ம்பை ஏ.எஸ்.பி. பற்களைப் பிடுங்கிய கொடூரச் செயல் காரணமாக மாவட்ட எஸ்.பி. அம்பை உட்கோட் டத்தின் மூன்று காவல் ஆய்வாளர்கள், இரண்டு எஸ்.ஐ.க்கள், மூன்று காவலர்கள், உளவுப் பிரிவு இன்ஸ்பெக்டர் அதன் எஸ்.ஐ. என 11 காவல் அதிகாரிகள் அதிரடியாய் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மனிதாபிமானமற்ற வகையில் பற்களைப் பிடுங்கிய விவகாரத்தில் ஏ.எஸ்.பி. பல்வீர்சிங்கிற்கு எல்லாமு மாகச் செயல்பட்டவர்கள் அவரின் தனிப்படையினராம். கையில் வேலா யுதம் வைத்துக்கொண்டிருக்கும் கடவுளின் மறுபெயர் கொண்ட எஸ்.ஐ.யின் தலைமையில் 14 பேர் களடங்கிய தனிப்படை ஒன்று நெட் ஒர்க்குடன் செயல்பட்டுள்ளதாம். அவரை இன்னமும் கைவைக்கவில்லை. ஏ.எஸ்.பி. நடத்திய கட்டிங் பிளேயர் ஆபரே ஷனில் முன்னின்றவர் கள் இந்த டீம் என்கிறார்கள் கடைநிலைப் பணியிலுள்ள காவ லர்கள்.

ssp

Advertisment

சி.சி.டி.வி. உடைப்பு சம்பவத்தில் ஜமீன்சிங்கம்பட்டியைச் சேர்ந்த சூர்யாவை ஸ்டேஷனுக்கு கொண்டு வந்ததே இந்த தனிப்படைதான். 4 பேர் சூர்யாவைத் திமிரவிடாமல் பிடித் துக்கொள்ள, ஏ.எஸ்.பி. கட்டிங் பிளேயரால் பற்களைப் பிடுங்கி யுள்ளாராம். ஸ்டேஷ னில் நடந்தவைகளை வெளியே சொல்லக் கூடாது என மிரட் டிய அந்த எஸ்.ஐ. அவரிடமிருந்து சி.சி.டி.வி. உடைப்பிற்காக 45 ஆயிரம் பணம் கறந்தபிறகே அனுப்பினாராம்.

மற்ற காவல் நிலையங்களைவிட கல்லிடைக்குறிச்சி ஸ்டேஷனில் மட்டும் உறுப்பு டேமேஜ் அதிகம் நடந்துள்ளதாம். இப்படி பற்கள் பிடுங்கப் பட்டவர்களில் எவரும் ரவுடி களோ, கிரிமினல்களோ, நொட்டோரியஸ்களோ கிடையாது. அப்பா விகள். சாதாரண பெட்டிசன் என்கொயரிக்கு உள்ளானவர்களாம். ஸ்டேஷனுக்கு அழைத்துவரப்பட்டு கட்டிங் பிளேயர் ஆபரேஷனுக்குப் பின்னர் காயத் துடன் ரத்தப் போக்கு ஏற்படவே, அவர்கள் மீது கேஸ் போடாமல் வெளியே அனுப்பினால் தொடர் புடைய காவல் அதிகாரிகள் மாட்டிக் கொள்வார்கள். தவிர, இவர்களை ஏதாவது ஒரு புட்அப் கேஸில் ரிமாண்ட் செய்து ஜெயிலுக்கு அனுப்பினால், உள்ளே போவதற்கு முன் ஜெயில் கண்காணிப்பாளர் தங்களிடம் ஒப்படைக்கப்படும் கைதிகளின் அங்க அடையாளங்களை ரெக்கார்டு செய்வதுடன், அவர்களின் உடலில் ரத்தக் காயமிருப்பின் அதையும் நோட் செய்யும்போது, அதற்கான காரணத்தைக் கேட்க நேரிடும். அப்போது காவல் நிலையத்தில் தனக்கு நடந்ததைத் தெரிவித்தால் மாட்டிக்கொள்வோம் என்பதால் ரிமாண்ட் முறையைத் தவிர்த்து டேலண்டாக அவர்களை 110 பிரிவில் வருவாய் கோட்டாட்சியரின் ரெஃபரன்ஸுக்கு அனுப்பியிருக்கிறார் கள். இந்த வழிகளில் பற்கள் பிடுங்கப்பட்ட அனைவரையும் ரிமாண்ட்டுக்கு அனுப்பாமல், 110 பிரிவில் வெளியே அனுப்பி தாங்கள் மாட்டிக்கொள்ளாமல் பார்த்துக் கொண்டார்களாம்.

