கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராளியும், பச்சைத் தமிழகம் இயக்க ஒருங்கிணைப்பாளருமான சுப.உதயகுமார், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானின் மிக மோசமான செயல்பாடுகள் குறித்து, டிபேட் நேர்காணலில் அவருடனான தனது அனுபவத்திலிருந்து தெரிவித்துள்ளார். அதில்...
தோழர் சீமானோடு எனக்கு எந்தவித தனிப்பட்ட விரோதமோ, கொடுக்கல் வாங்கலோ, வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளோ எதுவுமே கிடையாது. எங்க ளுடைய போராட்டத்துக்கு வந்தவர், எங்களுக்கு ஆதரவாக செயல்பட்டவர், உறுதுணையாக நின்றவர். அந்த வகையில் அவரிடத்தில் எனக்கு அன்பும் மரியாதை யும்தான் இருக்கிறதே தவிர, வேறெந்த காழ்ப்புணர்ச்சியுமே கிடையாது. ஆனால் அவ ருடைய அரசியல், தமிழ் நாட்டு மக்களுக்கு ஏற்புடைய அரசியல் அல்ல என்று நான் மிக உறுதியாக நினைக்கிறேன். அவருடைய தனிப்பட்ட சில குணநலன்களும் எனக்கு ஏற்புடைய தாக இல்லை.
எடுத்துக்காட்டாக, தொடக்கத்திலேயே எங்களுடைய உறவு சுமுகமானதாக இருக்கல. முதல் தடவ அவரு ஊருக்கு வந்தி ருக்கும்போது இடிந்தகரை போராட் டத்துல கலந்துகொண்டபோது, பக்கத்து, பக்கத்துல உக்காந்திருந்தோம். அன்னிக் குத்தான் முதல் தடவையா சந்திக் கிறோம். அந்த நேரத்துல நான் ஜூனியர் விகடன்ல "அணு ஆட்டம்'னு ஒரு கட்டுரைத் தொடர் எழுதிக் கிட்டிருந்தேன். அப்போ நான் பேச்சுவாக்குல அதச் சொன் னேன். உடனே அவரு "தம்பி தான் ஒருத்தன் எழுதிக் கிட்டிருக்கான்'னு சொன் னாரு. எனக்கு அது ஷாக் கிங்கா இருந்தது. ஒரு எழுத்தாளன்ங்கிற முறையில தன்னுடைய எழுத்து இப்படி கண் முன்னாடியே திருடப் படும்போது யாராலயும் ஒத்துக்க முடியாது. ஸோ, உடனடியா, அத நான்தான் எழுதிக்கிட்டிருக்கேன்னு சொன்னேன். அது அவருக்கும் தர்மசங்கடமா இருந்தது, எனக்கும் தர்மசங்கடமாவே இருந்தது. இப்படித்தான் எங்கள் முதல் சந்திப்பு. அந்த முதல் கோணல் உண்மையிலேயே முற்றிலும் கோணலாப் போச்சு! அவருக்கு என்னைப் பத்தி தெரியல. கட்டுரைய படிக்கல, அதப்பத்தி அவருக்குத் தெரியல. நம்ம தம்பிதான்னு, எல்லாமே தனக்குள்ள கொண்டுவர்றது, ஒருவித மனப் பிரச்சினைதான் அது!
அதே மாதிரி வள்ளியூர்ல வச்சு ஒரு பொதுக் கூட்டம் நடந்தது. அவங்க கட்சிக்கூட்டம். என்னையும் கூப்புட்டிருந்தாரு... அந்த மேடையில நானும் உக்காந்திருந்தேன். அவரு பேசும்போது, 'நாக்கை அறுப்பேன், கழுத்தை வெட்டுவேன்'ன்னு அந்த மாதிரி வார்த்தைகள் பேசும்போது எனக்கு ரொம்ப தர்மசங்கடமா இருந்தது. பொதுக்கூட்டத் துல ஏராளமான இளைஞர்கள் கூடியிருக்கிறாங்க. இவங்கள பொறுப்புள்ளவர்களாக உருவாக்க வேண்டியது நல்ல தலைவனுடைய கடமை. சீமானின் இந்த மாதிரியான வன்முறை சிந்தனைகளை ஏற்க முடியாது.
