ஷா மையத்தில் நடைபெறும் குழந்தைகள் மீதான பாலியல் சீண்டல்கள், ஜக்கி வாசுதேவின் கொடூர செயல்கள் குறித்த செய்திகளை "நக்கீரன்' தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. இதுகுறித்து ஆசிரியர் நக்கீரன் கோபால் காணொலியில் பதிவிட அது வைர லானது. ஆசிரியரின் கேள்விக்கு நேரடியாகப் பதில் கூறாமல், நக்கீரனுக்கு எதிராக பல்வேறு யூட்யூபர்கள், இந்து மக்கள் கட்சியினைக் களத்திலிறக்கியது ஈஷா நிர்வாகம். இதே வேளையில் ஈஷாவின் ஜக்கிக்கு எதிரான போராட்டம் மக்கள் போராட்டமாக மாறியுள் ளது. குறிப்பாக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் களமிறங்கியுள்ளதால் கலகலத்துள்ளது ஈஷா கூடாரம்.

jj

போராட்டம் குறித்துப் பேசிய அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்,

"அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் வருகிற நவம்பர் 21-ஆம் தேதி ஈஷா யோகா மையத்தில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் சமூக விரோதச் செயல் களுக்கு எதிராகவும், போக்சோ உள்ளிட்ட ஏராளமான வழக்குகளைத் தாங்கி, மர்மதேச மாக விளங்கும், ஈஷாவைக் கண்டித்தும், ஈஷா யோகா மையம் மீது உச்சநீதிமன்ற உத்தரவின் படி அனைத்து வழக்குகளையும் தமிழக அரசும், காவல்துறையும் துரிதமாக விசாரிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்த அறைகூவல் விடுத்திருந்த நிலையில், இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் ஒரு அறிக்கையை வெளியிட் டுள்ளார். அதில் ஈஷா யோகா மையத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் நியாயப் படுத்தி அறிக்கை அளித்துள்ளார்.

Advertisment

d

அதேநேரம், ஈஷா இப்பகுதிக்கு வராமல் இருந்தால் மாற்று மதத்தைச் சேர்ந்தவர் கள் இப்பகுதியை கபளீகரம் செய்திருப் பார்கள் என மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும்வகையிலும் மதவெறியைத் தூண்டும் விதத்திலும் பிற மதத்தினர் மனம் புண்படும் வகையிலும், வெறுப்பு அரசியலை முன்னெடுத்து அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். அதுபோக, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் போராட்டத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வந்துவிடும் என கூறுவது கேலிக்குரியதாகும். கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தில் பெண் உரிமைக்கான போராட்டத்தில் களத்தில் முன்னணியில் நிற்கும் அமைப்பு. நாங்கள் நடத்திய போராட்டம் ஏதாவது ஒன்றில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வந்ததாக அர்ஜுன் சம்பத் அவர்களால் நிரூபிக்க முடியுமா? என்ற கேள்வியையும் முன் வைக்கிறோம். வாச்சாத்தி வழக்கு, சின்னான்பதி வழக்கு, சிதம்பரம் பத்மினி, அரியலூர் நந்தினி வழக்கு, ஸ்ரீமதி வழக்கு என பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராகத் தமிழகத்தில் நீண்ட நெடிய வரலாற்று பாரம்பரியங்களைக் கொண்டிருக்கிறோம்" என அர்ஜுன் சம்பத்திற்கு கண்டனத்தைத் தெரிவித்தது.

நவம்பர் 21, 23-ஆம் தேதிகளில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாதர் சங்கங்கள் ஈஷா விற்கு எதிரான போராட்டத்தினை அறிவித்த நிலையில், இவ்வளவு நடந்துகொண்டிருக்கின் றது. தேசிய மகளிர் ஆணையம் என்ன செய் கின்றது? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ள னர் பொதுமக்கள்.

Advertisment

ஞாயிற்றுக்கிழமை காலை வேளையில், கோவை பூ மார்க்கெட் பகுதியிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் செய்தி யாளர்களைச் சந்தித்தார் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன். "ஈஷா அறக்கட்டளை, யோகா என்கிற பெயரில் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த யோகா மையத்தில் பல்வேறுவிதமான தவறுகள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதாக குற்றச்சாட்டு கள் எழுகின்றன. ஜக்கி வாசுதேவ் மீது ஏற் கனவே பல்வேறு வழக்குகள் உள்ளது. பெண்கள் யோகா பயிற்சிக்காக சேர்க்கப்பட்டு மூளைச் சலவை செய்யப்படுகிறார்கள். குடும்பத்தினரையே அந்த பெண்கள் சந்திக்க மறுக்கிறார்கள். அண்மையில் லதா, கீதா என்ற பெண்களின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. பெண் களுக்கு அங்கு மொட்டை அடிக்கப்படுகிறது. வாசுதேவ் மகளுக்கு திருமணம் செய்து வைத் துள்ளார்கள். ஆனால் ஊரார் வீட்டு மகள்கள் மொட்டை அடிக்கப்படுகிறார்கள். இதுகுறித்து விசாரணை நடத்த நீதிமன்றம் கேட்டுள்ளது. இங்கு பிரதமர், குடியரசு தலைவர், பிற மாநில முதலமைச்சர்கள், உயர் அரசு அதிகாரிகள் ஆகியோரெல்லாம் வருகிறார்கள். இவர்கள் எல்லாம் வருவதால் ஈஷா மீது நடவடிக்கை எடுக்கமுடியாமல் தடுக்கப்படுகிறது.

