கிடைத்த இடத்திலெல்லாம் "வலிமை' அப்டேட் கேட்டுவந்த அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு அல்டிமேட்டான அப்டேட் அண்மையில் வெளியாகியுள்ளது. அதாவது, எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வந்த "வலிமை' படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவதுமாக முடிந்துவிட்டது என்பதுதான் அது. கொரோனா பரவல் காரணமாக பல கட்டங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்ட நிலையிலும், பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்திவந்தது படக்குழு.

c

ஒரு சண்டைக் காட்சியைத் தவிர்த்து அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டிருந்த நிலையில்... எஞ்சிய அந்த சண்டைக் காட்சிகளைப் படமாக்க சமீபத்தில் ரஷ்யா பறந்தது "வலிமை' டீம்.

ரஷ்யாவில் 10 நாட்களில் பரபரப்பான பைக் சண்டைக் காட்சி ஒன்றைப் படமாக்கி முடித்த படக்குழு, காட்சிகள் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக வந்திருப்பதால் முழு திருப்தியுடன் இறுதிக்கட்ட பணிகளைத் திட்டமிட்டு வருகிறதாம்.

Advertisment

இந்தநிலையில், பைக் பிரியரான நடிகர் அஜித், ரஷ்யாவில் சில நாட்கள் தங்கியிருந்து அந்நாட்டின் முக்கிய பகுதிகளுக்கு பைக்கில் ஒரு ஜாலி ட்ரிப் போக பிளான் போட்டுள்ளாராம். அதற்காக ரஷ்யாவில் உள்ள பிரபல பைக் ரைடர்களுடன் இணைந்து திட்டமிட்டு வருகிறாராம். அப்படி ஒரு பைக்கருடன் அஜித் இருக்கும் புகைப்படம் அண்மையில் சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.

யக்குநர் ஷங்கர், அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம்சரணை நாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். தற்காலிகமாக "ராம்சரண் 15' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை தில்ராஜு தயாரிக்கவுள்ளார். இப்படத்திற்கான கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுத, தமன் இசையமைக்கிறார். ராம்சரண் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மற்றொரு கதாநாயகி யை இறுதிசெய்யும் முயற்சியில் படக்குழு உள்ளது.

cinema

Advertisment

இப்படத்திற்கான தொடக்க பணிகள் நடைபெற்றுவரும் சூழலில், கார்த்திக் சுப்புராஜிடம் உதவி இயக்குநராகப் பணி யாற்றிய செல்லமுத்து என்பவர் ராம்சரண் நடிக்கவுள்ள படத்தின் கதை தன்னுடையது என்று கூறி எழுத்தாளர் சங்கத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இதையடுத்து, ஷங்கர் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இருவரிடமும் விளக்கம் கேட்டு எழுத்தாளர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் குறித்து இயக்குநர் ஷங்கர் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் எழுத்துப்பூர்வமாகவோ அல்லது நேரில் ஆஜராகியோ விரை வில் விளக்கம் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

_________________________________________

வாட்ஸ்-அப் வித் சித்துகுமார்

யூட்யூப், ஸ்பாட்டிஃபை, சாவன் போன்ற டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் தளங்கள் எண்டர்டெய்ன்மெண்ட் துறைக்குள் நுழையத் துவங்கிய பிறகு, திரைப்படப் பாடல்களைக் கடந்து இன்ட்டிபென்டண்ட் மியூசிக் ஆல்பங் களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறத் துவங்கியுள்ளன. அந்தவகையில், யூட்யூப் தளத்தில் அண்மையில் வெளியாகி வைரல் ஹிட்டடித்துள்ள ஒரு பாடல்தான் "அடிப்பொலி'. "குக் வித் கோமாளி' அஷ்வின், தியா கன்னட படத்தின் ஹீரோ யின் குஷிரவி நடிப்பில், வினீத் ஸ்ரீனிவாசன், சிவாங்கி குரலில் வெளியான இப்பாடல் சுமார் ஒருவார காலத்தில் 10 மில்லியனுக்கும் மேலான பார்வையாளர் களைக் கவர்ந்துள்ளது. இந்தச்சூழலில், இப்பாடலின் இயக்குநரும் இசை யமைப்பாளருமான சித்து குமாரிடம் ஒரு சிறிய உரையாடலை மேற் கொண்டோம்.

