா? போட்டி மக்களை சுவாரசியப்படுத்தும்'' என்று தெரிவித்துள்ளார்.
-அருண்பிரகாஷ்