cc

(17) PARROT போல WIFE MONKEY போல KEEP!

பொல்லாத ஆசைக்கு

ஏனிந்த அலைச்சல்;

Advertisment

கல்லாட்டம் இருக்கேனே

நேக்கென்ன குறைச்சல்?

மூக்கிருக்கு முழி இருக்கு

Advertisment

அழகில்லையோ நேக்கு

ஆடிக் காட்டட்டுமா?

வாங்கோன்னா,

அட வாங்கோன்னா...

-இப்படி "பத்ரகாளி' பாட்டுப் பாடி வேற பக்கம் நோக்கும் புருஷன தன் பக்கம் திருப்ப... அந்தப் பெண்மணி இந்தியப் பெண்ணா என்ன?

இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் (பெயர் ரிச்சர்ட்). ஏதோ ஒரு சபலத்துல பாலியல் தொழிலாளியான ஒரு அழகியுடன் பழக்கம் வச்சுக்கிட்டார்.

அப்பப்ப... "மானே... தேனே...' போட்டு கண்மணிக்கு செல்போன் மூலம் மெஸேஜ் அனுப்புவார். அந்த லேடி பதிலளித்ததும், அந்தப் பதில் மெஸேஜையும், தான் அனுப்பிய "சந்திப்போமா?' மெஸேஜையும் "டெலிட்' செய்துவிடுவார்.

அந்தத் தொழிலதிபர் பயன்படுத்தி வந்தது உயர் ரக "ஆப்பிள்' நிறுவன ஐபோன். இந்த போன் மூலம் அனுப்பப்படும் மெஸேஜ்களை அழித்தால்... போனில் மட்டும்தான் அழியும். இந்த போனில் அழிக்கப்பட்ட மெஸேஜ்களை "ஐ மேக்' கம்ப்யூட்டர் உள்ளிட்ட வேறு டிவைஸ்களில் இணைத்து கண்டுபிடித்துவிட முடியும்.

aa

இது தெரியாம அந்த தொழிலதிபர் "பாத்துக்க... பாத்துக்க... நல்லா பாத்துக்க...' என்பது போல் வலியப்போய் தான் யோக்கியம் என்கிற ரீதியில் தன் போனை மனைவியின் கண்களில் படும்படி வைத்திருக்கிறார். இது... சொந்த போன் மூலம் சூனியம் வைத்துக்கொண்டது போல் ஆகிவிட்டது.

ஒருநாள் போனை எடுத்த மனைவி, கம்ப்யூட்டரில் இணைத்துப் பார்த்ததில், தொழிலதிபரின் குட்டு வெளுத்துவிட்டது. இந்தப் பூனை இம்புட்டு பாலைக் குடிச்சிருக்கே என எரிச்சலான தொழிலதிபரின் மனைவி, இந்த மெஸேஜ் ஆதாரங்களை வைத்து விவாகரத்து வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.

"டெலிட் பண்ணின மெஸேஜ் எல்லாம் "ஐ மேக்' மூலம் படிக்க முடியும் என்பதை தாமதமாக அறிந்த தொழிலதிபர், "மெஸேஜ் டெலிட் ஆயிடும்கிற நம்பிக்கையிலதான் இப்படி மெஸேஜ் அனுப்பினேன். ஆனா இப்படி மோசம் பண்ணீருச்சே ஆப்பிள் நிறுவனம்' என காண்டாகி, "என் மனைவி விவாகரத்து கேட்டு நீதிமன்றம் போனதுக்கு நான் பாலியல் தொழில் பெண்களுக்கு அனுப்பிய மெஸேஜ் காரணமல்ல. அதை அழித்தும் வேறு வழியில் சேமித்து வைத்த ஆப்பிள் போன் தொழில்நுட்பமே காரணம். இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலுக்காக ஆப்பிள் நிறுவனம் நஷ்டஈடு தரணும்'' என வழக்குப் போட்டிருக்கிறார் பிசினஸ்மேன்.

இந்திய மதிப்பில் 50 கோடி ரூபாயை ஆப்பிளிடம் கேட்டிருக்கிறார்.

லண்டனில் உள்ள ரோசன்ப்ளாட் எனும் சட்ட நிறுவனத்தின் மூலம் ஆப்பிளிடம் நஷ்டஈடு கேட்டு வழக்கு போடப்பட்டுள்ளது.

ப்பிள் போனின் தொழில் நுட்பம், அதன் பயனாளியான பிசினஸ்மேனுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்திருப்பதாகவே வைத்துக் கொள்வோம்.

ஆனால் மாட்டிய மனைவிக்கு (ஹி...ஹி... நம்மூர்னா... தாலி கட்டுவாங்க! அதனால கட்டிய மனைவின்னு சொல்லலாம். மேற்கு நாடுகள்ல மோதிரம்தானே மாட்டுவாங்க. அதனால மாட்டிய மனைவினு...) ஆனால் மாட்டிய மனைவிக்கு, தான் செய்த துரோகத்தைப் பத்தி கவலைப்படலையே அந்த மனுஷன்.

"PARROT போலWIFE இருந்தாலும் MONKEY போல KEEP"னு சும்மாவா சொன்னாங்க?