ஆன்லைன் சூதாட்ட மோசடியால் பலரும் தொடர்ச்சியாக நிதி இழப்புகளையும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் தற்கொலை முயற்சிகளிலும் ஈடுபட்டுவந்த நிலையில், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில், எவ்விதத் திட்டமிடலுமின்றி தடாலடியாக ஆன்லைன் சூதாட்டத் திற்கு தடைச்சட்டம் கொண்டுவரப் பட்டது. தடைக்கான காரணங்களை அழுத்தமாகக் குறிப்பிடாத நிலையில், அந்த தடைச்சட்டத்தை மிக எளிதாக நீதிமன்றத்தில் உடைத்தெறிந்துவிட்டன ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள். ஆன்லைன் சூதாட்டமென்பது திறமையின் அடிப்படையிலான விளையாட்டு என்று நீதிமன்றமே அதற்கு சர்ட்டிபிகேட் கொடுத்து அரசுக்கு அதிர்ச்சியளித்தது.
இதையடுத்தே தற்போது ஆட்சியிலிருக்கும் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான தமிழக அரசு, இந்த ஆன்லைன் சூதாட்டப் பிரச்சனைக்கு நீதிமன்றத்தால் சிக்கல் வராதபடி முடிவு கட்ட, ஓய்வுபெற்ற நீதிபதி யையே தலைமையாகக் கொண்டு குழு அமைக்க முடிவெடுத்தது. அந்த குழு, தீவிர ஆய்வுக்குப் பிறகு கடந்த ஜூலை 28-ஆம் தேதி தனது பரிந்துரைகளை தமிழக முதல்வரிடம் அளித்தது. அன்றைய தினமே அந்த பரிந்துரைகளை அமைச்சரவையைக் கூட்டி விவாதித்தார் முதல்வர்.
நீதிபதி சந்துரு தலை மையிலான குழு அளித்த 71 பக்க அறிக்கையில், ஆன்லைன் விளையாட்டுக்களை விளையாடு பவர்களின் திறன் எவ்விதத்திலும் அதிகரிப்பதில்லை என்றும், விளையாடும் நபர்களைத்தான் ஆன்லைன் விளையாட்டுகள் அடிமையாக்குகின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டுக்குள் நுழைபவர் களைக் கடனாளியாக்கும் திட்டத்துடன் தான் அந்த ஆப்களே வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதும் விளக்கப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் விளையாட்டுக்களால் கடந்த 3 ஆண்டுகளில் மட்டுமே 17 தற்கொலைச் சம்பவங்கள் நடந்திருப்பதையும், பலர் நிதியிழப்புக்கு ஆளாகி தற்கொலை முயற்சி களில் இறங்கியதையும் ஆதாரங்களுடன் காட்டியிருக்கிறார்கள். இறுதியாக, ஆன்லைன் சூதாட்டத்தை விளையாட்டுக்களின் பட்டியலிலேயே சேர்க்க முடியாதென்றும் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்த அறிக்கையைத் தாண்டி, பொது மக்களிடமும், ஆசிரியர்களிடமும், ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களிலும்கூட கருத்துக்கள் கேட்கப்பட்டு, தடைச்சட்டத்தை வலுவாக வடிவமைத்தது தமிழக அரசு. அந்த அவசரச் சட்டத்துக்கு கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்ததும் ஆளுநரின் பார்வைக்கு அனுப்பப்பட்டது. பல்வேறு மசோதாக்களை கிடப்பில் போடுவதில் சாதனை படைத்த ஆளுநர், இந்த அவசரச் சட்டத்துக்கு தாமதமின்றி ஒப்புதல் அளித்தார். அதையடுத்து, அக்டோபர் 7ம் தேதி. ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான அவசரச் சட்டத்தை அரசிதழில் வெளியிட்டு, தமிழக அரசு அமல்படுத்தியது.
தற்போது இயற்றப்பட்டுள்ள அவசரச் சட்டத்தின்மூலம் ஆன்லைன் சூதாட்ட தொழில்நுட்பத்தைத் தடுத்துவிட முடியுமா என்ற கேள்வியை பேங்க் ஆப் சார்ஜாவின் தலைமை தகவல் பாதுகாப்பு அலுவலர் விமலாதித்தன் மணியிடம் கேட்டபோது, "ஆன்லைன் சூதாட் டத்தால் நிகழ்ந்துவரும் தொடர் தற்கொலைகளுக்குத் தீர்வு காணும் வகையில் சமூக நீதியைப் பேணிப் பாதுகாக்கும் தமிழக அரசு கொண்டு வந்துள்ள ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் மிகவும் வரவேற்புக்குரியது. இந்த புதிய சட்டத்தின்படி, மொபைல் போனை பயன்படுத்தி சூதாடுதல் இனி தமிழ்நாட்டில் தடை செய்யப்படும். சூதாடுபவர்களும், சூதாட்ட நிறுவன விளம்பரங்களை வெளியிடும் நிறுவனத்தினரும் அபராதத்துடன் கூடிய சிறைத் தண்டனை பெறுவார்கள். தேசிய அளவிலான சூதாட்டத் தடைச் சட்டம் நடைமுறைக்கு வரும்வரை, சூதாட்ட உயிர்ப்பலிகளை தமிழகத்தில் குறைப்பதற்கு இந்த சட்டம் ஓரளவுக்கு உதவியாக இருக்கும். மகிழ்ச்சிக்குரிய இந்த நகர்வைப் போற்றும் அதே சமயத்தில், ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்க இன்னும் சிலவற்றை அரசாங்கம் செய்யவேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தில் அடிமையானவர்களுக்கு உளவியல் சிகிச்சை மையங்களை அரசு மருத்துவமனை களில் ஏற்படுத்த வேண்டும்.
