astory

ப்போது நக்கீரன் ஆபீஸ் சென்னை ஹாரிங்டன் சாலையில் இருந்தது. அன்றைய பிரபலமான குத்து டான்ஸ் நடிகை ஒருவர் தன் பாட்டியுடன் அலுவலகத்திற்கு வந்து "நீங்க போட்டிருக்க ஒரு நியூஸ்ல கூடுதல் விளக்கம் தரணும்' எனச் சொல்-விட்டு, வீட்டு முகவரியும் கொடுத்துவிட்டுப் போனார்கள்.

மறுநாள் போனேன்.

Advertisment

நடிகையின் வீட்டுக்குள் சுவரை ஒட்டி, மிக நீளமாக ஒரு கயிறு கட்டப்பட்டிருந்தது. அதில் பலவித வண்ணங்களில், டிûஸன்களில் ஸ்பாஞ்ச் வைத்த பிராக்கள் தொங்கவிடப்பட்டிருந்தது. அதைப் பார்த்ததும் எனக்கு வியப்பு. சினிமாவில் கவர்ச்சியைக் கூடுதலாக எடுத்துக்காட்ட இந்த வகை பிராக்களைத்தான் பயன்படுத்துவார்களாம்.

"நடிகையின் விளக்கம்' என்ற பெயரில் அவரின் பாட்டி சொன்ன விளக்கங்களைக் கேட்டுக்கொண்டு வந்தேன்.

இது நடந்து சுமார் இருபது வருடங்களாவது இருக்கும்.

Advertisment

ஆனால் நடிகை வீட்டு கொடிக்கயிறில் தொங்கிய பிராக்களை இப்போது நினைவுபடுத்துவது போல இருக்கிறது நியூசிலாந்து நாட்டில் நடந்துகொண்டிருக்கும் சம்பவம்.

நியூஸிலாந்து நாட்டின் கார்டோனா பகுதி இப்போது மிகவும் பிரபலமான பகுதியாக இருக்கிறது. இதற்குக் காரணம்... பிரா வே-! வீடுகளற்ற பள்ளத்தாக்கு போன்ற அந்த ஏரியா ஆட்டு மந்தைகள் மேய்வதற்கேற்ற நிலமாக இருக்கிறது. அங்கே குறிப்பிட்ட ஒரு இடத்தில் இரும்பு ராடுகளை நட்டுவைத்து, அதில் துணி உலர்த்தும் கொடி போல கம்பியால் கட்டி மிக நீண்ட வே- அமைத்திருக்கிறார்கள்.

இங்கே வரும் திருமணமாகாத பெண்கள் தங்களின் பிராவை கழற்றி அந்த வே-யில் மாட்டிவிட்டுப் போகிறார்கள். இது பிரபலமாகி அண்டை நாடுகளி-ருந்தும் பெண்கள் வந்து பிராக்களை மாட்டிவிட்டுப் போகிறார்கள். தொங்கவிட வரும் பெண்களைவிட, அதைப் பார்ப்பதற்கு நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு வருபவர்கள் அதிகமாகவே, "அடக் கண்றாவியே' என உள்ளூர் அரசு நிர்வாகம், வே-யை அகற்ற முன்வந்தது.

"இந்த அநீதிய தட்டிக் கேட்க ஒருத்தன் வருவாண்டா' என கொந்தளித்த மாதிரியே, உள்ளூர் ஆட்டுமந்தை விவசாயி ஒருவர் "வே-யை அகற்றக் கூடாது' என முத-ல் குரல் கொடுக்க... சமூக சேவை அமைப்புகள் இதைக் கேள்விப்பட்டு களத்தில் இறங்கி, அங்கே ஒரு பெரிய உண்டியலை வைத்துவிட்டது.

"மார்பக புற்றுநோய் விழிப்புணர்ச்சி மற்றும் சிகிச்சை நிதி' என அந்த சேவை அமைப்பு செயல்படத் தொடங்கிவிட்டது. இதனால் இந்த உள்ளாடை வே- மேலும் உலக ஃபேமஸ் ஆகிவிட்டது.

மிகச் சரியாகச் சொல்வதானால் 202 ஆண்டுகளுக்கு முன்.... ஒரு சம்பவம் நடந்தது.

அப்போது கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளும் கேரள திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தது. "குறிபிட்ட சில சாதிப் பெண்கள் தங்கள் மார்பகங்களை மறைக்கக்கூடாது. அப்படி மறைப்பதற்காக சேலையால் மாராப்பு போடுவதென்றால் அதற்கு வரி கட்டவேண்டும்' என பெண்களின் தன்மானத்தை இழிவுபடுத்தும் நடைமுறையை வைத்திருந்தது நம்பூதிரிகளின் சமஸ்தானம். இதை எதிர்த்து பல ஆண்டுகளாக "தோள் சீலை உரிமைப் போராட்டம்' நடந்தது.

"தோள் சீலை பெண்களின் உரிமை' என குரல் கொடுத்த நங்கே- எனும் ஏழைத் தமிழச்சி, மார்பகங்களை மறைத்து சேலை உடுத்தினாள். இதையறிந்து அதிகாரிகள் அவளின் குடிசை வீட்டுக்கு வரி கேட்டு வந்தனர். கொல்லைப்புறம் போன நங்கே- அரிவாளால் தன் மார்பகங்களை அறுத்து, வாழை இலையில் வைத்து அதிகாரிகளிடம் நீட்டினாள். பயந்து ஓடிவிட்டனர் அதிகாரிகள். பெண்களின் உரிமையை மீட்டுக் கொடுப்பதற்கான வழியைத் தொடங்கிவிட்டு உயிரிழந்தாள் நங்கேலி.

.

இந்தக் காலத்துப் பெண்கள் தங்கள் ஆடையை தங்களுடைய தனிப்பட்ட சுதந்திரத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். அந்த வம்பு நமக்கெதுக்கு.

ஆமா எதுக்காக நியூஸிலாந்தில் பெண்கள் தாங்கள் அணிந்திருக்கும் உள்ளாடையை வேலியில் தொங்கவிடுறாங்க?

"நல்ல கணவர் அமைய வேண்டும்' என்கிற பிரார்த்தனைக்காக!