ள்ளக்குறிச்சி கணியாமூரில் தனியார் பள்ளி மாணவிக்கு நடந்த அதே கொடுமை தற்போது கடலூரிலும் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு நடந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் நந்தனார் நகரில் வசிக்கும் பட்டியலினத்தை சேர்ந்த ஸ்ரீவித்யாவின் மகள் கோவஸ்ரீ. கோவஸ்ரீக்கு ஒரு அக்கா உண்டு. ஸ்ரீவித்யா, கணவர் இறந்துவிட்டதால் தனது கஷ்டத்துக்கிடையே கோவஸ்ரீயை அதே பகுதியிலுள்ள அரசு மகளிர் பள்ளியில் படிக்கவைத்துள்ளார். அப்போது கோவஸ்ரீ யின் தாயாரிடம் சில ஆசிரியர்கள், கடலூர் மாவட்டம் மேல்பட் டாம் பாக்கத்தி லுள்ள டேனிஷ் மிஷன் கிறிஸ்து மகளிர் மேலநிலைப் பள்ளியில் சேர்க்கும் படியும், அதுவும் அரசு உதவிபெறும் பள்ளி தான் என்பதால் பணம் அதிகம் கேட்கமாட் டார்களென்றும் அறி வுறுத்தியுள்ளனர். தன்னுடைய குழந்தை யின் எதிர்காலத்தை கணக்கில்கொண்டு, கோவஸ்ரீயை அந்தப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு சேர்த்துள் ளார். அந்த பள்ளியிலிருந்து சொந்த ஊருக்கு செல்ல 40 கிலோமீட்டர் தொலைவு இருப்பதால், தன் மகளை அந்த பள்ளியின் விடுதியிலேயே சேர்த்துள்ளார் ஸ்ரீவித்யா. பிறகு மாணவி கோவஸ்ரீ, வழக்கம் போல் பள்ளிக்கு செல்வதும், பள்ளி முடிந்து விடுதி வருவதுமாக இருந்துள்ளார்.

ss

புதிதாகச் சேர்ந்த விடுதியில், இவர் பட்டியலினம் என்பதால், உடன் தங்கியுள்ள மற்ற சமூகத்து மாணவிகள் சாதிரீதியாகவும், கோவஸ்ரீயின் ஹேர்ஸ்டைலை வைத்து, ஆணா, பெண்ணா என்று உடல்ரீதியாகவும் கிண்டல் செய்து ராகிங் செய்துள்ளனர். விடுதி காப்பாளர் அறையில், காப்பாளருடைய கணவரான பிரின்ஸ், அவ்வப்போது இரவில் வந்து தங்கி உறங்குவதை வழக்கமாக வைத் துள்ளார். அவரோ, பெற்றோர்கள் இல்லாத குழந்தைகளாகப் பார்த்து, அவர்களை தகாத முறை யில் தொடுவதும், பேசுவதுமாக இருப்பாராம். இந்த விவகாரத்தை மாணவிகள் அவரது மனைவியான வார் டனிடம் சொன்னாலும், அதை அப்படியே மூடி மறைத்து விடுவதே வழக்கமாக வைத்துள்ளார் வார்டன்.

இப்படியான சூழலில், பள்ளிக்கு நிதி வழங்கு கின்ற வெளிநாட்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பார்வையிடுவதற்காக விடுதிக்கு வந்துள்ளனர். அவர் கள், விடுதி எப்படியுள்ளது என்று மாணவிகளிடம் கேள்வி கேட்டபோது, "உணவும் சரியில்லை, கழிப்பறை சரியில்லை, பெண்களுக்கான நாப்கின் கேட்டால் கொடுப்பதில்லை' எனப் பல்வேறு குற்றச்சாட்டுக் களை முன்வைத்துப் பேசியுள்ளார் கோவஸ்ரீ. இதனால் ஆத்திரமடைந்த விடுதி வார்டன் ஜெ.பெனிட்டா, அவளை அடித்துத் துன்புறுத்தியுள் ளார். இதையறிந்த கோவஸ்ரீயின் தாயார் வந்து இதைப்பற்றி பள்ளி முதல்வரிடம் முறையிட்டுள்ளார். இந்நிலையில், "இன்னும் நான்கு மாதம்தான் பொறுத்துக்கொள். நாம் இந்த பள்ளியை மாற்றிக் கொண்டு நம்ம ஊர் பள்ளிக்கே சென்றுவிடலாம்'' என ஆறுதல் சொல்லியிருக்கிறார் தாயார்.