அப்புறம் அவருடைய கட்சிக் கொள் கைகளையெல்லாம் பார்த்தீங்கன்னா, தன்னலமற்ற அன்பான சர்வாதிகாரம். சர்வாதிகாரம்னாலே தன்னலமிக்கது. சர்வாதிகாரம்னாலே அன்பு இல்லாதது. அது எப்படி தன்னலமற்ற அன்பான சர்வாதிகாரம் வரமுடியும்? அவருடைய சில கொள்கைத் திட்டத்துல பாத்தீங் கன்னா, மாட்டு மூத்திரத்த வியாபாரம் பண்றது இருக்கு. இதெல்லாமே சங்கிகள் பேசுற விஷயங்கள். அதிபர் ஆட்சி முறை கொண்டு வர்றது மாதிரியான விஷயங்களைப் பார்க்கும்போது எனக்கு அது பிடிக்கல.
அணு உலையைப் பற்றி சீமான் பேசியபோது அதை ஆணுறையோடு தொடர்புபடுத்திப் பேசியது உண்மை தான். எல்லாத்தையுமே செக்ஸோட ரிலேட்பண்ற அந்தப் போக்கு சரியல்ல. ஆணுறை தயாரிக்கிற இந்திய நாட்டுல அணு உலை தேவை யாடா?ன்னு கேக்குற கேள்வி சரிதான். ஆனா ஏன் எல்லாத்தையும் அப்படிக் கொண்டுவர்றாருன்னு எனக்குப் புரியல. அதே மாதிரி சிங்களப் பெண்களை கற்பழிப்பேன்னு சொல்றது... எந்தப் பெண்ணா இருக்கட்டும், எவ்வளவு விரோதமான, ஒரு பகைமைமிக்க ஒரு குடும்பத்தோட ஒரு பொண்ணா இருந்தாக்கூட அந்த மாதிரி எல்லாம் ஒரு தலைவர் சிந்திக்கவே கூடாது. எந்த ஈழத் தமிழரும், தலைவர் பிரபாகரனோ அல்லது வேறு எந்த ஈழத் தலைவர்களோ இந்த மாதிரி ஒரு வார்த்தையச் சொல்லி நான் கேட்டதே கிடையாது. அந்த வார்த்தைக்குப் பின்னாடி இருக்கக்கூடிய சிந்தனையப் பாருங்க. "சிங்களப் பெண்களைக் கற்பழிப்பேன்'னு மேடையில நின்னு ஒரு தலைவர் முழங்குறாருன்னா, கீழ நிக்கிறது அத்தனையும் சின்னப்பயலுக... அப்ப ஒரு தலைவரே இப்படிப் பேசுறாருன்னா, அந்த வார்த்தை என்ன மாதிரி யான தாக்கத்தை உண்டுபண்ணும்? அந்தப் பெண்கள அவங்க எப்படி பார்க்க ஆரம்பிப்பாங்க? சிங்களப் பெண்ணும், தமிழ்ப் பெண்ணும் என்ன வேற வேற மாதிரியா இருக்கறாங்க? எல்லாரும் ஒண்ணுபோலத்தான இருக்கறாங்க.
