அணிகிற ஆடை விறைப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக... "அயர்ன்' பண்ணி, போடுகிற இந்தக் காலத்தில், "பெண்ணின் மார்பகங்கள் விறைப்பாக நிமிர்ந்து இருக்கக்கூடாது' என்பதற் காக பெண்களின் மார்பகங்களை அயர்ன் செய்யும் கொடுமை... நடந்துகொண்டிருக்கிறது.
காரணம்...
அறியாமை!
ஆனால் இந்த அறியாமைக்கு அந்தப் பெண்கள் வைத்திருக்கும் பெயர்... தற்காப்பு!?
ஆப்பிரிக்க நாடுகளில் பல்வேறுவிதமான சங்கடப்படுத்தும் சடங்குகள் நடந்துகொண்டி ருக்கிறது. அதில் மிக வ-மிகுந்த சடங்கு...
BREAST IRONING எனப்படும் BREAST FLATTENING,.
தமிழில் சொல்வதானால் மார்புகளை தட்டைப்படுத்துதல்.
அரைக்கோள வடிவத்தில் அடிப்பாகம் தொடங்கி, கூம்பு வடிவத்தில் முடியும் மார்பகங்களின் தூக்கலான வடிவத்தை தட்டை யாக சரித்துவிடுதல்.
சூடுபடுத்தப்பட்ட கம்பு, சூடுபடுத்தப்பட்ட நீள் சப்பட்டை வடிவ கற்கள் மற்றும் எலாஸ்டிக் பட்டை கொண்ட பெல்ட்டுகளை மிக இறுக்கமாக அணிந்துகொள்ளுதல் போன்ற வழிகளில் இந்த மார்பக தட்டையாக்கல் செய்யப்படுகிறது.
பெண்களுக்கு மார்பக வளர்ச்சி என்பது அவர்கள் சிறுமியாக இருக்கும் பத்து வயதிலிருந்தே தொடங்குகிறது. சில சமயங்களில் பரம்பரை வழியான ஜீன் மரபிலும், சில சமயங்களில் உணவுப் பழக்கங்களினாலும் சிறுமிகளுக்கு மார்பக வளர்ச்சி மிதமிஞ்சியிருக்கிறது.
இதனால் வயதுக்கு மீறிய வளர்ச்சிகொண்ட பெண் குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்லவோ, ஆண்களின் பார்வையினால் பொது இடங்களுக்குச் செல்லவே கூச்சப்படுகிறார்கள்.
சிலநேரம்... மார்பக வளர்ச்சியை மட்டும் பார்த்துவிட்டு (மன வளர்ச்சியைப் பார்க்காமல்) சிறுமிகளைப் பார்த்துவிட்டு "பொண்ணு திருமணத் துக்கு ரெடியாயிட்டா' என குழந்தைத் திருமணங் கள் நடக்கிறது. காதல் என்ற பெயரில் கனத்த தன சிறுமிகள் கடத்தப்படுகிறார்கள். அதிலும் பெண்களுக்கெதிரான வன்முறையில் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளில் பல தீவிரமாகவே இருக்கிறது.
"குழந்தை திருமண முயற்சிகளிலிருந்து எங்கள் பிள்ளைகளை பாதுகாக்கவும்; ஆண்களின் பார்வையில் கவர்ச்சியாய் தெரிவதை தடுக்கவும்; பெண்கள் கூச்சமில்லாமல் கல்வி நிலையங்கள் சென்றுவரவும்; ஆகிய இந்த மூன்று காரணங்களுக்காகவே பிரெஸ்ட் அயர்னிங் செய்வதாக... பெண்கள் பேட்டியளித்திருக்கிறார்கள்.
பத்தாவது பிறந்தநாளன்று அந்தச் சிறுமியின் உறவினர்களான மூன்று மூத்த பெண்கள் அந்தச் சிறுமியின் வீட்டிற்கு வந்தார்கள். அந்தச் சிறுமியை படுக்க வைத்து, அவளின் இரு கால்களையும் இரண்டு பெண்கள் பிடித்துக்கொள்ள... இன் னொரு பெண் அவளின் கைகளைப் பிடித்துக்கொள்ள... அந்தச் சிறுமியின் தாயார் சூட்டுக் குச்சியாலும், சூட்டுக் கல்லாலும் சிறுமியின் மொட்டு மார்பகங்களில் வைத்து கீழ் நோக்கி உருட்ட... வலியால் கதறுகிறாள் அச்சிறுமி. ஆயினும், அவளின் நன்மைக்காகத்தானே இதெல்லாம்.. என மனசை தேற்றிக்கொண்டு சித்ரவதை சிகிச்சையைத் தொடர்கிறாள் தாய்.
இந்தச் சிகிச்சையின் மூலம் அச்சிறுமியின் மார்பகங்கள் ஒருவித தொய்வுடன் கீழ்நோக்கி வளரும். இது... இப்போது 27 வயதாகும் எலிஸபெத் ஜானுக்கு பத்து வயதில் நடந்த கதை.
பிரெஸ்ட் அயர்னிங் மூலம் குழந்தைக்கு சிலசமயம் பாலூட்ட முடியாமல் போவதிலிருந்து அந்தப் பெண்ணும் பின்னாளில் பல்வேறு வகையான நோயால் பாதிக்கப்படுகிறாள்.
பல்வேறு சமூகநல சேவை அமைப்புகள் "பிரெஸ்ட் அயர்னிங்' தீமை குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். இதைத் தடுக்கும் விதமாக அரசு சட்டம் போட்டிருந்தாலும் கூட, அது பேருக்குத்தான் சட்டமாக இருக்கிறது, ஊருக்குச் சட்டமாக இல்லை.
"கேமரூன் மற்றும் நைஜீரியாவின் சில பகுதிகள் உள்ளிட்ட சில நாடுகளில் நூற்றுக்கு சுமார் 50 சதவிகிதம் பெண்கள்வரை இந்த "மார்பக தட்டையாக்கல்' முறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்'' என ANNALS OF MEDICAL RESEARCH AND PRACTICE எனும் இதழ் தெரிவித்துள்ளது.
"மார்பக அயர்னிங்'கால் சுமார் 38 லட்சம் பெண்கள் ஆப்பிரிக்காவில் பாதிக்கப்பட்டுள்ளதாக' ஐ.நா. சபை புள்ளிவிபரம் சொல்கிறது.
ஆண் அத்துமீறுவானோ? என பயந்து... அதற்காக நாலு பெண்கள் சேர்ந்து அப்பாவி சிறுமிகளை துன்புறுத்தி "பிரெஸ்ட் அயர்னிங்' செய்வதைவிட.... பெண்களிடம் அத்துமீறும் ஆணுக்கு, நாலு பெண்கள் சேர்ந்து...