அவ்வப்போது கான்ட்ராவர்சியாகப் பேசி சர்ச்சையில் சிக்கிக் கொண்டாலும் சம்பள விஷயத்தில் கறாராக எங்கேயோ போய்விட்டாராம் கங்கனா ரணவத். படத்திற்கு 20 கோடி வரை கங்கனா சம்பளம் வாங்குவதைக் கண்டு பாலிவுட்டில் நடிகை களைவிட, நடிகர்கள்தான் பொருமுகிறார்களாம். நமக்குச் சமமாக வந்து விடுவாரோ என்று கங்கனாவைக் கண்டு மிரள்கிறார்களாம்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், விஜய்சேது பதி, பகத்ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி யுள்ள ’"விக்ரம்'’ திரைப்படம், வரும் ஜூன் 3-ஆம் தேதி வெளியாகவுள்ளது. "கைதி', "மாஸ்டர்'’என இரு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து கோலிவுட் கிராப்பில் உச்சத்தில் இருக்கும் லோகேஷ் இயக்கியுள்ள படம் என்பதால் ரிலீஸுக்கு முந்தைய வியாபாரமே சக்கைபோடு போட் டுள்ளதாம்.
இந்த நிலையில், படத்தில் நடிகர் சூர்யா முக்கிய கதாபாத்தி ரத்தில் நடித்துள்ளார் எனக் கடந்த சில வாரங்களாக தகவல் பரவிவந்தது. அதனை உறுதிசெய்யும் வித மாக ’விக்ரம்’ படப் பிடிப்பு தளத்தில் நடிகர் சூர்யா இருக்கும் புகைப்படமும் வெளி யானது. இந்தச் சூழலில் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது. அந்த விழாவில் பேசிய இயக்குநர் லோகேஷ், "கொஞ்சம் லேட்டா சொல்லலாம்னு நினைத்தேன், ஆனால் அதற்கு முன்பே தெரிஞ்சிருச்சு. ’"விக்ரம்'’ படத்தில் சூர்யா சார் நடித் திருக்கிறார். நன்றி சார்' எனக் கூறி சூர்யா நடித்திருப் பதை உறுதிசெய்த கையோடு, "எதற்கு நன்றி சொல்றேன்னு படம் பார்த்த பிறகு உங்களுக்குப் புரியும்' என ஒரு சஸ்பென் ஸையும் வைத்து விட்டுப்போனார்.
பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளி யாகி இந்தியா வின் சாண்டல் வுட்டை திரும்பிப் பார்க்க வைத்த ’"கே.ஜி.எஃப்'’ படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியானது. மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஒருபடி தாண்டியே பூர்த்தி செய்தது. விஜய் நடிப்பில் வெளியான ’"பீஸ்ட்'’, ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ’"ஆர்.ஆர்.ஆர்.' படங்களுக்கு டஃப் கொடுத்த ’"கே.ஜி.எஃப் 2'’, வசூலில் 1200 கோடியைத் தாண்டி இன்னும் பல திரையரங்கு களில் வெற்றிநடை போடுகிறது.
’அமெரிக்கா, இந்தோனேசியா போலீஸ் ஏன் ராக்கிய தேடுது’ என்ற சஸ்பென்ஸுடன் ’"கே.ஜி.எஃப் 2'’ படத்தினை நிறைவுசெய்து, அடுத்த பாகத்திற்கான லீடையும் தந்திருந்தது படக்குழு. ’"கே.ஜி.எஃப் 3'’ குறித்து மிகப்பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ள நிலையில், அடுத்த பாகத்தை மார்வெல் படங்களின் பாணியில் வேறுவேறு படங்களின் கதாபாத்திரத்தை ஒரே படத்தினுள் கொண்டுவந்து எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிர்கந்தர் தெரிவித்துள்ளார்.
ஒருபுறம் யாஷின் "கே.ஜி.எஃப் 2'’, மற்றொருபுறம் பிரபாஸின் "சலார்'’என பிஸியாக இருந்த இயக்குநர் பிரசாந்த் நீல், ’"கே.ஜி.எஃப் 2'’ வெற்றி கொடுத்த உற்சாகத்தோடு "சலார்' படத்தில் முழுக்கவனம் செலுத்த ஆரம்பித் துள்ளார். இப்படத்திற்கான படப்பிடிப்பு இதுவரை 30 சதவிகிதம் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிலையில், ’"சலார்'’ படத்தின் அப்டேட் கேட்டு பிரபாஸ் ரசிகர் ஒருவர் இயக்குநர் பிரசாந்த் நீலுக்கு எழுதியுள்ள கடிதம் படக்குழுவினரை அதிரவைத்துள்ளது.
பெயர் குறிப்பிடாமல் ரசிகர் ஒருவர் எழுதியுள்ள அக்கடிதத்தில், "சலார்'’ படத்தின் க்ளிம்ப்ஸ் தொடர்பான அப்டேட் விரைவில் வெளியாகும் என்று பிரசாந்த் நீல் தெரிவித் திருந்தார். அவர் கூறி ஒரு மாதங்களைக் கடந்துவிட்ட போதிலும், அது தொடர்பான எந்த அப்டேட்டும் வரவில்லை. பிரபாஸின் முந்தைய படங்களான "சாஹோ', "ராதே ஷ்யாம்' படங்களின்போதும் இதேதான் நடந்ததால் அவரது ரசிகர்கள் ஏற்கனவே ஏமாற்றத்தில் உள்ளோம். இந்தப் படத்தில் அதுபோன்று நடக் காது என்று நம்புகிறோம். இந்த மாதத்திற்குள் படத்தின் க்ளிம்ப்ஸ் வெளியிடப்படவில்லை என்றால் நிச்சயம் நான் தற்கொலை செய்து கொள்வேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, "ராதே ஷ்யாம்'’படத்தின் தோல்வியால் பிரபாஸின் ரசிகர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதால் இந்தக் கடிதத்தை படக்குழு சீரியஸாக எடுத்துக்கொண்டுள்ளதாம்.
உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டின் கான் நகரில் ஆண்டுதோறும் நடை பெறுவது வழக்கம். பதினோரு நாள் தொடர்ந்து நடைபெறும் இந்த விழா வில் உலகின் பல்வேறு மொழிகளில் உள்ள ஆவணப்படம், திரைப்படம், குறும்படம் திரையிடப்படும். அந்தவகையில் இந்தாண் டிற்கான 75-ஆவது "கேன்ஸ் திரைப்பட விழா' வில், மாதவன் நடித்து இயக்கியுள்ள "ராக்கெட்ரி -நம்பி விளைவு', பார்த்திபன் இயக்கி நடித்துள்ள ’"இரவின் நிழல்', ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கியுள்ள "லீ மாஸ்க்'’(குறும்படம்) ஆகியவை இந்த விழாவில் திரையிடப் பட்டன.
அத்தோடு, பா.ரஞ்சித்தின் அடுத்த படமான "வேட்டுவம்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளி யிடப்பட்டது.
-இரா.சிவா