இந்த நித்யானந்தான்னு ஒருத்தரப் பார்க்குறாரு, அவரப் பத்தி பேசுறாரு. "அவருகூட இருக்கிற இந்த வெள்ளைக்கார ஃபிகர்கள்...' அப்படீங்கிறாரு. என்ன ஒரு வன்மம்மிக்க பார்வை பாருங்க. ஒரு பெண்ணை இந்த வயசுல, திருமண மாகி குழந்தை பெத்த ஒரு சமூகத் தோட தலைவர்... 8 கோடி மக்க ளுக்கு நான் முதல்வராகணும்னு விரும்பக்கூடிய ஒரு தலைவர் எவ்வ ளவு கண்ணியமான வார்த்தைகளை யும், சிந்தனைகளையும் விதைக்கணும். உங்கள நம்பி ஆயிரக்கணக்கான மக்கள், இளைஞர்கள் பின்னாடி நிக்கிறாங்க. பெண்களப் பாத்து ஃபிகர்ங்கிறது, அப்புறம் இந்த மாதிரியான வன்முறை கலந்த ஒரு பெண் விரோத சிந்தனைகள் தோய்ந்த வார்த்தை களையெல்லாம் கேக்கும்போது ஒரு மாதிரி அருவருப்பு உருவாகுது.
இந்தமாதிரி பாலியல் வக்கிரமும், வன் முறையும் வெளிப்படுவதை நான் சுட்டிக்காட்டு னேன். இத, தன்னைத் திருத்துவதற்கான ஒரு வாய்ப்பாகூட அவரு எடுத்துக்கலாம்.
பெரியார் ஆயிரம் விஷயங்களச் சொல்லியிருக்காரு. அதுல சில விஷயங்கள் நமக்கு ஏற் புடையதாக இருக்காது. பெத்து வளர்த்து, அரும் பாடுபட்டு ஆளாக்குன அப்பா கூடவே நமக்கு பிரச்சினைகள் வருது, அம்மா கூடவே நமக்கு கருத்து வேறுபாடுகள் வருதுன்னா, ஒரு சமூக அரசியல் ஆளுமையோடு நிச்சயமாக கருத்து வேறுபாடுகள் வரலாம், வரணும். பெரியாரைப் பொருத்தவரைக்கும் அது வந்தா அதை ஊக்கு வித்து, ஆதரிக்கவும் செய்வாரு, அத அவரே சொல்லியிருக்காரு. அவரு சொன்ன ஆயிரம் விஷயங்கள் இருக்கும்போது... இப்படி ஒரு விஷயத்தச் சொன்னாருன்னு அவர் சொல்லாத ஒரு கருத்தை இப்ப பேசவேண்டிய தேவை என்ன? இப்ப தமிழ்நாட்டுல அதுபத்தியா விசாரிச்சுக் கிட்டிருக்கோம். காம இச்சையை எங்க கொண்டு தீர்க்கிறது? எப்படி தீர்க்கிறதுன்னா பேசிக்கிட்டி ருக்கோம்? அவன் அவன் வளங்கள் கொள்ளை போகுதுன்னு போராட்டம் நடத்திக்கிட்டிருக்கான். பரந்தூர்ல, திருவண்ணாமலை மாவட்டம் மேல்மால போராட்டம் நடக்குது. அரிட்டா பட்டின்னு மதுரை மேலூர் பகுதியில டங்ஸ்டன் பிரச்சனை. கன்னியாகுமரியில அணுக்கழிவு பிரச்சினை... இப்படி பல்வேறு பிரச்சினைகளோட மக்கள் அல்லாடிக்கிட்டிருக்கிறாங்க. விலைவாசி உயர்வு, பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட் டம்னு ஆயிரம் பிரச்சனைகள் இருக்கு. இதப்பத்தி யெல்லாம் ஒரு தலைவர் பேசாம, 50 ஆண்டுகளுக்கு முன்னால மறைந்த ஒரு தலைவர் எங்கேயோ, எப்பவோ சொன்னாருன்னு ஒரு கதையச் சொல்றாருன்னா... யார்கூட இவரு கைகோர்க்கிறார் பாருங்க. மிகமோசமான, ஆபத்தான ஒரு கூட்டத்தினுடைய கையாளா இவரு இருக் காரோன்னு எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு.
