கைக்கடையில் வைத்து பிடிபட்டவனின் பெயர் கோத்தி திம்மா... தண்டுபாளையா கொள் ளைக்கூட்டத்தில் ஒருவன் என்பதும் தெரிந்தது. கொடூரமாகக் கழுத்தறுத்துக் கொல்லும் பாணியில் தான் அவன் ஒரு கோயில் சிலையையும் முருக வேலையும் கொள்ளையடித்தான் என்பது தெரியவந்தது. அவன் உட்பட கேங்க்கை சேர்ந்த 13 பேரை கைது செய்து 80 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரித்ததில், பணத்துக்காகப் பல கொடூரக் கொலைகளைச் செய்திருப்பதும், கிட்டத்தட்ட 300 பேருக்கு மேல் இதே பாணியில் கழுத்தறுத்துக் கொல்லப்பட்டதும் தெரிந்து அதிர்ச்சியாகியிருக்கிறார் கர்நாடக முன்னாள் காவல்துறை டி.எஸ்.பி. ஜலபதி.

ss

இந்த தண்டுபாளையா கேங், சில கொலைகளை தமிழக, ஆந்திரப் பகுதிகளில் செய்ததும் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட 13 பேரில் 12 பேர் மீது 300க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை, வன்புணர்வு வழக்குகள் நிரூபணமாகி, அவர்களில் 12 பேருக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது. கைதானவர்களிடமிருந்து 27 கிலோ தங்கம், பெருமளவு பணம் கைப்பற்றப் பட்டது. இந்த கோத்திதிம்மாவுக்கு அப்போது 17 வயது என்பதால் தண்டனையிலிருந்து தப்பி விட்டான்.

தற்போது இந்த கேங்கில், கோத்தி திம்மா மற்றும் கோட்ட சீனா ஆகிய இரண்டு பேர்தான் தங்களுக்குக்கீழ் 40 பேர்வரை வைத்து தொடர் கொலை, கொள்ளை, வன்புணர்வுகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ள, அந்த 12 பேரும் இதுவரை தண்டனை நிறைவேற்றப் படாமல் இழுபறியாக இருப்பதால், சிறைச் சாலையில் அட்டகாசம் செய்கிறார்களாம். கர்நாடக மாநில பரப்பன அக்ரஹார சிறையையே ஆட்டிப்படைத்து வருகிறார்களாம். சிறையிலிருந்தபடியே வெளியேயுள்ள அவர்களின் டீம் மூலமாக கூலிப்படைக் கொலைகளிலும் ஈடுபட்டு வருகிறார்களாம்.

இவர்கள் கொலை செய்யும்போது, கொடூரமாக கழுத்தை அறுத்தும், கட்டுக் கம்பியால் கை கால்களை கட்டி கொலை செய்வது இவர்களின் வழக்கமாக உள்ளது, சமீபத்தில் ஒரு எம்.எல்.ஏ., ஒரு போலீஸ்காரர் மற்றும் ஒரு பில்டிங் காண்ட்ராக்டரை இதே பாணியில் கொலை செய்த வழக்கு கர்நாடகாவில் பெரிய பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் திருச்சியில் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலையே இதே பாணியில்தான் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

aa

Advertisment

இந்த தண்டுபாளையா கேங்குகளில் ஒவ்வொரு கேங் கிலும் 10 முதல் 15 பேர்வரை இருப்பார்கள். இவர்களில் பெண்கள், சிறுவர்களும் இருப்பார்கள். பார்ப்பதற்கு ஒரு கூட்டுக்குடும்பம் போலவே, பிழைப்பு தேடி வந்தவர்கள் போலவே இருப் பார்கள். இதுதான் எளிதில் மக்கள் இவர்களிடம் நம்பி ஏமாறுவதன் கார ணமே. ஆள் நடமாட்ட மில்லாத ரயில் நிலையப் பகுதிகளில் கூடாரத்தை அமைத்துக்கொண்டு பொம்மைகள், வளையல், ஃபேன்சி ஐட்டங்களை விற்பதுபோன்ற சாக்கில் வீடுகளை நோட்டமிட்டு கொலை, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவார்கள்.

கொடூர பாணி கொலைகள்

தனியாக வீட்டில் இருப்பவர்களைக் குறிவைத்து வீடு புகுந்து கொல்லும்போது ஓரிருவர் மடக்கிப்பிடித்துக்கொள்ள, கழுத்தறுத்துக் கொல்லும்போதே மற்றவர்கள் அந்த வீட்டில் கொள்ளையடிப்பார்கள். அனைத்துமே மின்னல் வேகத்தில் நடந்துமுடியும். கொல்லப்படுபவர் பெண்ணாக இருந்தால், அடிபட்டு உயிருக்குப் போராடிய நிலையிலிருக்கும் பெண்ணை வன்புணர்வு செய்துவிட்டு, அவர்களிடம் இருந்து தாலி செயின், கம்மல், மோதிரம், கால் கொலுசு போன்ற எந்த நகையாக இருந்தாலும், கொள்ளையடித்து விட்டு, பின்னர் கத்தியால் கழுத்தை மிக ஆழமாக அறுப்பார்கள், அந்த சமயத்திலும் அந்த கேங் பெண்கள் கை,கால்களை இறுக்கமாகப் பிடித்துக்கொள்வார்கள். கொல்லப்படுபவரின் தொண்டையிலிருந்து எழும்பும் அலறலை அந்த கேங் சுற்றியமர்ந்து ரசிக்கும். கழுத்திலிருந்து வழியும் ரத்தத்தை ஆனந்தமாக முகர்ந்து மகிழ்வார்கள். இதுபோன்ற சைக்கோத் தனம் தான் தண்டு பாளையா கேங்கின் உச்சகட்டக் கொடூ ரமே! பின்னர் அவ்வீட்டிலுள்ள வாஷ்பேஷினில் ரத்தம் படிந்த கைத்தியைக் கழுவுவார்கள்.