Advertisment

ss

இந்த பிரச்சனைக்குப் பின், திங்கள் முதல் வெள்ளி வரை விடுதியில் இருப்பதும், சனி, ஞாயிறு வீட்டுக்கு சென்றுவிட்டு திங்களன்று மீண்டும் விடுதிக்கு வருவதுமாக இருந்திருக்கிறாள் கோவஸ்ரீ. இப்படியான சூழலில்தான் திடீரென பிப்ரவரி 7ஆம் தேதி மாலை 5.40 மணிக்கு விடுதி யின் வார்டன், கோவஸ்ரீயின் தாயரை தொடர்புகொண்டு, "உங்களின் மகள் தற்கொலை செய்துகொண்டாள்'' எனத் தகவல் சொல்ல... அதிர்ச்சியான ஸ்ரீவித்யா அழுதுதுடித்தபடி விடுதிக்கு வந்தால், "உங்கள் மகள் இங்கில்லை, மருத்துவ மனைக்கு சென்றுவிட்டாள்' என்று வாட்ச்மேன் வாசலிலேயே தடுக்க... கடலூர் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு சென்றாலோ, இங்கில்லை விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு போங்க எனச்சொல்ல, இப்படி மாற்றி மாற்றி அலைக்கழித்ததால் நடுத்தெருவில் புலம்பியபடி நின்றவரை, நெல்லிக்குப்பம் காவல்நிலையத்திலிருந்து தொடர்பு கொண்டு, "இன்ஸ்பெக்டர் பேசுகிறேன், நீங்க ஆஸ்பிட்டல் போக வேண்டாம், இங்க வாங்க'' என அழைத்துள்ளார். அங்கு போகும் போதே கல்லூரி முதல்வர் தொடர்புகொண்டு, "நம்ப பொண்ணு நம்மைவிட்டு போயிட்டா'' எனச் சொல்லியுள் ளார். காவல் நிலையத்திலோ, பள்ளி முதல்வர், விடுதி வார்டன் எனப் பலர் இருந்துள்ளனர். "எப்படி மேடம்?'' எனக் கதறியழுதபோது, குழந்தை யூனிபார்ம் இல்லாத காரணத்தால் பள்ளிக்கு வரவில்லை என விடுதி வார்டன் சொன்னதாக பள்ளி முதல்வர் சொல்லியுள்ளார்.

இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் பாதிக்கப் பட்ட குடும்பத்தாரிடம் பேசி, விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துமனையில் மாணவியின் உடல் உள்ளதாகவும், அதனை ஒரு நபர் மட்டுமே பார்க்க வேண்டுமென்றும் சொல்லி அனுப்பியுள் ளார். அதன்படி இறந்த மாணவியின் அக்கா உள்ளே சென்று பார்த்தபோது, பள்ளி யூனிபார்ம் போட்டபடியே இறந்துகிடந்துள்ளார். தங்கையின் பெண் உறுப்பில் ரத்தம் கசிந்தபடியே இருந்துள் ளது. மேலும், தூக்குப் போட்டதாக சொல்லப்படும் துப்பட்டா அங்கு இல்லை. இப்படி பல கேள்வி களை எழுப்பிய தங்கையின் இறப்பில் மர்மம் இருப்பதாக போலீசாரிடம் சொன்ன அக்கா, "என் தங்கை எப்படி இறந்தாள்' என்று கேட்க... அவர் களோ, "என்ன காரணமென்று தெரியாது, கழிவறை யில் துப்பட்டாவில் தூக்கிட்டுக் கிடந்தாள். அவளை இறக்கி அவசரமாக மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றால், மருத்துவ மனையில் இறந்துவிட்டாளென்று சொன்னார்கள்' என்றனர்.

Advertisment

cs

அதன்பிறகு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் "விடுதி கழிவறையைப் பார்க்க வேண்டும், தூக்கிட்ட துப்பட்டா எங்கே?'' எனக் கேட்ட போது, "அதனை பார்க்க முடியாது'' என போலீ சார் முட்டுக்கட்டை போட்டுத் தடுத்துள்ளனர். பிறகு இன்ஸ்பெக்டரோ அதனை எரித்துவிட்டதாக அலட்சியமாக பதில் சொல்லியுள்ளார். அதன்பிறகு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியினரும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பள்ளி சார்பாக கொடுக்கப்பட்ட புகாரை மாற்றி, தாயார் கொடுத்த புகாரை "தற்கொலை, சந்தேக மரணம்' என முதல் தகவல் அறிக்கையில் கொடுத்துள்ளனர். அதன்பிறகு 7ஆம் தேதி இறந்த மாணவியை, 11ஆம் தேதி பெற்று, குடும்பத்தினர் அடக்கம் செய்துள்ளனர்.

