"அ.தி.மு.க. அமைச்சர்கள் யாரும் இத்தேர்தலில் வெற்றிபெறக் கூடாது. முழு வேகத்துடன் திட்டமிட்டு வேலை செய்யுங்கள்' -இது உடன்பிறப்புகளுக்கு தி.மு.க. தலைமையின் கண்டிப்பான உத்தரவு. அதனால், திருமங்கலத்தில் பணத்தை வாரி யிறைக்க ஆரம்பித்திருக்கிறார் அ.தி.மு.க. வேட்பாளர் உதயகுமார்.

ad

தி.மு.க. சார்பில் புறநகர் மாவட்டச் செயலாளரும் மண்ணின் மைந்தனுமான சேடபட்டி முத்தையா மகன் மணிமாறன் கிராமம், கிராமமாகப் பம்பரமாகச் சுற்றி உதயசூரியனுக்காக ஓட்டு வேட்டையாடிக்கொண்டிருக்கிறார். அமைச்சரின் பலம் என்ன என்பது தி.மு.க.வுக்கும் தெரியும்.

கடந்தமுறை உதயகுமார் காங்கிரஸ் கட்சியின் ஆர்.ஜெயராமை 23590 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்தாலும் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றவில்லை என்பதுவே பெரும்பாலான மக்கள் கருத்தாக உள்ளது.

Advertisment

தி.மு.க. வேட்பாளர் மணிமாறனைவிட உதயகுமாரின் கழுத்தைச் சுற்றி இறுக்கும் கயிறாக பெருங்குடைச்சலாக மருதுசேனைத் தலைவரும் அ.ம.மு.க. வேட்பாளர் ஆதிநாராயணன் இருக்கிறார் என்பது பலரிடமும் எதிரொலிக்க... நாம் ஆதிநாரயணனைச் mmசந்தித்தபோது, ""அவர் உதய குமார் அல்ல! ஊழல்குமார் சார்'' என்கிறார். ""ஊழல் உதயகுமாரைத் தோற்கடிப்பது தி.மு.க. வேட்பாளர் மணிமாறனுக்கு தேர்தல் வெற்றியாக இருக்கலாம். எனக்கு ‘அது வெறி சார்''’என்றார். ""பக்கா வில்லன் சார் அந்த உதயகுமார். சொந்தப் பணத்தில் ரேஷன் கார்டுக்கு ரெண்டு சென்ட் நிலம்னு சரடுவிடுறார். அரசு கல்லூரி, குடிதண்ணீர், சேமிப்புக் கிடங்கு, மேம்பாலம், சாலை வசதி, பேருந்துநிலையம், செண்ட் தொழிற் சாலை, பாதாளச் சாக்கடைனு தேர்தல் வாக்குறுதில எதுவுமே செய்யாதவர். சொந்தக் கட்சிக்காரங்களையே பூத் கமிட்டி விவகாரத்தில் சாதியைச் சொல்லித் திட்டி மனசு உடைஞ்சு தீக்குளிக்க வைக்கிற விஷச்செடி சார் அந்த உதயகுமார். விஷச்செடியை புடுங்கி எறியாம விடமாட்டோம்''’ என்றார். அ.ம.மு.க. ஆதிநாராயணன் வாங்கும் வாக்குகள் உதயகுமாரின் வீழ்ச்சி மற்றும் தி.மு.க. மணிமாறனின் வெற்றியாகவே சொல்கிறார்கள்.

பொதுமக்களிடம் உதயகுமார் பற்றி விசாரித்தபோது, ""அமைச்சரின் ஆதரவாளர் மகள் காதல் விவகாரத்தில் கொலையாளிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டு, மற்றவர்களைப் பல வழக்குகளில் சிக்கவைத்து இரு சமூக ஒற்றுமையை சீர்குலைத்தார்'' என்று கூறுகிறார்கள்.

hh

Advertisment

திருமங்கலத்தில் மொத்த வாக்காளர்கள் 2,68,939 பேர். முக்குலத்தோர் 32%, நாயுடு, ரெட்டியார் 15%, ஆதிதிராவிடர் 28%, பிள்ளைமார் 5%, முஸ்லிம்கள் 5%. இதில் உதயகுமாரின் மறவர் சமூகமும், ஆதிநாராயணனின் அகமுடையார் சமூக மும் சரிக்குசரியாக... சீட் கிடைக்காத ஓ.பி.எஸ். ஆதரவாளர்களும் உதயகுமாருக்கு எதிராகவே.

திருமங்கலம் ஃபார்முலா என்பது இந்திய அளவில் பெயர் பெற்றது. தி.மு.க.வின் அந்த ஃபார்முலாவை இந்தமுறை அ.தி.மு.க. அமைச்சர் நம்பியிருக்கிறார். அதை மட்டுமே நம்பியிருக்கிறார்.