WHY BLOOD
SAME BLOOD!
நரேந்திர மோடியோட "பயோகிராஃபி' படமாகப்போறதாவும், அதுல மோடி வேஷத்துல சத்யராஜ் நடிக்கப்போறதாவும் ஒரே பேச்சாக இருந்தது. ஆனால்... "அப்படியெல்லாம் எதுவுமில்ல. ஒருவேளை டைரக்டர் மணிவண்ணன் இருந்தார்னா, இந்த படத்தை எடுக்குறதுக்கு சரியானவர் அவர்தான். உள்ளத உள்ளபடியே எடுப்பாரு' என சத்யராஜ் சொல்லியிருந்தார்.
"உள்ளத உள்ளபடியே நம்ம நாட்டுல எடுக்க முடியாது; வெளிநாட்டுல அது சாத்தியம். அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்போட வாழ்க்கைய சினிமாவா எடுத்துக்கிட்டிருக்காங்க. அதோட கண்டெட் வெர்ஷன் சமீபத்துல கேன்ஸ் படவிழாவுல திரையிடப்பட்டது. இது டிரம்ப் ஹோட்டல் மற்றும் கட்டுமான நிறுவனத் தொழிலதிபரா இருந்த காலகட்டத்தை மையமா வச்சு எடுக்கப்பட்டிருக்கு.
ஈரானிய திரைப்படங்கள் மூலம் பிரபலமான அலி அப்பாஸ் இயக்கத்தில் "தி அப்ரண்டீஸ்' (THE APPRENTICE) என்ற பெயரில் எடுக்கப்பட்டிருக்கும் அந்தப்படத்தில்... டொனால்ட் ட்ரம்ப்பாக (DONALD TRUMP) செபாஸ்டியன் ஸ்டான் (SEBASTIAN STAN), ட்ரம்ப்போட முதல் மனைவி இவானா ட்ரம்ப்பாக (IVANA TRUMP) மரியா பகாலோவா (MARIA BAKALOVA) நடித்துள்ளனர்.
ரொம்ப வருடங்களுக்கு முன் "தி அப்ரண்டீஸ்' என்ற பெயரில் தொலைக்காட்சியில் ஒரு டாக் ஷோ நடத்தினார் ட்ரம்ப். அதனால்தான் இந்தப் படத்திற்கும் அதே தலைப்பையே வைத்திருக்கிறார்கள்.
படவிழாவுக்கு வந்திருந்த பல நாட்டு சினிமா கலைஞர்களிடமும் "தி அப்ரண்டீஸ்' படம் பெரும் அதிர்வை ஏற்படுத்திவிட்டது. ஒட்டுமொத்த பார்வையாளர்களும் எழுந்து நின்று சுமார் எட்டு நிமிடங்கள் கை தட்டினார்கள். ஆனால் கேன்ஸ் பட விருது விழாக் குழுவினருக்கு "ட்ரம்ப்போட பகை வேணாம்' எனத் தோன்றியதால் அந்தப் படத்திற்கு விருது தராமல் விட்டுவிட்டனர்.
அதிரவிடுகிற அளவுக்கு படத்தில் என்ன இருக்கிறது?
இருந்தது?
இவானா ஏற்கனவே இருமுறை திருமண வாழ்க்கையில் தோல்வியடைந்தவர். தன்னைவிட வயதில் மூத்தவரான இவானாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ட்ரம்ப். இவர்களின் குடித்தன வாழ்க்கையில் குடும்ப வன்முறையால்; அதாவது ட்ரம்ப்பால் பாதிக்கப்பட்டார் இவானா. ஒரு கட்டத்தில் ட்ரம்ப்பிடமிருந்து விவாகரத்து கோரி வழக்குத் தொடர்ந்தார். அந்தச் சமயத்தில் விவாகரத்திற்கான காரணம் குறித்துச் சொன்ன இவானா, "ட்ரம்ப் என்னை பாலியல் வல்லுறவு செய்தார்' என தெரிவித்தார்.
அப்போது அது பெரிதாகப் பேசப்படவில்லை. ஆனால் ட்ரம்ப் அமெரிக்க அதிபரான பிறகு அது பேசுபொருளானது. பெண்கள் விஷயத்தில் அதிரடியாக நடந்துகொள்பவர் ட்ரம்ப் என ஒரு பேச்சு உண்டு.
இப்போது இவானா உயிருடன் இல்லை. ட்ரம்ப்பும், இரண்டாவது திருமணம் செய்து, அதுவும் விவாகரத்தாகி, மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார்.
இவானா உள்ளிட்ட சில பெண்களை பாலியல்ரீதியாக ட்ரம்ப் வற்புறுத்திய காட்சிகள் "தி அப்ரண்டீஸ்' படத்தில் இருக்கிறது. அதனால்தான் இந்த சலசலப்பு.
"அந்தக் காட்சிகளையெல்லாம் நீக்கலேன்னா சட்ட நடவடிக்கை எடுப்போம்' என ட்ரம்ப்பின் வக்கீல்கள் அறிவித்துவிட்டார்கள்.
"மீண்டும் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட நாலு மாதங்களே உள்ள நிலையில்... அதைக் கெடுக்கும் நோக்கத்தோடு இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கு' என ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் ஆவேசப்படுகிறார்கள்.
ஏற்கனவே 2006-ஆம் ஆண்டு கர்ப்பிணியான (தனது இப்போதைய மனைவி) மெலனியா தாய் வீட்டுக்குச் சென்றிருந்தபோது அமெரிக்க PORN MOVIESபாலியல் படங்களில் நடித்து புகழ்பெற்ற STORMY DANIELS ஸ்டோமி டேனியல்ஸ் என்கிற நடிகையுடன் தொடர்பில் இருந்து, ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகாறிவிக்கப்பட்டதும் அந்த நடிகைக்கு கட்சி நிதியிலிருந்து இந்திய மதிப்பில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கொடுத்த வழக்கில் ட்ரம்ப் குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டிருக்கிறார். ட்ரம்ப்பும் அப்பீல் செய்யவிருக்கிறார்.
ட்ரம்ப்பிற்கு ஏற்பட்ட இந்த சர்ச்சையை அமெரிக்க ஆளும்கட்சியால் பெரிதாக பரப்ப முடியவில்லை. காரணம்... அதிபர் ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் மீது சுமத்தப்பட்ட "சட்டவிரோத ஆயுதம், போதை, வரி ஏய்ப்பு' உள்ளிட்ட வழக்குகளில் 25 ஆண்டுகள் தண்டனை கிடைச்சிருக்கு. அவங்க உயர்நீதிமன்றத்துக்கு அப்பீல் போறாங்க.
இரு தரப்புமே சட்டத்திடம் சரியாக சிக்கியிருப்பதால்தான்... வடிவேலு- பிரபுதேவா காமெடியில் வருவது போல...
WHY BLOOD?
SAME BLOOD
என்கிற மாதிரி இருக்கிறார்கள்.