விழுப்புரம் மாவட்டத்திலுள்ளது கண்டாச்சிபுரம் தாலுகா. திருக்கோவி லூர் தாலுகாவிலிருந்த கண்டாச்சிபுரத்தை புதிய தாலுகா தலை நகரமாக எட்டாண்டு களுக்கு முன் அறிவித்தனர். இப்போதுவரை இங்கே வட்டாட்சியர் அலுவலகம் மட்டுமே செயல்படுகிறது. மற்றபடி, உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை, கூட்டுறவுத்துறை, நீதிமன்றங்கள், சிறைத்துறை, தீயணைப்புத்துறை, பொதுப்பணித்துறை, மகளிர் காவல் நிலையம், அரசு மருத்துவமனை என ஒரு தாலுகா தலைநகரத்தில் இடம்பெறவேண்டிய எந்த அரசு அலுவலகமும் இங்கே தொடங்கப்படவில்லை.

kk

இந்த தாலுகாவைச் சேர்ந்த பொதுமக்கள், இந்த அலுவலகங்களுக்காக திருக்கோவிலூர் நோக்கி செல்லவேண்டிய நிலை இன்னும் தொடர்கிறது. இதுகுறித்து கண்டாச்சிபுரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் கணபதி நம்மிடம், "தாலுகா தலைநகரம் துவக்கப்பட்டு எட்டு ஆண்டுகள் ஆகிறது. இந்த எட்டு ஆண்டுகளுக்குள் ஒரு வட்டாட்சியர் அலுவலகம் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டது. அதன்பிறகு எந்தவொரு அரசு அலுவலகமும் இங்கே கட்டப்படவில்லை. இதற்காக பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறோம். அதிகாரிகளோ, கண்டாச்சிபுரம் பகுதியில் அரசு அலுவலகங்கள் கட்டுவதற்கு போதிய இட வசதி இல்லை என்ற காரணத்தை கூறுகிறார்கள். ஒரு தாலுகா தலைநகரம் உருவாக்கும்போது அங்கே அரசு அலுவலகங்கள் அமைவதற்கு தேவையான இட வசதி உள்ளதா, அப்படி இல்லை யென்றால் அதற்கு மாற்று வழி என்ன என்பதையெல்லாம் ஆய்வு செய்த பிறகுதான் புதிய தாலுகாவை உருவாக்க வேண்டும். தாலுகா உருவாக்கப்பட்ட பிறகு, அரசு அலுவலகங்கள் கட்டப் போதிய இட வசதி இல்லை என்று அதிகாரிகள் கூறும் காரணத்தை எப்படி ஏற்றுக்கொள்வது?. எனவே புதிய அரசு அலுவலகங்கள் கட்டி முடிக்கும்வரை வாடகை கட்டடத்திலாவது அரசு அலுவலகங்கள் தொடங்கப்பட வேண்டும். போதிய இடம் இல்லாவிட்டால் தனியாரிட முள்ள இடத்தை வாங்கி அனைத்து அரசு அலுவலகங்களையும் கட்ட வேண்டும். அரசு இதற்கான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும்'' என்கிறார்.

"மக்களின் நிர்வாக வசதிக்காக மாவட்டங்களை, கோட்டங்களை, வட்டங்களைப் பிரிக்கின்ற அரசு, அதற்கான கட்டடங்களைக் கட்டி, அலுவலகங்களைத் திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு செயல்பட வைப்பதுதான் நடைமுறை. ஆனால் ஒரு தாலுகா தலைநகரம் உருவாகி எட்டு ஆண்டுகளாக அந்த தலைநகரத் தில் அமையவேண்டிய முக்கிய அரசு அலுவல கங்கள் துவக்கப்படாமலேயே இருப்பதால், அந்த தாலுகா தொடங்கப்பட்டதன் பலனை அப்பகுதி பொதுமக்களால் அனுபவிக்க முடியாமல் இன்ன மும் ஒவ்வொரு வேலைக்கும் அலைந்தபாடாக இருக்கிறது. எனவே அவர்களின் சிக்கலைத் தீர்க்க அரசு கட்டடங்களை அங்கே அமைப் பதற்கான நடவடிக்கையில் ஈடுபடவேண்டும்' என்று கோரிக்கை வைக்கிறார்கள். அரசு கவனிக்குமா?

Advertisment