a story

TOUCHING உண்டு...

SOMETHINGஇல்லை!

Advertisment

திண்டுக்கல் ஜில்லா, நிலக்கோட்டை தாலுகா, எத்திலோடு பஞ்சாயத்து, முத்தாலபுரம்# விளாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இன்னாரு மகன் இன்னாரு என வாழ்ந்த குடும்பம்தான்.

Advertisment

ஆனால்... உழைக்காத வீடு பிழைக்காதே!

அக்காவின் கல்யாணத்திற்காக ஊரில் எங்கள் பரம்பரை வீடு விற்கப்பட்டது. கல்யாணம் நடத்தி முடிப்பது சாதாரண காரியமல்ல! நகைநட்டு, துணிமணி, சீர்செனத்தி என எம்புட்டோ செலவு இருக்கும். இதையெல்லாம் மனதில் வைத்து ஒரு நீண்ட கவிதை மாதிரி எழுதினேன். அதன் இறுதி வரிகள்....

அக்காவின் கல்யாணம்

அமர்க்களமாய் நடந்தது!

அக்கா...

புகுந்த வீட்டுக்கு குடிபோனாள்!

நாங்கள்...

வாடகை வீட்டுக்கு!

#இப்படியெல்லாம் கல்யாணம் நடத்தி வச்சு, கஷ்டமோ, நஷ்டமோ கிடைச்ச வாழ்க்கையை நினைச்ச வாழ்க்கையா நினைச்சி வாழ்ற தம்பதிகளும் இருந்தாலும், விவாகரத்து என்பது இப்போது அதிகரிச்சுக்கிட்டே இருக்கு.

ஆணுக்கு இணையா பெண்ணும் சம்பாதிக்கிற பொருளாதார முன்னேற்றம் பெண்ணினத்தை தலைநிமிர வச்சிருக்குன்னாலும், இது சில இடங்கள்ல வேறு வகையான ஈகோ இஷ்யூவாகி, திருமண பந்தம் என்கிற பந்தக்காலையே ஆட்டம்காண வைக்குது.

அதனால... என பெருசுகள் அட்வைஸ் பண்ணினா; "போய்யா பூமர் அங்கிள்'னு சொல்-டுறாங்க. úஸô.... நான் அட்வைஸ் பண்ணப் போறதில்ல.

உலகத்தோட நவீனத்துக்கும், வேகத்துக்கும் தகுந்தபடி கல்யாண முறைகள்லயும் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துக்கிட்டிருக்கு. சொல்லப்போனா இது ஒரு தாரளமயமாக்கல்தான்.

"-விங் டூ கெதர்' எனும் சேர்ந்து வாழும் முறை இப்போ பரவலா இருக்கு. ஒரு ஆணும், ஒரு பெண்ணும் பிடிக்கிற வரைக்கும் சேர்ந்து வாழ்றது. பிடிக்கலேன்னா "உன் பொருள் உன்னோட; என் பொருள் என்னோட'னு பிரிஞ்சிடுறது. இந்த வாழ்க்கை முறைல உடல்ரீதியான தொடர்பும் வச்சுக்குவாங்க.

ஆனா... இப்ப லேட்டஸ்ட்டா ஒரு திருமண முறை உருவாகியிருக்கு.

எதையாவது கண்டுபிடிக்கிற ஜப்பான்காரங்க "MADE IN JAPAN"னு இதையும் கண்டுபிடிச்சிருக்காங்க. இதுக்குப் பேரு "நட்புக் கல்யாணம்; FRIENDSHIP MARRIAGE' என்பதாகும்.

ஒரு ஆணும், பெண்ணும் இந்த நட்புத் திருமணம் பண்ணிக்கலாம். அதை அரசாங்கத்துல பதிவும் செஞ்சிக்கலாம். ஒரே வீட்டில், ஒரே அறையில் சேர்ந்தும் வாழலாம். கைகோர்த்துக்கிட்டே தூங்கலாம்; கவலை வந்தா ஒருத்தருக்கு ஒருத்தர் கட்டிப்பிடிச்சு, ஆறுதல் சொல்-க்கலாம்.

ஆனா... உடல் ரீதியான உறவு மட்டும் கிடையாது.

ஆமாம்... டச்சிங் ஓ.கே.; ஸம்திங் நோ!

தத்தெடுப்பு, வாடகைத்தாய், செயற்கைக் கருவூட்டல் போன்ற முறைகள்ல குழந்தையை பெத்து, வளர்க்கலாம். அதே சமயம் இப்படி "ஃப்ரெண்ஷிப் மேரேஜ் முறை'ல சேர்ந்து வாழ்ற ஒரு பெண், வெளியில் தனக்கு விருப்பப்பட்ட ஆணுடனும்; அந்த ஆண், வெளியில் தனக்கு விருப்பட்ட பெண்ணுடனும் தொடர்பில் இருக்கலாம்.

இதையெல்லாம் ஏத்துக்கிட்டுத்தான் ஒரு இளைஞனும், ஒரு இளம்பெண்ணும் இந்த "நட்புக் கல்யாணம்' செய்துக்கிறாங்க.

"நட்புக் கல்யாணம்' என்பது தப்புக் கல்யாணமா?

அல்லது... "அவங்கவங்களுக்கு பிடிச்சபடி வாழ்றது நல்லதுதானே?' என்பதா?

காலம் எனும் நாட்டமைதான் தீர்ப்புச் சொல்லவேண்டும்.