2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்த லுக்காக ஒவ்வொரு கட்சியும் தங்கள் கட்சிகளைத் தயார்படுத்திவரும் சூழலில், பா.ம.க.வில் மருத்துவர் ராமதாசுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையிலான பனிப்போர் உச்சத்திலிருக்கிறது.

பா.ம.க.வின் அடையாளங்களில் ஒருவரான காடுவெட்டி குரு இருந்தவரை அன்புமணிக்கு தலைவர் பொறுப்பு கிட்டவில்லை. இந்நிலையில் காடுவெட்டி குருவின் மரணத்துக்குப் பின்னர் 'அன்புமணி 2.0' எனும் திட்டத்தோடு, ராமதாசுக்கு எதிராகவே தன்னை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்யத்தொடங்கினார் அன்புமணி. மருத்துவர் ராமதாஸின் ஆதரவாளர்களை ஓரங்கட்டிவிட்டு, தனக்கு தோதானவர்களுக்கு பதவி களை வழங்கினார். இதுகுறித்து ராமதாஸிடம் புகார்கள் செல்ல, அவர் அன்புமணியைக் கண்டித்தபோது, “"நீங்கள் கட்சியை என்னிடம் கொடுத்துவிட்டீர்கள் அல்லவா? அதைப்பற்றி இனி நீங்கள் பேச வேண்டாம், நான் பார்த்துக்கொள்கிறேன்''’என ராமதாசுக்கே ஆர்டர் போட, பிரச்சனை முற்றத்தொடங்கியது.

ramdoss

காடுவெட்டி குரு இருந்தவரை மருத்துவர் ராமதாசுக்கு பக்கபலமாக இருந்தார். அவரது மறைவுக்குப் பிறகுதான் அன்புமணி தனது பேச்சைக் கேட்காமல் செயல்படுகிறார் என்று ஆதங்கப்பட்ட ராமதாஸ், காடுவெட்டி குருவுக்கு நிகரான அதிரடியான ஒருவரை சல்லடை போட்டுத் தேடத் தொடங்கினார். அப்படி ஒருவர் கிடைத்துவிட்டால், கட்சி நம் கட்டுப்பாட்டில் இல் லாவிட்டாலும், வன்னி யர் சங்கம் நம் கட்டுப் பாட்டில் இருக்கு மென்று கணக்குபோட்டார். 25 ஆண்டு களுக்கு முன்பாக அம்பத்தூர் அடுத் துள்ள கொரட்டூர் பகுதியில் இளைஞர் அணியைச் சேர்ந்த பூபாலனின் சகோ தரர் உலகநாதன் என்பவர் கூலிப் படையால் கொடூரமாக வெட்டிப் படு கொலை செய்யப்பட்டார். அந்த குற்ற வாளிகளை பழிக்கு பழிவாங்கும் நோக்கில் அப்போதைய மா.செ.வாக இருந்த இரவிராஜ் ஏற்பாட்டில், அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த "ஏ பிளஸ்' கேட்டகிரியான ரவுடி குட்டியை நீதிமன்றத்தில் வைத்தே காலி செய்திருக்கிறார்கள். இப்படி காடு வெட்டிக்கு குருவுக்கு நிகரான அதி ரடியாக இரவிராஜ் இருப்பதோடு, தீவிர விசுவாசியாகவும் இருப்பதால் அவருக்கு வன்னியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பொறுப்பை வழங்கி, வன்னி யர் சங்க தலைவர் பு.த.அருள்மொழி யுடன் இணைந்து செயல்பட வைத்தார் ராமதாஸ். அதன்படி தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் செய்து சங்கத்தைக் கட்டமைத்து பொறுப்பாளர்களை நியமித்தனர். இதில் அன்புமணியால் நியமிக்கப்பட்டவர்களை நீக்கியதாக விவகாரம் கிளம்ப, "கட்சிக்கு நீ தான் தலைவர். சங்கத்துக்கு அல்ல. அதை நான் பார்த்துக்கொள்கிறேன்'' என ராமதாஸ் கூற, கொதித்துப்போன அன்புமணி, மீண்டும் அப்பாவோடு மோதத்தொடங்கியுள்ளார்.

