ங்கள் கிராமத்தில் பெற்ற மகளையே கழுத்தை நெரித்து இரவோடு இரவாகக் கொன்று எரித்திருக்கிறார்கள். அதிகாலை 3 மணிக்கு கொல்லைப்புறம் ஒதுங்க கருவேலம் காட்டுக்கு போகும் பெண்கள், பிணம் எரிவதைப் பார்த்து அலறியடித்து வந்திருக்கிறார்கள் என்று கீழடிக்கு அருகிலுள்ள மேலவெள்ளூர் கிராமத்திலிருந்து, ஒரு வாட்ஸப் செய்தி வந்தது.

s

அடுத்த நாள் அதுகுறித்து விசாரிக்க மேலவெள்ளூருக்குச் சென்றோம். ஊரே விஷயத்தைப் பேசத் தயங்க... பெரியவர் ஒருவர் நம்மிடம், “"என் பேர் வேணாம்பா,… தெரிஞ்சதைச் சொல்றேன்''” என ஆரம்பித்தார். “"அந்த பெரிய வீட்டுப் பொண்ணு இரவு 1:00 மணிக்கு, குடும்பத் தகராறு காரணமா தூக்குப் போட்டுக்கிச்சுன்னு இரவு 2 மணிக்கு, ஊரில் யாருக்கும் சொல்லாம அப்பாவும், தாத்தாவும் இன்னும் ரெண்டு பேருமா போய் எரிச்சுட்டு வந்திருக்காங்க.

விஷயம் தெரிஞ்சு மதியத்திற்குமேல் வந்த போலீஸ்காரங்க, பெண்ணோட அப்பாவையும் தாத்தாவையும் ஸ்டேசனுக்கு கூட்டிட்டுப் போனாங்க. பெண்ணோட தாய் உமா கதறி அழுதுக்கிட்டே எரிச்ச இடத்துக்கு ஓடுச்சு. அப்புறம் அரசியல் தலைவர்கள் வந்துபோனாங்க''” என்றார். மேலும் நாம் கேள்விகளைத் தொடுக்க... "ஆமாப்பா, அந்த பொண்ணு கணேஷ்ங்கிற தலித் பையனை காதலிச்சா. பிடிவாதமா அந்த பையனைத்தான் கட்டிக்கிவேன்னு நின்னா. திவ்யாவோட தாத்தா இந்த ஊர் சேர்மனா இருந்தவரு. சொத்து சுகம்னு பெரிய பணக்கார குடும்பம். சொல்லிச் சொல்லிப் பார்த்தாங்க. இரண்டு வாரத்துக்கு முன்ன அந்த பையனை கஞ்சா வச்சிருந்ததா போலீஸ் புடிச்சுட்டுப் போனாங்க. அந்த கேப்ல பொண்ணுக்கு சொந்தத் துக்குள்ள கல்யாணத்தை முடிச்சிடலாம்னு முயற்சி செஞ்சாங்க. பொண்ணு பிடிவாதமா சம்மதிக்கலை. இதுதான் நடந்துச்சுன்னு சரியா சொல்றதுக்கு முடியல தம்பி. நீங்க போலீஸ் கிட்டயே கேளுங்க''” என்றார்.

Advertisment

திருப்புவனம் காவல் நிலையத்திற்குச் சென்றோம். ரைட்டரோ, "இன்ஸ்பெக்டர் இல்லை. உதவி ஆய்வாளர் சசிகலா மேடம் இருக்காங்க, அவங்ககிட்ட கேளுங்க''’என்றார். அவரிடம் இதுபற்றிக் கேட்டபோது, “"ஆமா சார் மேலவெள்ளூர் கிராமத்தில் திவ்யான்ற பொண்ணு தூக்குப் போட்டு செத்துருச்சு. ஊரு கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் கொடுக்காம, அதிகாலை சுடுகாட்டில் எரிச்சிருக்காங்க. வி.ஏ.ஓ. காவல் நிலையத்தில் புகார் கொடுத் திருக்கார். இன்ஸ்பெக்டரும் ஏட்டையாவும் அங்கபோய் விசாரிச்சு, பெண்ணின் அப்பா முனீஸ்வரன், தாத்தா போஸ், உதவியா இருந்த பாண்டி, காத்தன் மேல வழக்குப் பதிவு செஞ்சாங்க. மத்தபடி இது தற்கொலை கேஸ்தான். சந்தேகத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செஞ்சிருக்கோம்''’என்றார்.

suc

கணேஷின் வீட்டிற்குச் சென்றோம். வீடு பூட்டிக் கிடக்கவே, அண்டை வீடுகளில் விசாரித்தோம். யாரும் பேச முன்வராததால், இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டிவரும் தமிழர் தேசிய கழகத் தலைவர் வையவனைத் தொடர்புகொண்டோம். "இது சாதிய ஆணவக் கொலைதான். மேலவள்ளூர் கிராமத்தில விசா ரிச்சப்ப, அந்தப் பொண்ணு கணேஷ்ங்கிற இளைஞரை கடந்த ஐந்து வருடமா காதலிச்சிருக்குது. இரண்டு குடும்பத்திற்கும் சச்சரவு இருந்து வந்திருக்கு. பையன் வெளியில வர்றதுக்குள்ள பெண்ணை வேறு ஒருவருக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செஞ்சிருக்காங்க. பொண்ணு சம்மதிக்காததால வேற வழியில்லாம நடு இரவுல கொன்னு கொண்டுபோய் எரிச்சிருக்காங்க. காவல் துறையும் அரசியல்வாதிகளும் உடந்தையா இருந்துருக்காங்க. ஊர்ல விசாரிச்சோம். கணேஷும் திவ்யாவும் காதலிச்சிருக்காங்க. பொண்ணு பேரை பச்சை குத்தியிருக்கான். சட்டையில இவன் பேரோட முதல் எழுத்தையும், அந்தப் பொண்ணோட முதல் எழுத்தையும் பிரிண்ட் பண்ணி வெச்சதோட, அதை போட்டோ எடுத்து வாட்ஸப்லயும் ஷேர் பண்ணிருக்கான். இரண்டு பேரும் காதல்ல தீவிரமா இருக்கவும், அவங்க குடும்பம் கூப்பிட்டுப் பையனைக் கண்டிச்சிருக்கு. பொண்ணு இறந்ததும் ஊர்க்காரங்களுக்கே தெரியாம எரிக்கவேண்டிய அவசியம் என்ன? பெத்த அம்மாவுக்கே பொண்ணு இறந்தது காலையில்தான் தெரிஞ்சிருக்குன்னு சொல்றாங்க. சாதி வெறிக்கு, பெத்த பாசமே இல்லாமப் போயிடுது.

Advertisment

தமிழகத்தில் ஆணவக் கொலை நடக்கிறது இது முதல் முறை இல்லை. இனியும் ஆணவக் கொலைகள் நடக்காமல் இருக்க சிறப்பு சட்டம் இயற்றவேண்டும். சிறப்பு நீதிமன்றம் அமைத்து வழக்கை விசாரிக்க வேண்டும். ரொம்ப முக்கியமா, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கைது செஞ்சதாத்தான் மற்றவங்களுக்கும் இதுபோல நடந்துக்க பயம் வரும். எதிர்காலத்திலாவது இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கமுடியும்''’என்றார்.