பள்ளி, கல்லூரிகளில் காலாண்டுக்கு ஒருமுறை ஆசிரியர் -பெற்றோர் சந்திப்புகள் நடத்தப்பட்டு, மாணவர்களின் ஆன்லைன் விளையாட்டுப் பழக்கங்கள் கண்காணிக்கப்பட வேண்டும். சட்டவிரோதமாக இயங்கும் சூதாட்ட இணைய தள முகவரிகள், தமிழகத்தின் இன்டர்நெட் பயன்பாடுகளை ஒருங்கிணைக்கும் கேட்வேக்களில் (Internet Gateways) பதியப்பட்டு தடை செய்யப்பட வேண்டும். தமிழகத்தில் இயங்கும் சர்வதேச ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க, தேர்ச்சிபெற்ற வல்லுநர் களைக் கொண்ட ஓர் ஆணையம் அமைக்கப்பட வேண்டும். பொதுமக்களி டமிருந்து வரும் புகார்கள் இந்த ஆணையத்தால் விசாரிக்கப்பட்டு காவல்துறை நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான விழிப்புணர்வு விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட வேண்டும் சூதாட்ட நிறுவன இணைய தளங்களில், அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களின் விளம்பரங்கள் நிறுத்தப்பட வேண்டும். ஏற்கெனவே மத்திய அரசு இப்படிப்பட்ட அறிவுறுத்தலை அரசு அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆப்ப் ஒய்க்ண்ஹ ஏஹம்ண்ய்ஞ் எங்க்ங்ழ்ஹற்ண்ர்ய் (ஆஒஏஎ), ஆப்ப் ஒய்க்ண்ஹ நந்ண்ப்ப் ஏஹம்ண்ய்ஞ் ஈர்ன்ய்ஸ்ரீண்ப் (நஏஈ) போன்ற தேசிய அளவிலான ஆணையங்களுடன் நல்ல உறவை உண்டாக்கிக்கொண்டு தேசிய அளவில் இந்த ஆன்லைன் சூதாட்டத்தைக் கட்டுப்படுத்தும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு உறுதுணையாக தமிழக அரசு இருக்க வேண்டும். தேசிய அளவில் சூதாட்டம் சம்பந்தப்பட்ட வரி வருவாயைக் கட்டுப்படுத்தும் தன்ப்ங் 31ஆ - ஈஏநப தன்ப்ங்ள் 2017-ல் ஆன்லைன் சூதாட்டங்களில் ஈட்டப்படும் ஜி.எஸ்.டி. வருவாயை முழுமையாக தணிக்கை செய்து மாற்றங்கள் கொண்டுவர தமிழக பிரதிநிதிகள் முயல வேண்டும் என்றார்.''
ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டால் 3 மாத சிறை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை வழங்கப்படும். சூதாட்டத்தை நடத்துபவருக்கு ரூ.10 லட்சம் அபராதம் அல்லது 3 ஆண்டுகள் சிறை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை வழங்கப்படும். இரண்டாவது முறையும் தவறு செய்யும் நபர்கள் மற்றும் நிறுவனங் களுக்கு இரட்டிப்பாக தண்டனை வழங்கப்படும். தமிழ்நாட்டிற்குள் எந்தவொரு நபரும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடமுடியாதவாறு தடை அமல்படுத்தப் படும். சூதாட்டத்தில் ஈடுபடுபவரின் செல்போன் எண்ணின் இருப்பிடத்தின் அடிப்படையில் இந்த தடை விதிக்கப்படும். சூதாட்ட நிறுவனங்களுக்கு ஆன்லைனில் பணப்பரிமாற்றம் செய்ய வங்கிகள் ஒத்துழைக்கவும் தடை. ஒழுங்குமுறை ஆணையத்தால் விதிக்கப்படும் தண்டனைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது.
ஆன்லைன் சூதாட்டத் தடைச்சட்டத்திலுள்ள தண்டனைகளால் இந்த சூதாட்டத்தைத் தடுத்திட முடியுமா என்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வி.எஸ்.சுரேஷிடம் கேட்டபோது, இந்த தடைச்சட்டத்தை, தமிழக மாநில எல்லைக்குள் தான் பயன்படுத்த முடியும். தமிழகத்தைத் தாண்டினால் ஆன்லைன் சூதாட்டம் ஏற்புக்குரியதாக இருக்கிறது. உதாரணத்துக்கு, பான்பராக் தமிழகத்தில் தடையென்றாலும், மற்ற மாநிலங்களில் விற்கத் தடை கிடையாது. சூதாட்டமானது, கடுமையான குற்றச்செயலின் கீழ் வராது என்பதால் இதற்கான தண்டனைக்காலம் மற்றும் அபராதத்தொகை குறைவாகவே இருக்கிறது. ஒரு குற்றத்துக்கான தண்டனையானது, அதன்மூலம் குற்றவாளியை அச்சுறுத்துவதாகவோ அல்லது திருத்துவதாகவோ இருக்கும். ஆன்லைன் சூதாட்டத்தைப் பொருத்தவரை, திருத்துவது தான் முக்கிய தேவை. வெறும் தண்டனையால் மட்டுமே இதனைத் தடுத்திட முடியாது. இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் முக்கியம்'' என்றார்.