2009-ல இனப்படுகொலை நடந்து முடிஞ்சவுடனே தமிழ்நாட்டுல ஒரு மிகப்பெரிய தன்னெழுச்சியான ஒரு உணர்ச்சிப்பெருக்கு ஏற்பட்டது. அந்த உணர்ச்சிக் கொந்தளிப்பை, அந்த இன எழுச்சியை அப்படியே மட்டுப்படுத்தி... ஒண்ணுமில்லாமல் ஆக்கி, இன்னைக்கி தமிழ்த் தேசியம்ங்கிறது, இவர முதல்வராக்குறதுக்குத்தான். தமிழ்த் தேசியம்ங்கிறது இந்த மாதிரியான வெறுப்பு கலந்த, வன்முறை கலந்த, பாலியல் வக்கிரம் கலந்த சிந்தனைதான்ங்கிற மாதிரி கொண்டுவந்து, ஒரு நகைச்சுவைப் பொருளாக்கிவிட்டார்.
தமிழ்த்தேசியம் பேசுகின்ற எங்களைப் போன்றவர்கள்லாம் அந்த வார்த்தையச் சொல் றதுக்கே அசிங்கமா இருக்கு. பார்த்தவுடனே நம்மளையும் இப்படித்தானே எடைபோடுவாங் கங்கிறது மாதிரி இருக்கு. இந்த பாரதிய ஜனதா கட்சியோட, ஆர்.எஸ்.எஸ்.காரங்களோட இவருடைய தொடர்பு என்ன? கட்சிக்கு பேரு வாங்கிக் கொடுத்தது குருமூர்த்தி. அந்தக் கட்சிக்குப் பின்னாடியிருந்து ஊக்குவித்து வழிநடத்துவது குருமூர்த்தி, சோ போன்ற ஆட்கள். சோ இறந்துட்டாரு. அந்த மாதிரியான ஆட்கள் இன்னிக்கு இவருக்கு ஆதரவா வர்றாங்க. அப்ப யார் இவரு? இவருடைய உண்மையான அரசியல் என்ன? இவரு யாருக்காக நிக்கிறாரு?
பெரியார் மேல எங்களுக்கு விமர்சனங்கள் இருக்கு, கருத்து வேறுபாடுகள் இருக்கு. ஆனால் இன்னிக்கு இந்த தமிழ்நாட்டை இந்த பார்ப்பனீய பாசிஸ்டுகளிடமிருந்து காப்பதற்கு மிக முக்கியமான ஒரு ஆயுதம் பெரியார். அவன் காந்திய பார்த்து பயப்படல, அம்பேத்கரப் பார்த்து பயப்படல, வேற எந்த தலைவரப் பாத்தும் பயப்படல... பெரியாரைப் பார்த்துப் பயப்படுறான்னா, we have to use periyar கிறதுதான் என்னுடைய வாதம். இந்த ஆயுதத்த கா- பண்ணி, அவங்களுக்கு களம் உருவாக்கிக் கொடுக்கக்கூடிய ஒரு எடுபிடி அரசியலை செய்துகொண்டிருக்கிறார்னுதான் நான் நினைக்கிறேன்.
அதேபோல, எங்களுக்கும், என்னைப் போன்றவர்களுக்கும் திராவிடக் கட்சிகள் மீது கருத்து வேறுபாடுகள் இருக்கு, விமர்சனங்கள் இருக்கு. ஆனா, இன்னைக்கு மிகப்பெரிய ஆபத்து என்ன? தமிழ் இனம் எதிர்கொள்ளக்கூடிய மிகப்பெரிய ஆபத்து இந்த பார்ப்பனீய பாசிசம்.