அடுத்ததாக, ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு நிகராக வன்னியர் சங்கத்தைச் சேர்ந்த இளை ஞர்களைக் கொண்டு தமிழ்நாடு முழுக்க மஞ்சள் படை அணிவகுப்பு நடத்தத் திட்டமிட்டார் ராமதாஸ். இதற்கு போட்டியாக என்.எல்.சி. போராட்டத்தை கையிலெடுத்திருக்கிறார் அன்புமணி. அதற்கு, "முடிந்துபோன விஷயத் திற்கு தேவையில்லாமல் இந்த இளைஞர்களை வழக்குமேல் வழக்கு வாங்க வைக்கிறான்'' என்று புலம்பியிருக்கிறார் ராமதாஸ்!

Advertisment

rr

அதன்பிறகு ராமதாஸின் திட்டப்படி, வன்னியர் சங்கத்திலுள்ள 2000 இளைஞர்களுக்கு, டி ஷர்ட், ட்ராயர், தொப்பி, ஷூ, அடையாள அட்டை, கை க்ளவுஸ் என வழங்கி, அவர்களுக் கான பயிற்சியைத் தொடங்கவுள்ளதாக அருள்மொழியும் இரவிராஜும் ராமதாஸிடம் கூறியுள்ளனர். இதைக் கேட்டதுமே தனக்கு போட்டியாக இப்படியெல்லாமா செய்கிறார் களென்று அன்புமணிக்கு சுர்ர்ரென்று கோபம் ஏறியிருக்கிறது. காடுவெட்டி குருவின் இடத்துக்கு வர முயற்சிக்கும் இரவிராஜை நீக்குவதுதான் சரிப் படும் என நினைத்தவர், ராமதாஸைப் பார்த்து, "அந்த இரவிராஜை சங்கத்தின் பொறுப்பிலிருந்து நீக்கப் போறீங்களா இல் லையா?'' என எகிறியிருக்கிறார். ராமதாசும் வேறு வழியில்லாமல் அடுத்தநாளே இரவிராஜை நீக்குவதாக அறிவித்தார்.

இந்த பிரச்சனை ஒருவழியாக முடிவுக்கு வர, அடுத்ததாக தேர்தலுக்கான கூட்டணி யைத் தேர்வுசெய்யும் பிரச்சனை எழுந்தது. ராமதாஸோ, தி.மு.க. கூட்டணியில் வி.சி.க. இருப்பதால் நமக்கு அ.தி.மு.க.தான் சரியான இடமாக இருக்கும் என கருதினார். அதற்காக அ.தி.மு.க.வின் கே.பி.முனுசாமியிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் அன்புமணியின் கருத்தோ நேரெதிராக இருக்கிறது. காங்கிரஸ் கட்சியிலுள்ள தனது மைத்துனர் விஷ்ணு பிரசாத் மூலமாக தி.மு.க. கூட்டணிக்கு பேச்சுவார்த்தையில் இறங்கியிருக்கிறார். இதையறிந்த ராமதாஸ் மீண்டும் கடுப்பாகிப் போனார். இப்படியாக அப்பா, மகனுக்கு இடைப்பட்ட ஈகோ பிரச்சனையால் யார் பக்கம் நிற்பது என்று உறுதியில்லாமல் குழப்பத்தில் இருக்கிறார்களாம் மற்ற நிர்வாகிகள். இந்நிலையில், காடுவெட்டி குரு மகன், இரவிராஜ் ஆகியோர், பா.ம.க.வுக்கு எதிர்த் திசையில் பயணிக்கப்போவதாக உள்ளதால், வரவுள்ள தேர்தலில் பா.ம.க.வுக்கு வெளியில் மட்டுமல்லாமல், உள்ளுக்குள்ளும் பயங்கர அடி இருக்குமென்றே கூறப்படுகிறது.

Advertisment