மாணவி இறந்த சில நாட்களுக்கு பிறகு மாணவியின் பொருட்கள் அனைத்தையும் எடுத் துள்ளனர். அப்போது மாணவியின் நோட்டில் அவர் கையால் எழுதி வைத்த கடிதம் இருந்துள்ளது. அதில், 'அப்பா மிஸ் யூ' என எழுதியிருந்தாள். மற்ற பேப்பர்களை பார்க்கும்போது தான் இந்த குடும்பத்திற்கே தூக்கி வாரிப் போட்டுள்ளது. அந்த கடிதத் தில் தங்கை, அக்காவிடம் பேசுவது போல எழுதிவைத்துள்ளார். அதில், "அக்கா, அம்மாகிட்ட ஒன்று சொல்ல ணும். ஆனா பயமாக இருக்கு. அந்த மேம் ஓட வீட்டுக்காரர் தகாத இடங்களில் கைவைக்கிறார். நான் யார்கிட்டையாவது சொன்னால் அம்மாவை பிடித்து ஜெயில்ல போட்ருவாங்கன்னு மிரட்டுறாங்க. அந்த வார்டனும் திட்டுவாங்க அக்கா' என எழுதி வைத்துள்ளார். இதன்படி பார்த்தால் நிச்சயம் இது தற்கொலையா? இல்லை கொலையா? என்கிற சந்தேகத்தை எழுப்பு கிறது. தற்கொலை என்றால் என்ன காரணத்திற்கான தற்கொலை? வார்டன் கணவரின் பாலியல் தொல்லையால் தற்கொலைss செய்துகொண்டாரா? மாணவியின் தற்கொலைக்கு இவர்கள் தூண்டுதலாக இருந்துள்ளார்களா? எனப் பல கோணத்தில் விசாரிக்கவேண்டிய காவல்துறை, கண்ணை மூடிக்கொண்டு பள்ளி நிர்வாகத்திற்கு உடந்தையாக செயல்பட்டுள்ளது உறுதியாகத் தெரிகிறது. மாணவியின் அந்த கடிதத்தின்படி பார்த்தால், இது பாலியல் விவகாரத்தால் ஏற்பட்ட தற்கொலை யாகத்தான் தெரியவருகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் அம்மாவிடம் கேட்டபோது, "நிச்சயம் என் குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்தே தற்கொலைக்கு தூண்டியுள்ளனர். பள்ளி வார்டன், பள்ளி முதல்வர் மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோர்மீது சந்தேகம் உள்ளது. தற்கொலைக்கு வேறு காரணம் இல்லையென்றால் ஏன் எங்களைப் பார்க்க விடவில்லை. விடுதியில் என் குழந்தையின் பொருட்களை எடுக்கவிடவில்லை. நிச்சயம் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணை செய்தால் என் பெண்ணின் இறப்புக்கு நீதி கிடைக்கும்'' என்றார்.

விடுதி வார்டன் ஜெ.பெனிட்டாவிடம் பேசி, கோவஸ்ரீ இறப்பு பற்றி கேட்டவுடன், எந்த பதிலும் சொல்லாமல் தொடர்பைத் துண்டித்துவிட்டார்.

இதுகுறித்து கடலூர் எஸ்.பி. ஜெயகுமாரிடம் கேட்டபோது, "அது தொடர்பான விசாரணை சென்றுகொண்டிருக்கிறது. மாணவி தற்கொலை என்பது உறுதியாகத் தெரிகிறது. அதற்கான கார ணத்தை இன்னும் விசாரணை செய்துவரு கிறோம். அதனை பண்ருட்டி டி.எஸ்.பி. ராஜா செய்துவருகிறார். நீங்கள் சொல்வது போன்று இருக்கும்பட்சத்தில் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார். பட்டியலின மாணவியின் தற்கொ லைக்கு நீதி கிடைக்குமா?

-சே