திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி விழா முக்கியமானது. ஜனவரி 10ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கி ஜனவரி 19ஆம் தேதி வரை நடைபெறும். ஏகாதசி யன்று ஏழுமலையான் கோவில் சொர்க்கவாசல் திறக்கப்படும். 10 நாட்கள் சொர்க்கவாசல் திறந்திருக்கும். சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் கோவிலுக்குள் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்ய 10, 11, 12ஆம் தேதிக்கான இலவச டிக்கட் ஜனவரி 9ஆம் தேதி விடியற்காலை 5 மணிக்கு வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்திருந்தது.

tt

இதற்காக திருப்பதியில் விஷ்ணுநிவாசம், பைராகிப்பட்டேடா, ராமச்சந்திரா புஷ்கரிணி என 8 இடத்திலும், திருமலையில் ஒரு இடத்திலும் டிக்கட் கௌண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் விஷ்ணுநிவாசம் ஸ்ரீவாரி வைகுண்ட துவார டிக்கட் வழங்கும் இடத்தில் 8ஆம் தேதி மதியம் 1 மணிக்கே பக்தர்கள் வரிசையில் நிற்கத் துவங்கினர். நேரமாக... நேரமாக பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கத் துவங்கியது. அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் விழ... கீழே விழுந்தவர்களை மிதித்துக்கொண்டு பக்தர்கள் சென்றதால் அந்த இடமே ஒரே கூச்சலும் அலறலுமாக இருந்தது. இதில் சேலத்தை சேர்ந்த மல்லிகா உட்பட 6 பேர் இறந்தனர்.

இறந்தவர்கள் குடும்பத்தினர் மற்றும் சிகிச் சையில் உள்ள பக்தர்களை சந்திக்க முடிவுசெய் துள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பாதுகாப்பு குளறுபடிக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

"இதுவும் கண்துடைப்பாகத்தான் முடியும்' என்கிறார்கள் ஏழுமலையான் பக்தர்கள். "திருப்பதி திருமலை தேவஸ்தானம் கடந்த பல வருடங்களாகவே பக்தர்கள் பாதுகாப்பு, நலன் விவகாரத்தில் அக்கறை செலுத்துவதில்லை. பக்தர் களிடமிருந்து எப்படியெல்லாம் பணம் சம்பாதிக்க லாம் என்பதிலேயே குறியாக இருக்கிறது. சுவாமி தரிசனம் செய்ய 300 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை டிக்கட் விற்பனை செய்கிறது. இலவச தரிசன பாதையில் நெருக்கடியை குறைக்க உருவாக்கப்பட்ட 300 ரூபாய் தரிசனத்தை அதிகப்படுத்தி, இலவச தரிசனத்தில் அனுமதிப்பவர் களின் எண்ணிக்கையை குறைத்துவிட்டது. சொர்க்கவாசல் திறப்பு விழாவுக்கான டிக்கட் வாங்கிவிடவேண்டும் என பக்தர்கள் முண்டி யடித்தனர். 8 இடங்களில் கௌண்டர்கள் திறக்கத் தெரிந்த அதிகாரிகளுக்கு, பாதுகாப்பை பலப்படுத்தவேண்டும் என்கிற எண்ணம் ஏன் வரவில்லை. 10க்கும் குறைவான போலீஸாரே அங்கே பாதுகாப்பு பணிகளில் ஈடுப்பட்டனர்' என குற்றம்சாட்டுகின்றனர் பக்தர்கள்.