வருகிறது ‘எமர்ஜென்சி!’

அவசரநிலை காலகட்டத்தை பின்னணியாக வைத்து தானே நடித்து, தயாரித்து, இயக்கி தனது "எமர்ஜென்சி' படத்தை வெளிக்கொண்டுவரத் திட்டமிட்டிருந்தார் கங்கணா. அதில் பல காட்சிகள் சர்ச்சைக்குரியதாக இருப்பதால், தணிக்கைக் குழு படத்திற்கு அனுமதி வழங்க தாமதம் செய்துவந்தது. இந்நிலையில் நீதிமன்றத்தை அணுகினார் கங்கணா. தணிக்கைச் சான்றிதழ் தருவதிலுள்ள பிரச்சனையை குழு தெரிவித்த நிலையில்... சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கச் சம்மதித்திருக்கிறார் கங்கணா. "எமர்ஜென்சி'னு படத்துக்கு பேர் வெச்சாலும் ஆர்டினரியாதான் அனுமதி தர்றாங்க!

கமல் ஹேப்பி!

கமல் -மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் தக் லைஃப், போஸ்ட் புரடெக்ஷன் பணிகளில் இருக்கிறது. பணிகள் மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில் கமல் ஏ.ஐ. தொழில்நுட்பம் படிப்பதற்காக அமெரிக்கா சென்றுவிட்டார். அதற்கு முன்பாக தக் லைஃப் படத்தை எடிட் செய்தவரை போட்டுக் காண்பிக்கச் சொல்லி மணிரத்னத்திடம் கேட்க, மணி ரத்னமும் படத்தைப் போட்டுக் காண்பிக்க, கமல் ரொம்ப ஹேப்பி யாகிவிட்டார். அதனால் மணிரத் னத்திடம் மீண்டும் இணைந்து ஒரு படம் பண்ணலாம் என சொல்லியுள்ளார். ஏற்கனவே கமல் அன்பறிவ், பா.ரஞ்சித், மகேஷ் நாராயணன் உள்ளிட்ட இயக்குநர்களுடன் ஒரு படம் பண்ண ஓ.கே. சொல்லியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

cc

இனியா எதிர்பார்ப்பு!

Advertisment

"வாகை சூட வா' மூலம் கவனம் ஈர்த்த இனியா, தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்தும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற முடியவில்லை. அதனால் கதை தேர்வில் கூடுதல் கவனத்துடன் இருந்த அவர், அதை பூர்த்திசெய்யும் வகையில் தற்போது நடித்துள்ள ‘"சீரன்'’ படம் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் 20 வயது பெண், இரண்டு குழந்தைகளின் அம்மா, அப்புறம் 56 வயதுப் பெண் என, மூன்று கெட்டப்புகளில் நடித்துள்ளதாக தெரிவித்த இனியா, இந்த முயற்சி ரசிகர்களை கவரும் என்று நம்புகிறார்.

அனுஷ்கா நம்பிக்கை!

ஒரு காலத்தில் கோலிவுட், டோலிவுட் என ஒரு ரவுண்டு வந்த அனுஷ்கா, பின் நடிப்பிலிருந்து சற்று விலகியிருந்தார். கடந்த ஆண்டு மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதுவும் போதுமான அளவு அவரை பிரபலப்படுத்தாததால் புது முயற்சிகளை எடுக்க முடிவெடுத்தார். அதில் ஒன்றாக முதல் முறையாக மலையாள படங்களில் நடிக்க கமிட்டானார். இந்த நிலையில் அடுத்த முயற்சியாக அவர் லீட் ரோலில் நடித்த எதாவது ஒரு படத்தை இரண்டாம் பாகம் எடுக்க ஆசைப்பட... சமீபத்தில் பாகமதி இயக்கு நர் அனுஷ்காவை சந்தித்து பேசியுள்ளார். அதன்படி பாகமதி 2-ஐ உருவாக்க முடிவெடுத் துள்ளனர். இந்தப் படத்தில் அனுஷ்கா, முதல் பாகத்தை விட பவர்ஃபுல்லான கதாபாத்தி ரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மஞ்சு பொருத்தம்!

விஜய்யின் 69வது படத்தை வினோத் இயக்கவுள்ள நிலையில், முழுநேர அரசியலில் ஈடுபடுவதற்கு முன் விஜய்யின் கடைசி படமாக இந்தப் படம் இருப்பதால் முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது. இதன் ஆரம்பகட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவரும் வினோத், நடிகர், நடிகைகளின் தேர்வில் பிஸியாக வுள்ளார். கதாநாயகியாக பூஜாஹெக்டே, வில்லனாக பாபி தியோல் என அடுத்தடுத்து பிரபலங்களை கமிட் செய்துள்ளார். இந்த வரிசையில் தற்போது மஞ்சு வாரியரையும் அவர் கமிட் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் மஞ்சு வாரியர் பொருத்தமாக இருப்பதாக எண்ணி இயக்குநர் வினோத் அவரை கமிட் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

-கவிதாசன் ஜெ.