cinekoothu

ஹிட் ஜோடி!

ஒரே நேரத்தில் தமிழ், இந்தி என டாப் கியரில் செல்லும் ஏ.ஆர்.முருகதாஸ் தமிழில் சிவகார்த்திகேயனின் "எஸ்.கே.23'’படத்தையும், இந்தியில் சல்மான்கானின் "சிக்கந்தர்'’ படத்தையும் இயக்கிவருகிறார். சென்னையில் ‘"எஸ்.கே.23'’ படத்தின் படப்பிடிப்பை நடத்திவரும் முருகதாஸ், கிடைக்கிற கேப்பில் எல்லாம் மும்பை பறந்து சென்று "சிக்கந்தர்'’படத்தின் வேலைகளையும் கவனித்துவருகிறார். ‘"சிக்கந்தர்'’ படம் அடுத்தாண்டு ரம்ஜானுக்கு வெளியாகவுள்ளதால், படத்தின் வேலைகளை மின்னல் வேகத்தில் செய்துவருகிறார்.

Advertisment

பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுவரும் இப்படத்தில் இரு நாயகி என்பதால் ஏற்கனவே ரஷ்மிகா மந்தனா புக் செய்யப்பட்ட நிலையில். மற்றுமொரு ஹீரோயினை படக்குழு தேடி வந்தது. முக்கியத்துவம் வாய்ந்த ரோல் என்பதால் இந்தி ரசிகர்களிடையே பரிட்சயமான முகமாக இருந்தால் சிறப்பாக இருக்கும் என முருகதாஸ் திட்டமிட, சல்மான்கான் தரப்பிலிருந்தே கரீனாகபூரை ஒப்பந்தம் செய்யலாமே என யோசனை கொடுக்கப்பட... தற்போது கரீனாகபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கரீனாகபூரும் சல்மான்கானும் இணைந்து "பாடிகார்ட்', "தபாங் 2'’உள்ளிட்ட பல ஹிட் படங்களைக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment

அஜித் உறுதி!

"துணிவு'க்கு பிறகு ‘விடாமுயற்சியுடன் அடுத்தடுத்த படங்களை அஜித்குமார் கமிட் செய்து வருகிறார். மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துவரும் "விடாமுயற்சி'’படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் உள்ளிட்ட வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு வருகிறது. படப்பிடிப்பு தொடங்கியதற்கு முன்பும் சரி, பின்பும் சரி ஏகப்பட்ட சோதனைகளைச் சந்தித்து 90 சதவீத படப்பிடிப்பை முடித்துள்ளது படக்குழு. ஆனால் மீண்டும் "விடாமுயற்சி'’ படப்பிடிப்பு நிறுத்தப்பட, தன்னுடைய அடுத்த படமான "குட் பேட் அக்லி' படத்தில் நடிக்க கிளம்பிவிட்டார் அஜீத்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இப்படத்தின் முதல் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் படுஜோராக நடந்தநிலையில்... படக்குழு அடுத்ததாக ஜப்பானுக்குப் பறக்கவிருக்கிறது. இடைப்பட்ட காலத்தில் அஜித் ‘"விடாமுயற்சி'’ படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளார். அதேசமயம் தனது அடுத்தப்படத்திற்கான கதை கேட்கும் பணியைத் தொடங்கியிருக்கும் அஜித், இயக்குநர் வினோத்தை தொடர்புகொண்டு "சேர்ந்து அடுத்தப்படம் பண்ணுவோம்' என்று உறுதியளித்திருக்கிறார். இதனிடையே புதிய படம் பண்ணுவதற்கு இயக்குநர் சங்கர் மற்றும் அஜித் தரப்பில் பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

பாலையாவுக்கு டிக்!

ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் 700 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த நிலையில் அதன் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. "வேட்டையன்'’படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினி, லோகேஷ் கனகராஜின் ‘"கூலி'’ படத்தில் நடித்துவருகிறார். "ஜெயிலர்'’ படத்தை போல இந்த படத்திலும், பிறமொழியில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்களை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தையும் நடத்திவருகிறார் நெல்சன். அந்தவகையில் பாலகிருஷ்ணாவை "டிக்' செய்து வைத்திருக்கிறார். டோலிவுட்டில் பிரபலமாக இருக்கும் பாலகிருஷ்ணாவை நடிக்க வைத்தால் தெலுங்கில் படம் வெற்றி பெறுவதோடு, பெரும் வசூலையும் வாரிக்குவிக்கலாம் என்பதே தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸின் திட்டமாம்.

சம்யுக்தா நம்பிக்கை!

மலையாளத்தில் "தீ வண்டி', "கடுவா'’போன்ற படங்களின் மூலம் பிரபலமான சம்யுக்தா, தமிழில் தனுஷ் நடிப்பில் ‘"வாத்தி'’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சம்யுக்தா மேனன் என்ற தனது பெயரில் இருக்கும் சாதி பெயரான மேனனை நீக்கிவிட்டு அழைத்தால் போதும் என்று பலரையும் ஆச்சரியப்படுத்திய சம்யுக்தா, திரையுலகில் திரைமறைவில் நடிகைகளுக்கு நடக்கும் அசௌகரியமான விஷயங்களைப் பேசி அதிரவும் வைத்திருக்கிறார். நல்ல கதை மூலம் மக்களைச் சென்றடைந்தால் நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்கலாம் எனக் கருதி, இயக்குநர்களிடம் கதை கேட்டு, சிலருக்கு மட்டும் டிக் செய்தும் வருகிறார். தெலுங்கு இயக்குநர் சரண் தேஜ் இயக்கும் இந்தி படம் மூலம் இந்தி திரையுலகில் கால்பதிக்கும் சம்யுக்தா, இந்தப் படத்திற்குப் பிறகு பாலிவுட்டில் அடுத்தடுத்த வாய்ப்புகள் தேடி வரும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறாராம்.