பாலிவுட் ஈரம்!
ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா இயக்குநராக அவதாரம் எடுக்கிறார். அவர் அறிமுக மான "ஈரம்' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க வுள்ளார். ஆனால் தமிழில் இல்லை. இந்தியில் எடுக் கத் திட்டமிட்டு வேலைகள் படு மும்முரமாக நடை பெற்று வருகிறது. ஹீரோயின் கதாபாத்திரம் முக்கி யம் என்பதால் வலுவான நடிகையை தேடிக்கொண்டி ருந்தார். அவரது தேடுதல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. பாலிவுட் நடிகை ஜான்வி கபூரை கமிட் செய்துள்ளார். படப்பிடிப்பு இன்னும் சில மாதங்களில் தொடங்கவுள்ளது. தமிழில் "ஈரம்' படத்தை அறிவழகன் இயக்கிய நிலையில், அதில் சிந்து மேனன் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் 15 வருடங்கள் கழித்து உருவாவது குறிப்பிடத்தக்கது.
விடாது அரண்மனை!
பேய் கதாபாத்திரத்துக்கு கவர்ச்சி சேர்த்து தனது ஸ்டைலில் ரசிகர்களுக்கு விருந்து வைத்தவர் சுந்தர்.சி. அது வரவேற்பைப் பெற்றதால் "அரண்மனை' பார்ட் 1ல் தொடங்கி 2, 3, 4 என தொடர்ந்தார். அனைத்து பாகங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதோடு கடைசியாக வெளியான நான்காவது பாகம் யாரும் எதிர் பாராதவிதமாக ரூ.100 கோடி கிளப்பில் இணைந்தது. இதனால் அரண்மனை படத்தின் ஐந்தா வது பாகத்தை தொடங்கிவிட் டார் சுந்தர்.சி. படப்பிடிப்பிற்காக சென்னையில் பிரம்மாண்ட அரண்மனை செட் போடப்பட்டு வருகிறது. நவம்பர் முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பாகத்தில் முந்தைய பாகத்தைவிட பயமுறுத் தும் காட்சிகளும் கவர்ச்சியான காட்சிகளும் கூடுதலாக வைக்க சுந்தர்.சி திட்டமிட்டுள்ளார்.
ஜி.டி.நாயுடு வர்றார்!
இஸ்ரோவில் பணியாற்றிய வான்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணின் வாழ்க்கையை படமாக்கிய மாதவன், அந்தப் படத்துக்காக முதல் முறையாக தேசிய விருதையும் வென்றிருந்தார். இதையடுத்து அதேபோல் ‘"இந்தியாவின் எடிசன்'’ என்று அழைக்கப்படும் ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை கதையை படமாக்க நினைத்தார் மாதவன். கடந்த ஆண்டு அதற்கான அறிவிப்பும் வந்தது. ஆனால் சில காரணங்களால் இந்தப் படம் டேக் ஆஃப் ஆகவில்லை. மாதவனும் அடுத்தடுத்து வேறு படங் களில் நடித்து வந்தார். இந்த நிலையில் தற்போது ஜி.டி.நாயுடு பயோ-பிக்கை தொடங்கவுள்ளார். ப்ரீ புரொடக்ஷன் பணிகளை சமீபத்தில் தொடங்கியுள் ளார். விறுவிறுப்பாக பணிகள் நடை பெற்று வருகிறது. "ராக்கெட்ரி' படம் போலவே இந்தப் படத்தையும் தமிழ் மற்றும் இந்தியில் படமாக்கி மற்ற மொழிகளில் டப் செய்து பான் இந்தியா படமாக வெளியிடத் திட்டமிட்டுள்ளார். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படப்பிடிப்பைத் தொடங்கி, ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படத்தை வெளியிடும் பிளானில் உள்ளார். நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.
எப்போ என்ட்ரி!
"சீதா ராமம்' படம் மூலம் பிரபலமான மிருணாள் தாக்கூர், டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வந்தாலும் கோலிவுட்டுக்கு அவரை அழைத்துவர தொடர் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. முதலில் சூர்யாவின் "கங்குவா' படத்தில் அவர் இணைய வுள்ளதாகவும் இதன்மூலம் கோலிவுட்டுக்கு என்ட்ரி கொடுக்கவுள்ள தாகவும் தகவல் வெளியானது. பின்பு சிவகார்த்திகேயன் -ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளதாகவும், பின்பு விஜய்யின் கடைசி படமான ‘"தளபதி 69'’ படத் தில் நடிக்கப் போவதாகவும் பேச்சுகள் எழுந்தது. ஆனால் இது எதுவுமே நடக்கவில்லை. இப்போது மீண்டும் முதலில் வந்தது போலவே சூர்யா நடிக்கும் ‘"சூர்யா 45'’ படத்தில் மிருணாள் தாக்கூர் பெயர் அடிபடுகி றது. இது உண்மையாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தன்ஷிகா நம்பிக்கை!
"பேராண்மை' படம் மூலம் கவனம் ஈர்த்த தன்ஷிகா, தமிழ் படங் கள் அல்லாது மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். பல படங்களில் நடித்து வந்தாலும் அவருக்கு ஹிட் கொடுக்கும்படி எந்தப் படமும் அமையவில்லை. இதனால் தற்போது வெப் சீரிஸில் கவனம் செலுத் தத் தொடங்கிவிட்டார். ‘"ஐந்தாம் வேதம்'’ என்ற வெப் தொடரில் முதன் மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த சீரிஸ் தனக்கு கைகொடுக்கும் என நம்புகிறார். தன்ஷிகா, தமிழில் கடைசியாக 2021ஆம் ஆண்டு வெளி யான "லாபம்' படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘"ஐந்தாம் வேதம்'’ தொடரில் நடித்துள்ளார்.
-கவிதாசன் ஜெ.