sdf

யோகா மையத்தில் தகன மேடை இருப்பதற்கு என்ன அவசியம்? அரசு அனுமதி உள்ளதா..? ஈஷா யோக மையம் நீர்வழிப் பாதைகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளது. வன நிலத்தை ஏழை மக்கள் ஆக்கிரமிப்பு செய் திருந்தால் உடனே வெளியேற்றப்படுகின்றனர். அப்போது ஈஷாவிற்கு மட்டும் யார் அனுமதி கொடுத்தது? ஈஷா மீது பொது விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். ஈஷாவுக்கும் எங்களுக்கும் பகை கிடையாது. அங்கு நடக்கும் செயல்களைத்தான் கண்டிக்கிறோம். அங்குள்ள பெண் குழந்தைகளை பெற்றோரிடம் ஒப்ப டைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். ஈஷா நிறுவனர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண் டும்'' என்றார் அவர். இந்நிலையில், "பெண் களின் அழகு கூந்தலில் இல்லை: அவர்களுக் கான சுதந்திரத்தில் இருக்கிறது! பொய் பரப் புரை வேண்டாம்'' என முத்தரசனுக்கு கண்ட னத்தைத் தெரிவித்தது ஈஷா யோகா மையம்.

இதேவேளையில் ஈஷா யோகா மையம் குறித்தான செய்திகளை வெளியிட்டு வரும் "நக்கீரனை' கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவித்திருந்தார் இந்து மக்கள் கட்சியின் அர்ஜூன் சம்பத். பெருந்திரளான கூட்டம் வரும் என்ற போராட்டக்காரர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆர்ப்பாட்டத் திற்கு வந்தது கட்சிக்காரர்கள் மொத்தம் 6 நபர்கள் மற்றும் 30-க்கும் அதிகமான கல்லூரி மாணவர்கள்தான்.

s

காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் திடீரென கட்சித் தொண்டர் களுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து செஞ்சிலுவை சங்கம் நோக்கி 20-க்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் பேரணியாகச் சென்றார். அவரைத் தடுத்து நிறுத்திய போலீசார் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கும் பேரணியாகச் செல்வதற்கும் அனுமதி இல்லை எனக்கூற, அசிங்கப்பட்டுவிட்டோமே என திடீரென சாலையில் அமர்ந்து போராட்டம் மேற்கொண்டார். காவல்துறை போராடியவர்களைக் குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்ற, அங்கிருந்த மாணவர்கள் கைது பயத்தில் தலைதெறிக்க ஓடினர். மீதியுள்ளோர் "சார் பிரியாணியும், ரூ.500-ம் கொடுப் பதாகக் கூறி அழைத்து வந்தார் கள்'' என வேனில் ஏறாமல் அழ, கட்டாயமாக வேனுக்குள் திணித்தது போலீஸ். இது இப்படியிருக்க, "சார்... நான் மாலை போட்டிருக்கேன்'' என ஒருவர் அழ... மற்றொருவரோ, "எந்த போராட்டம் எனத் தெரிய வில்லை. சும்மா வந்தேன்'' என வர மறுக்க, விடாப்பிடியாக வேனில் ஏற்றியது காவல்துறை.

ஈஷாவின் கொடூர செயல்களுக்கு எதிராக, நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டு மக்கள் போராட்டம் துவங்கிய நிலையில், "உண்மைக்கு ஆதரவாக நாங்களும் இருக்கின்றோம்' என தமிழ்நாடு காவல்துறையும் களத்தில் இறங்கியுள்ளது. குறிப்பாக தன்னுடைய குழந்தை பாதிக்கப் பட்டதாக ஈஷா யோக மையத்திற்கு எதிராக ஹைதராபாத்திலிருந்து, கோவை மாவட்ட காவல்துறையிடம் 25-10-2024 அன்று ஆன்லைனில் புகார் தெரிவித்திருந்தார் யாமினி. நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த அந்த புகார் குறித்து, "நீங்க புகார் கொடுத்தது சரிதான். இப்பொழுது உங்களது 18 வயது நிரம்பிய மகனும் நடந்தது குறித்து கடிதம் கொடுத்தால் உடனடியாக எஃப்.ஐ.ஆர். போடலாம்'' என கோவை மாவட்ட காவல்துறை கூறியுள்ளது. ஆக ஜக்கிக்கு ஆப்பு ரெடி!

ஈஷா யோகா மையப் பொறுப்பாளர் தினேஷ்ராஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

-நாகேந்திரன்

படங்கள்: விவேக்