டந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக மெங்கும் ஒரு வீடியோ வைரலாகியது. அந்த வீடியோவில், சிதம்பரம் காந்தி சிலையருகே பேருந்து நிழற்குடையில் 12-ஆம் வகுப்பு படிக்கும் சீருடையணிந்த பள்ளி மாணவிக்கு, கீரப்பாளையம் தொழில்நுட்பக் கல்லூரியில் படிக்கும் மாணவன் தாலி கட்டுகிறான்.

சமூக வலைத்தளங்களில் பரவிவரும் காட்சிகளின் அடிப் படையில் சிதம்பரம் நகர போலீசார் விசாரணை மேற் கொண்டு வந்த நிலையில், தகவலறிந்து மாவட்ட குழந்தை நல அலுவலர் ரம்யா சிதம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித் தார். அதனைத்தொடர்ந்து சம்பந்தப் பட்ட வடகரிராஜபுரத்தைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவன் மற்றும் வெங் காயத்தாலமேட்டைச் சேர்ந்த 16 வயது மாணவியை சிதம்பரம் காவல் நிலையம் அழைத்துவந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

ss

சம்பந்தப்பட்ட மாணவியை கடலூர் சமூகநலத் துறை அலுவலகத்திற்கு அனுப்பி அறிவுரை வழங்கப்பட் டது. மாணவனிடம் விசாரணை மேற்கொண்ட போலீ சார் மாணவனை, குழந்தைகள் திருமண குற்றவழக்கில் பதிவுசெய்து கைதுசெய்தனர். ஆனால், 10-ஆம் தேதி இரவு போக்ஸோ சட்டத்தில் மாணவன் கைது என தவறான தகவல் பரவியது. இது ஒருபுறமிருக்க, இந்த காட்சிகளை சமூக வலைத்தளத்தில் இளம்சிறார்கள் முகத்தை மறைக்காமல் யார் வெளியிட்டது என காவல்துறை விசாரணை மேற்கொண்டது. சிதம்பரம் அருகே கோவிலாம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த பாலாஜிகணேஷ் என்பவரை அழைத்து அவரிடமிருந்த செல்போனை பறிமுதல் செய்து ஆய்வுசெய்தனர். அடையாளத்தை மறைக்காமல் சமூகவலைத்தளத்தில் இளம் சிறார்களைப் பதிவு செய்ததற்காகவும், சிறுமியின் பெற்றோரை சாதிப் பெயரைக் கூறி திட்டியதற்காகவும் இளஞ்சிறார் குற்றம், வன்கொடுமை வழக்கு, எஸ்.சி., எஸ்.டி. ஆகிய மூன்று பிரிவில் வழக்குப் பதிந்து 10-ஆம் தேதி இரவு கைது செய்தனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட பெற்றோர்களிடம் பேசுகையில் "இரண்டு தரப்பிலும் பெரிய அளவில் வசதி வாய்ப்பு இல்லை. தினக்கூலி வேலைசெய்து பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புகிறவர்கள். இப்படி இவர்கள் நடந்துகொள்வார்கள் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. இருவரின் நெருக்கத்தை முன்பே கேள்விப்பட்டு சம்பந்தப்பட்ட இரு குடும்பத்தாரும் இருவருக்கும் படிப்பு முடிந்தவுடன் திருமணம் செய்துவைத்து விடலாம் என முடிவுசெய்து தாம்பூலம் மாற்றிக்கொள்ள தேதியும் குறித்திருந் தோம். இந்த நிலையில்தான் தாலி கட்டிய விவகாரம் சமூகவலைத்தளத்தில் வெளி யாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவெளியில் இவர்கள் இப்படி நடந்துகொண்டது தவறுதான். ஆனால் அடையாளத்தை மறைக்காமல் வெளி யிட்டது சரியான செயலா?''’என கேள்வியெழுப்புகிறார்கள்.

கவனத்தை ஈர்க்க இளைய தலை முறை என்ன அக்கப்போரிலெல்லாம் ஈடுபடுகிறது?

-காளிதாஸ்