தென்தமிழகத்தில், எங்க பகுதியில 250 வருஷங்களுக்கு முன்னாடி பெண்கள் இடுப்புக்கு மேல துணி போட முடியாது. அதே மாதிரி 18 ஜாதிகளைச் சேர்ந்த பெண்கள் இடுப்புக்கு மேல துணி போட முடியாது. இத வந்து பார்த்த சுவாமி விவேகானந்தர் LUNATIC ASYLUM-ன்னாரு. திருவாங்கூர்-கொச்சி சமஸ்தானத்தோட சனாதன வர்ணாஸ்ரமத்த IT IS A LUNATIC ASYLUM #அப்படீன்னு விவேகானந்தர் சொன்னாரு. அந்த மாதிரி ஒரு பைத்தியக்கார விடுதி மாதிரி நடத்திக்கிட்டிருந்தாங்க இந்த நாட்டை. அப்ப, இந்தப் பகுதிகள்ல உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள்லாம், அந்த உயர் ஜாதிக்காரங்கள கண்டா 32 அடி, 18 அடி, 12 அடின்னு அடிக்கணக்க வச்சு தள்ளி நிக்கணும். அவன் தெருவுக்குள்ள போக முடியாது. மிருகங்கள் கூட நடக்கலாம். அதே மாதிரி ஒரு அமைப்பைத்தான் இந்த பார்ப்பனீய பாசிஸ்டுகள் திரும்பக் கொண்டுவர்றாங்க. இந்த ஆளு அவனுகளுக்குப் போய் வக்காலத்து வாங்கிக்கிட்டிருக்காரு.
பெரியார் சொல்லிட்டாராம்... சொன்ன தாவது உண்மையா இருந்தாக்கூட பரவால்ல. அதுவும் இல்ல. எந்தவித ஆதாரமும் கிடையாது. அப்ப இது ஒரு மடைமாற்று அரசியல். இது ஒரு திசை திருப்பல் அரசியல். தமிழர்களுக்கு இன்னிக்குத் தேவையான ஆயிரம் விஷயங்கள் இருக்கு. ஆனா எல்லாத்தையும் அப்படியே குழிதோண்டிப் போட்டுப் புதைச்சாச்சு. இதுல ஒரு அரசியல் இருக்கு. என்னன்னா... தமிழ்த் தேசியக் களத்துலயும் இவரு செல்லாக்காசு ஆயிட்டாரு. மக்களும் நம்பல, யாரும் நம்பல. இவரு நிறைய பொய் சொல்றாரு, இவரு நெறைய மடைமாற்றிப் பேசுறாரு, இவரு தன்னுடைய அதிகாரத்துக்காக மட்டுமே இயங்குறாரு, இவரு இன்னொருத்தரால ஆட்டுவிக்கப்படுறாருன்னு நிறைய விஷயங்கள் மக்கள் மத்தியில தெளிவா புரிஞ்சுபோச்சு. அவர்கூட இருக்கிற தோழர்களே நிறைய பேரு கட்சியை விட்டு விலகி வர்றாங்க. நாள்தோறும் நாம பார்க்கிறோம். இவரு தன்னுடைய இருப்பை தக்கவைத்துக்கொள்ள வேண்டிய மிகமோசமான, இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டவரா இருக்காரு. ரெண்டாவது... இவரு வரக்கூடிய சினிமாத்துறையிலிருந்து விஜய் அரசியலுக்கு வந்திருக்காரு. அப்ப இவர்ட்ட உள்ள சினிமா ரசிகக்குஞ்சுகள்லாம் அவர்ட்ட போயிருவாங்க. பேஸிக்கலி இவரு சினிமாக்காரர்தான். பேச்சு, இவருடைய பாடி லாங்வேஜ் எல்லாமே அப்படித்தான் இருக்கும்.