ஆனாலும் சம்பவம் வெளியாகி, சப்-கலெக்டரின் விசாரணைக்கு உத்தரவானபோது, புகார் கொடுத்தவர் கள், பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டவர்களை அதட்டியும், மிரட்டியும், பணத்தால், வாயை அடைத்து விசாரணையில் பிறழும்படியான வாக்குமூலம் தரும்படி இந்த டீம் செய்திருக் கிறதாம். விசாரணையின்போது டீமைச் சேர்ந்த காவலர்களே சூர்யாவை பாதுகாப்புடன் அழைத்துக்கொண்டு வந்து சார்ஆட்சியர் முன் ஆஜர்படுத்த, அவரும் போலீசாரின் மிரட்ட லின்படிதான், தவறி கீழே விழுந்ததில் பற்கள் உடைபட்டதாக தெரிவித்திருக்கிறாராம்.

Advertisment

இப்படி பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் ஏ.எஸ்.பி. பல்வீர்சிங்கிற்கு ஆதரவாகச் செயல்பட்டிருக்கிறது தனிப்படை. அம்பை, வி.கே.புரம், கல்லிடைக்குறிச்சி மூன்று காவல் நிலையங்களுக்கும் சென்ற சார்-ஆட்சியர் முகம்மது சபீர் ஆலம், ssகடந்த மார்ச் 10, 11, 12 ஆகிய மூன்று நாட்களின் சி.சி.டி.வி. புட்டேஜ்களை ஒப்படைக் கும்படி கேட்க, அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளோ, அந்த மூன்று தினங்களிலும் சி.சி.டி.வி. வேலை செய்யவில்லை என்று மூன்று காவல் நிலையத்திலும் ஒரே மாதிரி யாகத் தெரிவித்துள்ளனராம். இந்த சி.சி.டி.வி. காட்சிகள் இருந்தால் நீங்கள் அனைவரும் மாட்டிக்கொள்வீர்கள் என்று அம்பை பகுதியின் அடுத்த ஏரியாவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் சொல்ல, அதன்பிறகே சி.சி.டி.வி. காட்சிகள் அழிக்கப்பட்டுள்ளன.

இந்தச் சூழலில் அம்பை நகரின் வழக் கறிஞர்களின் பார் அசோசியேஷன், பல் பிடுங்கப்பட்ட கொடூர சம்பவத்தில் கண்டனம் தெரிவித்ததுடன், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணை கமிட்டி அமைக்கப்படவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பியுள்ளதாகக் கூறுகிறார் அதன் தலைவரான கந்தசாமி.

இந்தச் சூழலில் பற்கள் பிடுங்கப்பட்ட சம்பவத்தின் விசாரணை அதி காரியாக அரசால் நியமிக்கப்பட்ட அமுதா ஐ.ஏ.எஸ்., மாவட்டக் கலெக்டரான கார்த்திகேயனிடம் சம்பவங்கள் குறித்து கேட்டறிந்தார், தொடர்ந்து சார் ஆட்சியர் முகம்மது சபீர் ஆலம் தனது விசாரணை அறிக்கையை அவரிடம் கொடுத்ததுடன், அதுதொடர்பான விளக்கத்தையும் அளித்திருக்கிறார். அதன்பிறகு விசாரணை அதிகாரி அமுதா, அம்பாசமுத்திரம் தாலுகா அலுவலகம் வந்து, காலை 10 மணி முதல் மாலை 5.02 வரை காத்திருந்தும் பாதிக்கப்பட்டவர்களின் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை.

இந்த விவகாரத்தில் மாற்றம்செய்யப் பட்ட போலீஸ் அதிகாரிகள், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டவர்கள் உள் ளிட்டவர்களிடமும் விசாரணை நடத்துவதுடன், இதுவரையிலும் வெளியே தெரியாத வகையிலிருந்த ஏ.எஸ்.பி. பல்வீர்சிங்கின் தனிப்படையினரையும் விசாரிக்கத் திட்டமிட்டுள்ள விசாரணை அதிகாரி அமுதா ஐ.ஏ.எஸ். அவர்களின் பெயர்ப் பட்டியலையும் சேகரித்து வருகிறாராம்.

அரண்டுபோய்க் கிடக்கிறது அம்பை சப்-டிவிசன்.