நயனுக்கு ஜாக்பாட்!

nayantharA

Advertisment

திருமணத்திற்கு பிறகு நயன்தாரா நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்தியில் ஷாருக்கானுடன் நடித்த "ஜவான்' மட்டும் வசூ-ல் வேட்டையாடியது. தமிழில் தொடர்ந்து தோல்விப் படங்கள் கொடுத்திருந்தாலும் அவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்து குவிகிறது. இப்போது கைவசம் தமிழில் சசிகாந்த் இயக்கும் "டெஸ்ட்', யூடியூப்பர் டியூடு விக்கி இயக்கும் "மண்ணாங்கட்டி' உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் இன்னும் பெயரிடாத ஒரு படம், மோகன்ராஜா இயக்கும் "தனி ஒருவன் 2' உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இப்போது மலையாளத்தில் நிவின்பா- நடிக்கும் ‘"டியர் ஸ்டூடண்ஸ்'’ என்ற படத்தில் நடித்துவருகிறார். அதோடு யாஷ் நடிக்கும் "டாக்சிக்', மம்மூட்டி #கௌதம் மேனன் இணையும் மலையாளப் படம், பிரபல கர்நாடக பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு ஆகிய படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அஜித்துக்கு ஜோடியாக ஆதிக்ரவிச்சந்திரன் இயக்கும் ‘"குட் பேட் அக்லி'’ படம், கவின் நடிப்பில் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் முக்கிய கதாபாத்திரம் என இரண்டு புதிய படங்களிலும் நடிக்கிறார்.

வெப் சீரிஸில் வேதிகா!

தமிழில் "முனி', "காளை', "பரதேசி' என ரசிகர்களைக் கவர்ந்த வேதிகா, மற்ற மொழி படங்களில் பிஸியாக இருக்கிறார். இருப்பினும் தமிழில் "பேட்ட ராப்', "வினோதன்', "ஜங்கிள்' உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார். தமிழில் அவர் நடிப்பில் படங்கள் வெளியாகி 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ளது. கடைசியாக "காஞ்சனா 3' படத்தில் நடித்திருந்தார். இப்போது "யாக்ஷினி' என்ற வெப் சீரிஸில் லீட் ரோ-ல் இரண்டு கெட்டப்பில் நடித்துள்ளார். அதில் ஒரு கெட்டப் ரசிகர்களை மிரட்டுமாம். இந்த சீரிஸ், தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 7 மொழிகளில் வெளியாகவுள்ளது.

மோகன்ராஜா இயக்கத்தில் அஜித்!

JHANVI

Advertisment

இயக்குநர் மோகன்ராஜா தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியை வைத்து ‘"காட்ஃபாதர்'’ என்ற தலைப்பில் ஒரு படமெடுத்தார். மோகன்லால் நடித்த "லூசிஃபர்' படத்தின் தெலுங்கு ரீமெக்கான இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால் சிரஞ்சீவிக்கும் #மோகன் ராஜாவுக்கும் மனக்கசப்பாம். ஆனாலும் மோகன்ராஜாவின் ஒர்க் சிரஞ்சீவிக்கும் பிடித்துப் போக, மீண்டும் மோகன்ராஜாவை அழைத்துள்ளார். சிரஞ்சீவி நடிக்கும் படத்தை மோகன்ராஜா இயக்குகிறார். கதை ஏற்கனவே சிரஞ்சீவியின் படங்களுக்கு எழுதிய பி.வி.எஸ். ரவி எழுதுகிறார். இதனிடையே சமீபத்தில் அஜித்தை சந்தித்து மோகன்ராஜா கதை கூற... அஜித்தும் பச்சைக் கொடி காட்ட... அஜித்தின் 64வது படமாக இந்தப் படம் உருவாகிறது.

நாயகிகள் மாற்றம்!

கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் "தக் லைஃப்' படத்தில் சிம்பு தற்போது நடித்து வருகிறார். படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்துவருகிறது. இந்தப் படத்திற்கு முன்பாக கமல் தயாரிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க கமிட்டானார் சிம்பு. படத்திற்காக வெளிநாடு சென்று சிறப்பு பயிற்சியும் மேற்கொண்டார். படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. வரலாற்றுப் பின்னணியில் ஆக்ஷன் நிறைந்த படமாக உருவாகும் இப்படத்தில் சிம்பு இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். சிம்புவுக்கு ஜோடி பா-வுட் நடிகை தீபிகா படுகோனே, கீர்த்தி சுரேஷ் என தகவல்கள் வெளியான நிலையில், லேட்டஸ்ட்டாக பாலிவுட் நடிகைகள் ஜான்வி கபூர் மற்றும் கியாரா அத்வானியின் பெயர்கள் அடிபடுகிறது.