மேடையில நல்ல தலைவர்களான காமராஜர் பேசுறதக் கேட்டிருக்கோம், அண்ணா பேசுறதக் கேட்டிருக்கோம். நல்ல கருத்துக்கள் இருக்கும், தகவல்கள் இருக்கும். மக்களை எஜுகேட் பண்ணுவாங்க. ஆனால் இவரு நடிப்பாரு. கைய உதறி, கால உதறி, அங்க குத்தி... இங்க குத்தி... சத்தம் போட்டு, தேவையில்லாத இடத்துல காட்டுக்கத்தல் கத்தி, வேர்த்து ஒழுகி, பின்னாடி ஒரு கேமராவ வச்சு... அங்க நடக்கிறது மேடைப்பேச்சு இல்ல. குடிமக்களை பயிற்றுவிக்கக் கூடிய, விழிப்புணர்வு அடையச் செய்யக்கூடிய ஒரு கருத்துப் பரிமாற்றம் இல்ல. அங்க நடக்குறது ஒரு டிராமா. இந்த டிராமா தான் இளைஞர்கள வசியப்படுத்துது. விஜய்கிட்டருந்து தொண்டர் களைப் பாதுகாக்கவேண்டிய ஒரு தேவையிருக்கு. தன்னிடம் இருக்கக்கூடிய 30, 35 லட்சம் ஓட்டுக்கள் சிதறி விஜய்ட்ட கொஞ்சம் போயிறக்கூடாதுங்கிற பயம் கொஞ்சம் இருக்கு. அப்ப நாம ஒரு கான்ட்ராவர்ஸிய சொல்லலாம்கற இன்னொரு உத்திய பண்றாரு. அதாவது, இவரு என்ன பண்றாருன்னா, தன்னையே எல்லாரும் பார்த்துப் பேசிக்கொண்டிருக்கிறது மாதிரி பல விஷயங்களப் பேசுறது. இப்ப பி.ஜே.பி.காரன் ஒருத்தன் பேசியிருக்கான் பாருங்க... "பிரியங்கா காந்தி கன்னத்த மாதிரி ரோடு போடுவேன்'னு. இந்த மாதிரி விஷயங்கள ஏன் பேசுறான்னா, தன்மீது தான் பிறருடைய கவனம் குவிஞ்சிருக்கணும், மக்கள் தன்னைப் பத்தி பேசணும்னு.
இப்ப இவருடைய இந்த சூழ்ச்சி.. சதி என்னன்னா, அத்தனை இஷ்யூஸையும் மக்கள் மறந்து, எல்லாரும் "என்னைப் பார், என் அழகைப் பார்'னு இவரு பண்றாரு. நாம அதுக்குப் பலியாகிக்கிட்டிருக்கோம்னு நினைக்கிறாரு. ஆனா இந்த யூ டியூபர்ஸ், இந்த மீடியா எல்லாம் சேர்ந்து இவர ஒரு வாரம் கண்டுக்காமல் விட்டுட்டோம்னு வைங்க... காலியாயிடுவாரு.
இப்ப திராவிட இயக்கத் தோழர்கள் கூட வீட்ட முற்றுகையிடப் போறோம்னு சொல்றாங்க. அவரு வீட்ட முற்றுகையிடக்கூடாது. குருமூர்த்தி வீட்ட முற்றுகையிடுவோம், எச்.ராஜா வீட்ட முற்றுகையிடுவோம், தமிழிசை சவுந்தரராஜன் வீட்ட முற்றுகையிடுவோம். இவங்கதான் பின்னாடி யிருந்து இயக்குறாங்க இவர. இவர் ஒரு பகடைக் காய். இவருக்கு அதிகாரம்லாம் கிடைக்கப்போறது இல்ல. அதுல இவருக்கு விருப்பமும் இல்ல. இவருக்கு ஒரு ஆளுமைத்திறனோ, அரசாட்சி நடத்தக்கூடிய திறமையோ இல்ல. இவருக்கு வேண்டியது நடக்குது, சுகமான வாழ்வு... அந்த முக்கியத்துவம், ஊடக வெளிச்சம்... அப்ப, இவர இக்னோர் பண்ணிட்டு, இவர இயக்கக்கூடியவங்க கிட்ட நம்ம போகணும். அது தான்... சிறந்த யுத்தியாக இருக்கும்னு நான் நினைக்கிறேன்!