முதல் லுக்!

தமிழ் திரையுலகில் "ஆனந்தம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லிங்குசாமி. அடுத்தடுத்து இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் கமர்ஷியலாக வெற்றிபெற்றதை அடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். இவரது இயக்கத்தில் கடந்த 2018-ல் "சண்டகோழி 2' படம் வெளியாகி வெற்றி பெற்றது. இதனையடுத்து, லிங்குசாமியின் அடுத்த படம் குறித்த எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாமல் இருந்துவந்தது.

இந்த நிலையில்... பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனது அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு ரசிகர் களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள் ளார் லிங்குசாமி. முன்னணி தெலுங்கு நடிகரான ராம் பொத்தினேனி நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் இப்படத்திற்கு "தி வாரியர்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. "உப்பெண்ணா' தெலுங்கு படத்தில் அறிமுகமாகி தமிழக இளைஞர்களிடையே பிரபலமான க்ரித்தி ஷெட்டி இப்படத்தின் மூலம் நேரடியாக தமிழிலும் அறிமுகமாக உள்ளார். இவர்களைத் தவிர ஆதி, அக்ஷரா கவுடா உள்ளிட்டோரும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். தேவிஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக் கிறார்.

Advertisment

cc

லீலை!

வெங்கட் பிரபு இயக்கத்தில் "மாநாடு' திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, இயக்குநர் வெங்கட் பிரபுவின் அடுத்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது. வெங்கட் பிரபு, அடுத்ததாக கன்னட நடிகர் கிச்சா சுதீப்பை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்த தகவல்கள் ஏதும் உறுதிப்படுத்தப்படாத சூழலில், தனது அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அண்மையில் வெளியிட்டார் வெங்கட் பிரபு. ‘"மன்மத லீலை'’ என்று பெயரிடப்பட் டுள்ள இந்த புதிய படத்தில் அசோக்செல் வன் நாயகனாக நடித்துள் ளார். சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் என மூன்று பேர் இப்படத்தில் நாயகிகளாக நடிக்கின்றனர்.

1980-களில் கே.பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான "சின்ன வீடு'’படத்தின் பாணியில் இப்படம் உருவாகி யுள்ளதாம். திருமணத் துக்கு பிந்தைய காதலைச் சுற்றி நடக்கும் கதையை மையமாகக் கொண்ட ஜாலியான படமாக உருவாகியுள்ள இப்படம், ஒரு இளைஞனின் வாழ்க்கையில் வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் இரண்டு முக்கிய சம்பவங்களைப் பற்றிய கதையாம். ‘"மாநாடு'‘ படத்திற்கான பணி கள் செய்துகொண்டிருந்தபோதே இந்தப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு கிட்டத்தட்ட முடித்துவிட்டாராம். இதனால் இந்த படம் விரைவில் திரை யரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு பிரேம்ஜி இசை யமைத்துள்ளார்.

கமல் + சிவகார்த்திகேயன்!

தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கமல் ஹாசன் இயக்கி நடித்து பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் "தலைவன் இருக்கின்றான்'. இப்படத்தின் முன் தயாரிப்பு வேலைகள் நடந்து வரும் நிலையில்... "விக்ரம் 2' மற்றும் "இந்தியன் 2' படத்தில் நடித்து வரு கிறார் கமல்ஹாசன். இந்நிலையில், ராஜ்கமல் ஃபிலிம்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்க உள்ள புதிய படம் ஒன்றில் ஹீரோ வாக நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகியுள்ளார்.

கௌதம் கார்த்திக் நடித்த "ரங்கூன்' படத்தை இயக்கிய ராஜ் குமார் பெரியசாமி இயக்கவுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கவுள்ளார். சிவகார்த்திகேயனின் படங்களி லேயே இதுவரை இல்லாத அளவாக அதிக பட்ஜெட்டில் இப்படம் தயாராக உள்ளதாம். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான "டாக்டர்' படம் தமிழகத்தை தாண்டி மற்ற தென்னிந்திய மாநிலங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றதால், இந்த புதிய படத்தையும் மற்ற தென்னிந்திய மொழிகளில் வெளியிடும் திட்டத்தில் உள்ளதாம் தயாரிப்பு தரப்பு.

மார்ச்சில் வலிமை!

இயக்குநர் எச்.வினோத் இயக் கத்தில் நடிகர் அஜித், ஹுமா குரேஷி உள்ளிட்டோர் நடித்துள்ள "வலிமை' படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்த தகவல் ஒன்று கோலிவுட் வட்டாரத்தில் பரவி வருகிறது. அஜித் - எச்.வினோத் -போனி கபூர் கூட்டணியில் வெளியான "நேர்கொண்ட பார்வை' படத்தின் வெற்றிக்கு பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்ததால் "வலிமை' படத்தின் மீதான எதிர்பார்ப்பு தொடக்கம் முதலே எக்கச்சக்கமாக இருந்தது.

ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படத்தின் பணிகளில் தாமதம் ஏற்பட, நீண்ட இழுபறிக்கு பின்னர் "வலிமை' படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து பொங்கல் ரிலீசுக்குத் தயாரானது. இந்நிலையில் கரோனா 3-ஆம் அலை காரணமாக கடைசி நேரத்தில் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், ‘"வலிமை'’ வரும் மார்ச் மாதம் வெளியாகவுள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் ‘"பீஸ்ட்'’ படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாவதால் ‘"வலிமை'’ படத்தை அதற்கு முன்பாகவே மார்ச் மாதத்தில் ரிலீஸ் செய்துவிடலாம் என திட்ட மிட்டிருக்கிறதாம் படக்குழு. இந்நிலையில், விஜய்யின் பீஸ்ட் பட ஃபர்ஸ்ட் சிங்கிளை அடுத்த வாரத்தில் வெளியிடலாம் என திட்டமிட்டுள்ளதாம் அப்படக்குழு.

-எம்.கே.