தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவி களுக்கு உயர் தொழில்நுட்ப ஆய்வகம் வாயிலாக நடைபெற்ற வினாடி வினா போட்டிகளில், சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளை ஐக்கிய அரபு நாடுகளுக்கு அழைத்தச் செல்லத் திட்டமிடப்பட்டது. அதன்படி கடந்த 2020-2021ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட மாணவ -மாணவிகளை, கொரோனா பரவல் காரணமாக அப்போது அழைத்துச் செல்ல முடியாமல் போனதால், கடந்த 10-ஆம் தேதி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில், இணை இயக்குனர் அமுதவல்லி உள்ளிட்ட அதிகாரிகள், 5 ஆசிரியர்கள், 34 மாணவர்கள், 33 மாணவிகள் என மொத்தம் 75 பேர், திருச்சி விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் துபாய் கிளம்பிச் சென்றனர்.
துபாய் சென்றடைந்த அவர்கள், சார்ஜா வில் நடைபெற்ற சர்வதேச புத்தகக் கண் காட்சியில் கலந்து கொண்டனர். அப்போது, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துபாய் ஷேக்முகமது பின் ராஸிக் நூலகத்திற்கு வழங்கிய 1000 நூல்களை, பள்ளிக் கல்வித்துறை அமைச் சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையி லான மாணவர்கள் குழுவினர், நூலகத்தின் இயக்கு னர் டாக்டர். முஹம்மத்பின் சாலிம் அல் மஸ்ருயிடம் ஒப்படைத்தனர். இந்நிகழ்வில், மிர்சா ஹுசைன் அல்சை அல்சாயிக், ஈசா அப்துல்லா அல்குரேர், தி.மு.க. அமைப்பாளர் எஸ்.எஸ்.மீரான், நிகழ்ச்சி ஒருங் கிணைப்பாளர் ஜவேரியா, ரஷீத் நூலக மேலாளர் அப்துல்சமத் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
சுற்றுலா சென்ற மாணவர்கள், ஐக்கிய அரபு அமீரகம், அபுதாபியில் அமைந்துள்ள புகழ்பெற்ற லூவ்வர் அபுதாபி அருங்காட்சியகத்தை பார்வை யிட்டனர். பின்னர், துபாய் இந்திய தூதரகத்தின் அழைப்பை ஏற்று, மாணவர்களை தூதரகத்திற்கு அழைத்துச்சென்றனர். அங்கே, விமானப் பயணத்தின் அனுபவங்களை மாணவர்கள் பகிர்ந்துகொண்டார் கள். மூன்று நாட்கள் சுற்றுப்பயணங்களை முடித்து விட்டு, கடந்த 14ஆம் தேதி நள்ளிரவு 2.25க்கு, சார்ஜாவில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் மாணவர்கள் தாயகம் திரும்பினார்கள். சுமார் 1 மணி நேர சோதனைகளுக்கு பிறகு, 4 மணியளவில் விமான நிலையத்தில் இருந்து மாணவர்கள் அவரவர் ஊர்களுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
விமானத்தில் பறப்பது என்பது கிராமப்புறக் குழந்தைகளுக்கு இன்றுவரை எட்டாத கனவாக இருக் கும் நிலையில், அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விமானம் மூலமாக துபாய்க்கு சென்றது மறக்கமுடி யாத அனுபவமாக அமைந்தது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாணவர்களோடு சுற்றிப்பார்த்ததோடு, அவர்களுக்கு ஒவ்வொன்றையும் விளக்கிச்சொல்லி, சந்தேகங்களைத் தீர்த்துவைப்பதில் ஆர்வத்தோடு இருந்தார்.