aa

(16) அரசாங்கம் வச்ச APP 4!

பாஸ்போர்ட் இருந்தாத்தான்... ஃபாரின் போக முடியும். ஆனா பாஸ்போர்ட் இருந்தாத்தான் படம் பார்க்க முடியும்னு புதுசா ரூல்ஸ் போட்டிருக்கு ஸ்பெயின் நாட்டு அரசு. அந்த அளவுக்கு SPAIN ரொம்ப PAINல இருக்கு.

காரணம் என்ன தெரியுமா?

Advertisment

உலக அளவில் கொடிகட்டி (துணி கட்டாம) பறக்கிற பிசினஸ்னா...

"ஆ படம்'... "SEX படம்'... 'BLUE FILM'... "நீலப்படம்'... "அந்த மாதிரி படம்' என பலவிதமாக அழைக்கப்படும் 'PORNOGRAPHY' எனப்படுகிற'PORN MOVIES' எனப்படும் பாலியல் படத் தயாரிப்புதான்.

ஆண்டுக்கு சுமார் 9 லட்சம் கோடி ரூபாய் (இந்திய மதிப்பில்) பாலியல் படவுலகில் புழங்குகிறது. (நமது பஞ்சாப் மாநில உள்நாட்டு உற்பத்தியின் ஆண்டு வருவாய் இப்போது தான் 8 லட்சம் கோடியை எட்டவிருக்கிறது)

Advertisment

கம்ப்யூட்டர், செல்போன் உள்ளிட்ட சாதனங்கள் மூலமும் ஓ.டி.டி. இணையதளம் மற்றும் டாட்.காம் மூலமும் உலகமெங்கும் பாலியல் படங்கள் பார்க்கப்படுகிறது. ஆரம்பிக்கும்போது ஜாலியாத்தான் இருக்கும், ஆனா அதுக்கு அடிமையாகும்போதுதான் வலி தெரியும். போதைப் பழக்கத்தை விட மோசமானதாகக் கருதப்படுகிறது பாலியல் படம் பார்த்தல்!

aa

பெண்கள் விஷயத்தில் சோக்காலி களாகத் திரிபவர்களை "மைனர்' என்று கிராமப்புறங்களில் சொல்லுவார்கள். ஆனால், "மைனர்' என்பது உரிய வயதை அடையாத 18 வயதிற்கு கீழ்ப்பட்டவர்களைக் குறிக்கும். இந்தச் சிறுவர்கள் பாலியல் படம் பார்ப்பது உலகளவில் அதிகரித்து வருகிறது. பெருசு, இளசு, சிறுசு என எல்லோரும் போட்டி போட்டு பணம் கட்டிப் பார்ப்பதால்தான்... பணம் கொழிக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள ஸ்பெயின் நாட்டில் 15 வயது சிறுவர்களில் 50 சதவிகிதம் பேர் பாலியல் படம் பார்ப்பதாக ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது. இதனால் அதிர்ச்சியான அந்நாட்டு பிரதமர் பெட்ரோ சான்செஸ் மிகுந்த வருத்தத்துடன், "இது ஒருவிதத்தில் பேரழிவு' எனக் குறிப்பிட்டுள் ளார்.

இதையடுத்து சுறுசுறுப்பான அரசாங்கம், டிஜிட்டல் வாலட் பீட்டா(DIGITAL WALLET BETA) PASSPORT முறையை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இதற்கு "பஜாபோர்ட்' (PAJAPORT) என்று பெயர்.

மக்களுக்கு அரசு வழங்கியுள்ள அடை யாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களில் மக்கள் கொடுத்திருக்கும், அவர்களின் செல்போன் எண் மூலம் இந்த டிஜிட் டல் வாலட் APP-ஐ டவுன்லோடு செய்ய வேண்டும்.

டவுன்லோடு செய்பவர்களுக்கு ஆண்டுக்கு 30 CREDIT, 30 அனுமதிகள் வழங்கப்படும். இந்த 30 முறையும் 30 விதமானQR CODE குறியீடு தரப்படும். அதை ஸ்கேன் செய்து, அடையாள அட்டை யைப் பதிவு செய்தால் ஆபாசப் படம் பார்க்கலாம்.

போலி அடையாள ஆவணங்களைப் பதிவேற்றுவதே கஷ்டம். ஏனென்றால் INCIBE எனப்படும் தேசிய இணைய பாதுகாப்பு நிறுவனம், அடையாள அட்டையை பரிசோதிக்கும். இந்த பரிசோதனையை அமலாக்கத்துறை கண்காணிக்கும்.

2027-ஆம் ஆண்டுக்குள் ஐரோப்பிய யூனியனில் உள்ள எல்லா நாடுகளுக்கும் இந்த 'PORN MOVIE PASSPORT'ஐ அறிமுகப்படுத்த வேண்டும் என ஸ்பெயின் முன் அடி எடுத்து வைத்துள்ளது.

"பெயின்' வந்த பின்னாடி ஸ்பெயின் எடுத்த இந்த நடவடிக்கையை... "நொந்து' போவதற்குள் இந்தியாவும் எடுத்தால் சிறப்பு!