ராஷ்மிகா உத்தரவாதம்!
ராஷ்மிகா மந்தனா தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் -சல்மான் கான் கூட்டணியின் சிக்கந்தர், தனுஷ் - சேகர் கம்முலா உள்ளிட்ட சில படங்களை கைவசம் வைத்துள்ளர். இதில் மும்முரமாக நடித்து வந்த அவர் சமீபத்தில் ஜிம்மில் காயம் ஏற்பட்டதால் ரெஸ்டில் இருக்கிறார். ஒரு மாதம் ஓய்விலிருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அவர் நடித்து வந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் ரிலீஸீல் பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால் தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி அவர் நடித்து வரும் படங்களில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் இன்னும் சில வாரங்களே ஷூட்டிங் இருக்கிறது. அதனால் ரிலீஸுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதோடு முடிந்தளவு சீக்கிரம் வந்து முடித்துக் கொடுக்க வுள்ளதாக ராஷ்மிகா மந்தனா உத்தரவாதம் கொடுத்துள்ளதால் எந்த பாதிப்பும் இல்லை என்கின்றனர்.
ஐஸ்வர்யா ஷாக்!
தமிழில் செலக்டிவான கதை களை தேர்ந்தெடுத்து நடித்துவரும் ஐஸ்வர்யா லட்சுமி கைவசம் கமலின் "தக்- லைஃப்,' சூரியின் "மாமன்' ஆகிய படங்கள் உள்ளன. இதையடுத்து எந்த தமிழ் படங்களையும் கமிட் செய்யாமல் இருந்த அவர், தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் "வாடிவாசல்' படத்தில் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார். படத்தின் கதாபாத்திரம் குறித்து வெற்றிமாறனிடம் விரிவாக கேட்டபோது, வெற்றிமாறன் ஒரு கண்டிஷன் போட்டுள்ளார். படத்தின் படப்பிடிப்பு நீண்ட காலம் பிளான் செய்துள்ளதால் அதற்கேற்றவாறு ஒரு ஒருவருடம் கால்ஷீட் தேவைப்படும் எனக் கேட்டுள்ளார். மேலும் இப்படம் முடியும்வரை வேறு எந்த படத்திலும் கமிட்டாகக்கூடாது எனவும் கூறியுள்ளார். இதைக்கேட்ட ஐஸ்வர்யா லட்சுமி கொஞ்சம் ஷாக்காகி படம் பெரிய படம், ப்ளஸ் தனது கதாபாத்திரம் வலுவாக இருப்பதால் வெற்றிமாறனுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளார்.
மோகன்லால் ஓ.கே!
சிம்புவின் "வாலு', விக்ரமின் "ஸ்கெட்ச்', விஜய்சேதுபதி யின் "சங்கத்தமிழன்' ஆகிய படங்களை இயக்கியவர் விஜய் சந்தர். இதையடுத்து ஹன்சிகா நடித்த "கார்டியன்' படத்தை தயாரித்திருந்தார். இதனால் வேறு ஒரு ஹீரோவுடன் படம் இயக்க முயற்சிசெய்த அவர் தற்போது ஒரு பெரிய ஹீரோவை எடுக்க கமிட்டாகியுள்ளார். மலையாள முன்னணி நடிகர் மோகன் லாலை இயக்கும் ஜாக்பாட் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. சமீபத்தில் மோகன்லாலை சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு அமைய, அதை சரியாகப் பயன்படுத்திக்கொண்டு தனது அடுத்த படத்தின் ஒன்லைனை கூறியுள்ளார். அதைக் கேட்ட மோகன்லால், நன்றாக இருப்பதாக கூறி முழு திரைக் கதை முடித்தவுடன் மீண்டும் வந்து சந்திக்குமாறு சொல்லியுள்ளார். அதனால் தற்போது மும்முரமாக திரைக்கதை எழுதும் பணியில் இறங்கியிருக்கிறார் விஜய் சந்தர். மேலும் இந்தப் படத்தை தமிழ் மற்றும் மலையாளத்தில் படமாக்கி பல்வேறு மொழிகளில் வெளியிடும் ப்ளானிலும் இருக்கிறார்.
நிதான பிரபு!
ஆரம்பத்தில் வேகமாக படம் நடித்து வந்த விக்ரம் பிரபு தனது வேகத்தை குறைத்துக் கொண்டார். சமீபகாலமாக அவர் நடித்த படங்கள் எதிர்பார்த்த அளவு போகவில்லை. அதோடு அனுபவ இயக்குநர்களாக இருந்தாலும் அறிமுக இயக்குநர்களாக இருந்தாலும் கதை தனக்கு பொருத்தமாக இருக்கிறதா? தனது கதாபாத்திரம் எந்தளவிற்கு முக்கியத்துவ முள்ளதாக இருக்கிறதா என்பதை ஆராய்ந்து அதன் பிறகே ஓ.கே. சொல்வ தால் இந்த தாமதம் ஏற்படுகிறது என்கின்ற னர். சமீபகாலமாக அவர் நடித்த படங்கள் சரியாக போகாததால் இந்த முடிவு எனச் சொல்கின்றனர். இந்தச்சூழலில் அவர் நிதானமாக தனது கண்டிஷனுக்கு ஏற்ற வாறு ஒரு கதையை தேர்ந்தெடுத்துள்ளார். இந்த கதையை ‘"நோட்டா'’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய சண்முகபிரியன் எழுதியுள்ளார்.
-கவிதாசன் ஜெ.