ssதேர்தல் தகிப்பேறிக் கிடக்கும் தென்காசி, தி.மு.க.வின் சிட்டிங் தொகுதியாகும். இந்தமுறை தி.மு.க. கூட்டணியில் இது காங்கிரஸுக்கு ஒதுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஆரம்பத்தில் அவர்கள் தரப்பில் இருந்தது. ஆனால் இங்கு தி.மு.க.வே இந்த முறையும் களம் காண்கிறது. சூரியத் தரப்பின் வேட்பாளராக ராணி ஸ்ரீகுமார் நிறுத்தப் பட்டிருக்கிறார்.

சங்கரன்கோவிலைப் பூர்வீகமாகக் கொண்ட ராணி, அரசு மருத்துவமனையில் மயக்கவியல் மருத்துவராக பணிபுரிகிறார். எனவே மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவராகவும் மதிப்பு பெற்றவராகவும் இருக்கிறார்.

இங்கு அ.தி.மு.க. கூட்டணியில் ’புதிய தமிழகம்’ டாக்டர் கிருஷ்ணசாமி களமிறங்கியிருக்கிறார். இதே தென்காசி எம்.பி. தொகுதியைக் குறிவைத்து பலமுறை அவர் களம் கண்டாலும் வெற்றி வாய்ப்பை எட்டிப் பிடிக்கவில்லை. எனவே இந்த முறையாவது வெற்றிக் கனியைக் கேட்ச் பண்ணிவிடலாம் என்ற நம்பிக்கையில் ஓடிக்கொண்டு இருக்கிறார் கிருஷ்ணசாமி.

பா.ஜ.க. கூட்டணியில், பா.ஜ.க.வே களமிறங்கவேண்டும் என்று பல்வேறு முயற்சிகள் நடந்தன. ஆனால், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவரான ஜான் பாண்டியன் இந்தத் தொகுதியை வாங்கி, ரேஸில் ஓடத் தொடங்கிவிட்டார். பா.ஜ.க.வின் முந்தைய பங்காளியான அ.தி.மு.க. இங்கே போட்டியிடுவதால், முந்தைய தேர்தலில் இவர்கள் இணைந்து வாங்கிய வாக்குகள் தற்போது இரு கூறுகளாகச் சிதறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

Advertisment

ss

எனினும் ஜான் பாண்டியன் நம்பிக்கையோடு வாக்காளர்களிடம் சென்று, "எனக்கு இந்த முறை வாய்ப்பு தாருங்கள். குற்றாலத்தை டூரிஸ்ட் சென்டராக்குகிறேன். புளியங்குடிப் பகுதியில் எலுமிச்சை பதனிடும் மையம் அமைத்துத் தருகிறேன்'' என்றெல்லாம் பிரச்சாரம் செய்துவருகிறார்.

தி.மு.க. தரப்போ, மகளிர் உரிமைத் திட்டம் உள் ளிட்ட தனது ஆட்சி சாதனை களையே பலமாகக் கருதுகிறது. அதே சமயம் தி.மு.க.வின் வடக்கு, தெற்கு மா.செ.க்களான எம்.எல்.ஏ. ராஜாவும், ஜெயபால னும், கட்சி நிர்வாகிகளை யும், சீனியர் களையும் ஒருங்கிணைத் துப் பரப் புரையில் ஈடு படுத்தவில்லை என்றும், தொண்டர் களை அரவணைத்துச் செல்ல வில்லை என்றும் கட்சியினர் மத்தியிலேயே ஆதங்கங்கள் மிகுந்திருக்கின்றன. இதற்கிடையே பூத் கமிட்டிக்கான கரன்ஸிப் பாசனம் பாய்ந்திருப்பதால் இந்தத் தரப்பில் தற்போது உற்சாகத்தைக் காணமுடிகிறது.

Advertisment

வாசுதேவநல்லூர், புளியங்குடி, சிவகிரி ஆகிய மலைப் பகுதியை ஒட்டிய விவசாய நிலங்களில் வனவிலங்குகளால் ஏற்பட்டுவரும் பாதிப்புகளை, அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை என்கிறார்கள் பலரும். எனவே, இந்த நெருக்கடியில் இருந்து தங்களை ஆளும் கட்சியான தி.மு.க.தான் விடுவிக்கவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு, அந்த விவசாயிகள் மத்தியில் இருக்கிறது.

பரபரப்பாக முண்டியடிக்கும் இந்த வேட் பாளர்களில் வெற்றிக் கனியைப் பறிக்கப்போவது யார்? என்கிற எதிர்பார்ப்பு பலமாகவே இருக்கிறது.

-பி.சிவன்

படங்கள் : ப.இராம்குமார்