cinema

வினீத் ஸ்ரீனிவாசன், சிவாங்கி ஆகியோருடன் பாடல் பதிவு செய்த அனுபவம் குறித்து கேட்கையில், "பாட்டு கம்போஸ் பண்ணிட்டு, ஷூட் முடிச்சுட்டுதான் யாரை பாட வைக்கலாம்னு யோசிச்சோம். அப்போதான் வினீத் பாடினால் நல்லாருக்கும்னு தோணுச்சு. எனர்ஜியா பாடணும், அதுமட்டுமில்லாமல் ஓணம் பாட்டு அப்படிங்கிறதால ஒரு மலையாளி பாடினால் நல்லாருக்கும்னு தோணுச்சு. ஒரு இயக்குநராகவும், கம்போஸராகவும், சிங்கராகவும் அவரை எனக்கு ரொம்பவே பிடிக்கும். ஒரு மலையாள பையன் தமிழில் பாடும்போது கேக்குறதுக்கு நல்லாருக்கும். கேட்ட உடனேயே பாடறதுக்கு ஒத்துகிட்டார். ரெக்கார்டிங் ரொம்ப ஜாலியா இருந்துச்சு. யாரு இந்த பாட்டுல நடிக்கிறாங்கன்னு அவருக்குத் தெரியாது. பாட்டுப் பாடி முடிச்சுட்டு அவர் போயிட்டார். கடைசியா வீடியோ அனுப்பும்போதுதான், அதை பாத்துட்டு "அஷ்வின் நடிச்சிருக்காரா? சிவாங்கி பாடியிருக்காங்களா?' அப்படின்னு ரொம்ப எக்ஸைட் ஆனார். சிவாங்கி அம்மாகூட அவர் ஏற்கனவே ஒர்க் பண்ணிருக்கார். அதேபோல, சிவாங்கி ஆன் ஸ்க்ரீன், ஆஃப் ஸ்க்ரீன் ரெண்டுலேயும் ஒரே மாதிரிதான். அவங்க வேற லெவெல்ல ஒரு பாசிட்டிவ் எனர்ஜி தருவாங்க'' என்றார்.

அஷ்வின் உடனான நட்பு குறித்து கேட்கையில், "காதல் ஒன்று கண்டேன் எடுத்த டைம்ல தான் பழக்கம். அப்போ எப்படி சிம்பிளா இருந்தாரோ இப்பவும் அப்படித்தான் இருக்கார். கிட்டத்தட்ட எனக்கு ஒரு பிரதர் மாதிரி ஆகிட்டார். வேலைய கடந்து, பெர்சனலா தினமும் நாங்க பேசிப்போம். அவரை எப்படில்லாம் ஸ்க்ரீன்ல காட்டணும்னு எனக்கு ஆசை இருந்துச்சோ, அதைத்தான் "அடிப்பொலி'ல ட்ரை பண்ணேன். இது ரொம்பவே ஸ்பெஷலான ட்ராவல்தான். திங்க் மியூசிக் ஆரம்பிச்ச விஷயம்தான் இந்த ஆல்பத்தோட தொடக்கம். அவங்க ஃபர்ஸ்ட் அஷ்வின் கூட பேசினாங்க. அப்போ, யாரு மியூசிக் போடுறதுன்னு பேசும்போது, அஷ்வின்தான் என்னைச் சொன்னது. திங்க் மியூசிக்கும் ஓ.கே. சொன்னாங்க. அப்படித்தான் இது ஸ்டார்ட் ஆச்சு. இதுல எனக்கு உதவியா இருந்த என் டீம் எல் லாருக்கும் நன்றி சொல் லிக்கிறேன்'' என்றார்.