ரத்தகறை படர்ந்த அவர்களின் ஆடை யைக் கழட்டிவிட்டு,அந்த வீட்டிலிருக்கும் ஆடையை அணிந்துகொண்டு, கழற்றிய ஆடையை வெளியே கொண்டு சென்று எரித்துச் சாம்ப லாக்கிவிடுவார்கள்.

இப்படித்தான் கொடூரமான கொலையையும் தடயமில்லாமல் அழித்துவிடுவார்கள். ஆனால் அவர்கள் ஒரே பாணியில் செய்யும் கொலைகள் தான் அவர்களைப் பிடிப்பதற்கு ஒரு க்ளூவாக, வாய்ப்பாக அமைந்தது.

வாழ்க்கை முறை

கொலை, கொள்ளையை முடித்தபின்னர், வேறொரு பகுதியில் ஷிப்டாகிவிடுவார்கள். இவர்களின் உணவுக்கு பன்றியை வேட்டையாடி, பன்றியின் கழுத்தை அறுத்துச் சமைத்து, சாராயத்துடன் அந்த பன்றிக்கறியைப் பகிர்ந்து சாப்பிட்டு கொண்டாட்டம் போடுவார்கள். இதில் ஆண்களும், பெண்களும் சமம்! இந்த கொடூர கொலைகாரக் கும்பல், வார நாட்களில் மட்டுமே கொலைச் சம்பவத்தை அரங்கேற்றும். ஞாயிற்றுக் கிழமையில் வீட்டில் ஆட்கள் இருப்பார்கள் என்பதால் அப்போது சம்பவத்தில் ஈடுபட மாட்டார்கள். நாய்கள் இருந்தால் அந்த வீட்டில் கொள்ளையடிக்க மாட்டார்கள். பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை சம்பவத்தில் ஈடுபடுவார்கள். கடந்த கொரோனா காலத்தில் அமைதியாக இருந்த இந்த டீம், மீண்டும் ஆக்டிவ் ஆகியுள்ளது.

முன்னாள் கர்நாடக போலீஸ் டி.எஸ்.பி. ஜலபதி இவர்களைக் கண்டுபிடிப்பதில் பெரும்பங்காற்றியவர் என்பதால் கொலைமிரட்டல்கள் வந்திருக்கின்றன. ""நான் 2013-ல் பணி ஓய்வு பெற்றேன். இன்றுவரை எனக்கு கொலை மிரட்டல் இருந்துவருவதால், நான் தலைமறைவாகவே வாழ்ந்து வருகிறேன்'' எனக்கூறியது தமிழக ஸ்பெஷல் டீமை வெலவெலக்க வைத்தது.

தற்போது கர்நாடகாவில் பெங்களூரு சுற்று வட்டாரத் திலும், தமிழகப் பகுதியான ஓசூர் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர் போன்ற பகுதிகளிலும் நடை பெறும் பெரும்பான்மையான கொலைகளுக்கு கூலிப் படையாகக் செயல்படுவது இவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ss

இதுகுறித்த வழக்கு தொடர்பாக நம்மிடம் பேசிய முன்னாள் வடக்கு மண்டல ஐ.ஜி. பொன்நாகராஜ், ""இந்த வழக்கு விசாரணைக்காக ஏ.டி.எஸ்.பி. பழனிகுமார், இன்ஸ் பெக்டர் ரத்தினகுமார் தலைமையிலான போலீஸ் ஸ்பெஷல் டீமுக்கு முழுச் சுதந்திரம் அளித்தேன். நான் சேலம் சரக டி.ஐ.ஜியாக இருந்தபோது, இந்த வழக்கை விசாரிக்கையில், தமிழகத்தில் பல்வேறு பகுதியில் 2016க்குப்பின் நூற்றுக்கும் மேற்பட்ட கொலைகளை தண்டுபாளையா கேங் அரங்கேற்றியது தெரியவந்தது. இப்போதுவரை அந்த கேங் இதுபோன்ற கொலை, கொள்ளைகளை அரங்கேற்றிவருவது தொடர்கிறது.

சமீபத்தில் 27-5-2023ஆம் தேதி கரூரிலும், 3-7-2023ஆம் தேதி துறையூர் திருச்சியிலும், அடுத்து மாமல்லபுரத்தில் இரண்டு கொலை, கொள்ளைச் சம்பவங்களையும் அரங்கேற்றியுள்ளது. சமீபத்தில் குன்றத்தூரையடுத்த தரைப்பாக்கம் பகுதியில் நடந்த கொலையையும் இந்த டீம் செய்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

தண்டுபாளையா கேங்கின் கொலைகள் குறித்த வழக்கை விசாரித்த தமிழக ஸ்பெஷல் டீமைச் சேர்ந்த பலரும் பணிஓய்வு பெற்றுவிட்டார்கள். எனவே ஒரு புதிய டீம் உருவாக்கி, இந்த வழக்குகளை மீண்டும் விசாரிக்க வேண்டும். அப்போதுதான் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்'' என்றார்.

கொடூர கொள்ளையர்களின் ஒட்டுமொத்த கேங்கையும் பிடித்தால்தான் தென்னிந்திய மக்கள் நிம்மதியடைவார்கள்!

Advertisment