தில்ராஜு தயாரிப்பில், வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் "வாரிசு'. தமிழில் வாரிசு, தெலுங்கில் "வாரசுடு' என்ற பெயரில் பொங்கலுக்கு வெளியாகவுள்ள இப்படத்திற்கு புதிய சிக்கல் ஒன்று வந்துள்ளது. தமிழ் ரசிகர்களைப் போன்று, தெலுங்கு ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்திற்கு தயாரிப்பாளர் தில்ராஜு, அதிக திரையரங்குகளை ஒதுக்குமாறு திரையரங்கு உரிமையாளர்களிடம் கேட்டிருக்கிறாராம். ஆனால் அவர்களோ, தில்ராஜு கூறியதை வைத்தே, அவரின் வாயை அடைத்துள்ளனர்.
கடந்த 2019-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு "பேட்ட' படம் வெளியானபோது, பொங்கல் மற்றும் விஜயதசமி ஆகிய பண்டி கைகளில், நேரடி தெலுங்கு திரைப்படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கவேண்டும் என தில்ராஜு தலைமையில் தீர்மானம் போட்டிருக் கிறார்களாம். தற்போது அதனையே சுட்டிக்காட்டி தில்ராஜுவின் ஆசைக்கு முட்டுக்கட்டை போடுகிறார் களாம் திரையரங்கு உரிமையாளர்கள். "நான் போட்ட கண்டிஷன் என் படத்துக்கே இப்படி எதிராயிடுச்சே' என அப்செட்டில் இருக்கிறாராம் தில்ராஜு.
அதே சமயம் "அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவுள்ள "துணிவு' படத்திற்கு இதே நிலைமைதான்' என்கிறார்கள் சினிமா விமர்சகர்கள். ஆனால் "தில்ராஜு எப்படியாவது பேசி, அவர்களை சமாதானப்படுத்தி அதிக திரையரங்குகளில் படத்தை வெளியிட்டுவிடுவார்' என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.
நான்ஸ்டாப் நயன்தாரா!
விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்ட நயன்தாரா, தான் ஒப்பந்தம் செய்து வைத்துள்ள படங்களில் மட்டும் நடித்துமுடித்துவிட்டு தயாரிப்பு மற்றும் சொந்த தொழில்களில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகியிருக்கும் லேட்டஸ்ட் தகவலின்படி நயன்தாரா மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளாராம். அதற்காக பலரிடம் கதையை கேட்ட நயன்தாராவுக்கு, தயாரிப்பாளர் சஷிகாந்த் கூறிய கதை மிகவும் பிடித்துள்ளதாம். இப்படத்தை சஷிகாந்தே இயக்கவும் உள்ளாராம். இந்த படத்தில் மாதவன் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பதாகவும், சித்தார்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்ககளில் பேசப்பட்டு வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
"ஆர்.ஆர்.ஆர்.-2' ரெடி!
ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் "ஆர்.ஆர்.ஆர்'. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாகுமா? என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பிவந்த னர்.
இந்நிலையில் இப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த குட்நியூஸ் ஒன்றை வெளியிட்டிருக்கிறார் ராஜமௌலி. ஜப்பானில் நடைபெற்ற ப்ரோமோஷன் விழாவில் பேசிய அவர், "ஆர்.ஆர்.ஆர். படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. இதற்கான கதை எழுதும் பணியில் எனது தந்தையும் கதாசிரியருமான விஜயேந்திர பிரசாத் ஈடுபட்டு வருகிறார்'' என்று அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மகேஷ்பாபுவின் படத்தை முடித்துவிட்டு "ஆர்.ஆர்.ஆர்' இரண்டாம் பாகத்துக்கான பணியில் ஈடுபடுவார் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடிப்புக்கு பிரேக்!
இந்தி திரையுலகில் யூனிக்கான படங்களை கொடுத்துவரும் ஆமீர்கான், "லால் சிங் சத்தா' பட தோல்வியால் சற்று அப்செட்டில் இருக்கிறாராம். இப்படம் தோல்விக்கு "பாய்காட்' கலாச்சாரம் காரணம் என பரவலாக பேசப்பட்டு வருகிறது. இருப்பினும் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தனது அடுத்த பட வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வரு கிறாராம் ஆமீர்கான்.
இந்நிலையில் தனது அடுத்த பட அறிவிப்பை அறிவித்த ஆமீர்கான், கூடவே ஒரு அதிர்ச்சி தகவலையும் கொடுத்துள்ளார். அடுத்ததாக ‘சாம்பியன்ஸ்’ என்ற தலைப்பில் ஒரு படத்தை தயாரிப்பதாக தெரிவித்த ஆமீர்கான், நடிப்பிலிருந்து சிறிது காலம் விலக முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். குடும்பத் துடனும், குழந்தைகளுடனும் இருக்க ஆசைப்படுவ தாகவும், இந்த இடைவெளியில் படங்களைத் தொடர்ந்து தயாரிப்பதாகவும் ஆமீர்கான் கூறியுள்ளார். மேலும், தனது 35 ஆண்டுகால நடிப்பு வாழ்க்கையில் இப்போது தான் முதல் தடவை இப்படி முடிவெடுத் துள்ளதாகவும், ஒரு நடிகராக இல்லாமல் இருப்பது எப்படி இருக்கும் என்ற ஆர்வத்துடன் வருகிற ஆண்டை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் ஆமீர்கான் சொல்லியுள்ளார். ஆமீர்கான் படங்கள் நடிக்காவிட்டாலும், திரைத்துறையில் அவர் பயணிப்பது அவரது ரசிகர்களுக்கு ஆறுத லாக இருக்கும் என் கின்றனர் பாலிவுட் வட்டாரங்கள்.
-கவிதாசன் ஜெ.