அதிவேகமாக பைக்கு களை ஓட்டி, அதை யூட்யூபில் பதிவிட்டு சிறுவர்கள், இளைஞர்களைக் கவர்ந்துவந்த பிரபல யூட்யூபர் டி.டி.எஃப். வாசன், நெடுஞ்சாலையில் வீலிங் செய்ய முற்பட்டு ஆக்சி டென்ட்டாகி படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப் பட, தற்போது பிணையில் வரமுடியாத பிரிவுகளில் கைது செய்யப்பட்டுள்ளார். சாலை விதிகளை ஒரு பொருட்டாகவே மதிக்காமல், 150 கி.மீ., 200 கி.மீ. அதிவேகத்தில் டூவீலரில் பயணித்து, அந்த அனுபவத்தை வீடியோ வாக்கி யூட்யூபில் ஏற்றி பிரபல மானவர் டி.டி.எஃப் வாசன். முன்னணி நடிகர்களைப்போல் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை சம்பாதித் துள்ளார். இதைத்தொடர்ந்து தற்போது "மஞ்சள் வீரன்' என்கிற படத்தில் ஹீரோவாக புக்காகியுள்ளார்!
இந்நிலையில் டி.டி.எஃப். வாசன், சென்னையிலிருந்து மகாராஷ்டிராவிற்கு தனது நண்பரான அஜித் என்பவரோடு சென்னை -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற போது ஒருவருக்கொருவர் முந்தி பைக் ரேஸில் ஈடுபட்டி ருக்கிறார்கள். கடந்த 17ஆம் தேதி மாலை 4:30 மணியளவில் காஞ்சிபுரத்தை அடுத்த தாமல் பகுதியில் தனது விலையுயர்ந்த சூப்பர் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, அருகே ஓர் கார் வர, அதில் பயணித்தவர் களை ஈர்க்கும் விதத்தில் வீலிங் சாகசத்தில் ஈடுபட்ட டி.டி.எஃப். வாசனின் பைக்கின் பின்புறம் சாலையில் தேய்த்ததில் நிலைதடுமாறி, பைக் இரண்டு மூன்று முறை பல்டியடித்து அருகிலிருந்த பள்ளத்தில் விழுந்தது. பைக்கி லிருந்து தூக்கிவீசப்பட்ட வாசன், கை, கால்களில் படுகாய மடைந்தார். அவரை பொது மக்கள் மீட்டு, அருகிலிருந்த மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித் தனர். அவருடைய கைக்கு மாவுக்கட்டு போடப்பட்டது. உடலில் பல இடங்களில் ஏற் பட்ட காயங்களுக்கும் சிகிச்சையளிக்கப்பட்டது. இதை யடுத்து, சென்னையில் சிகிச்சை பெற விரும்பியவரை, அவரது நண்பர்கள் சென்னைக்கு அழைத்துச்சென்றனர்.
இந்நிலையில், டி.டி.எஃப். வாசன் மீது பாலுச்செட்டி சத்திரம் காவல் நிலையத்தில் ஐ.பி.சி. 279, ஐ.பி.சி. 308 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, சென்னையிலுள்ள அபீஸ் என்பவரின் வீட்டில் பதுங்கியிருந்த வாசன், 19ஆம் தேதி விடியற்காலையில் கைது செய்யப்பட்டு, காஞ்சிபுரம் பாலுச்செட்டிசத்திரம் காவல் நிலையத்தில் விசாரணை செய்யப்பட்டு, ஐ.பி.சி. 279, ஐ.பி.சி. 308 மற்றும் மோட்டார் வாகனச் சட்டம் 184, 188 பிரிவுகளின்படி கைது செய்யப்பட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி கருணாகரன், டி.டி.எஃப். வாசனை அக்டோபர் 3ஆம் தேதிவரை நீதிமன்றக் காவ லில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி புழல் சிறையில் அடைக்கப்பட்ட வாசன், முதுகுவலி காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவ மனைக்கு அழைத்துவரப் பட்டார்.
அவருடைய ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. டி.டி.எஃப். வாசனுக்கு நேர்ந்த விபத்தைப் பார்த்தாவது அவரது ரசிகர்கள் திருந்த வேண்டும்!