க்கியத்துக்கான நோபல் பரிசை இந்த முறை பிரெஞ்சு எழுத்தாளரான ஆனி எர்னாக்ஸ் தட்டிச் சென்றுள்ளார். இவர் ப்ரெஞ்சு இலக்கியத்துறை பேராசிரியரும் ஆவார். 20-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள ஆனியின் நூல்கள், பிரான்ஸ் பள்ளிகளில் பாடங் களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இவரது படைப்பு கள் பெண்ணியப் பிரச்சனைகள், சமூக சமத்துவ மின்மை பிரச்சனைகளின் மீது மையம்கொள்பவை. இவரது 'க' ர்ஸ்ரீஸ்ரீன்ல்ஹற்ண்ர்ய் நாவலுக்கு இவ்வருடம் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. சுயசரிதை மற்றும் புனைகதைக்கு இடையான இடைவெளியை அகற்றும் விதத்திலான எழுத்து நடையில் ஆனி இந்த நாவலை எழுதியுள்ளதாக விமர்சகர்கள் பாராட்டுகின்றனர். நோபல் பரிசு -குளோபல் பேமஸ்!

லக நாடுகளின் விமர்சனப் பார்வைக்கு இந்திய மருந்து நிறுவனம் ஒன்று ஆளாகியுள்ளது. ஆப்பிரிக்கக் கண்டத்தில் அமைந்துள்ளது காம்பியா நாடு. இந்நாட்டில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 66 குழந்தைகள் சிறுநீரகப் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளன. உலக சுகாதார அமைப்பின் மருந்து உற்பத்திப் பிரிவு, இந்தியாவின் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த மெய்டன் பார்மாசூட்டிகல்ஸை நோக்கி குற்றம்சுமத்தும் விதத்தில் விரல் நீட்டியுள்ளது. இந்நிறுவனத்தின் ப்ரோமேதசைன் ஓரல் சொல்யூசன், மெக்காஃப் பேபி காப் சிரப், மேக்ரின் என் கோல்டு சிரப், கோவாக்ஸ் மெலின் பேபி காஃப் சிரப் ஆகிய இருமல் மருந்துகளில் டை எத்திலீன் கிளைக்கால், எத்திலீன் கிளைக்கால் அளவுக்கு அதிகமாக கலந்திருப்பதாக தெரிவித்துள் ளது. இதனை இந்நிறுவனம் மறுத்துள்ள நிலையில், மத்திய அரசின் தரக்கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மருந்து ஆலைகளுக் குச் சென்று மாதிரி சேகரித்துச் சென்றுள்ளனர். விவகாரம் முடிவுக்கு வரவில்லையென்றாலும் மேற்குறிப்பிட்ட மருந்துகள் விவகாரத்தில் கொஞ்சம் உஷாராகவே இருங்கள்! மருந்தே விஷமானால் நியாயமா?

dd

Advertisment

துப்பாக்கிச் சூடு விவகாரம் அமெரிக் காவுக்கே மட்டுமானதாக இல்லாமல் இன்று உலகளவிலான விவகாரமாக மாறிவிட்டது. தாய்லாந்தில் முன்னாள் போலீஸ்காரர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 குழந்தைகள் உட்பட 37 பேர் பலியாகியிருப்பது உலகையே அதிர்ச்சிக் குள்ளாக்கியிருக்கிறது. போதைப் பொருள் குற்றச்சாட்டில் பணிநீக்கம் செய்யப்பட்ட பன்யா காம்ராப், அக்டோபர் 6-ஆம் தேதி குழந்தைகள் பராமரிப்பு இல்லத்துக்குச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியும் கத்தியால் தாக்கியும் பலரையும் கொலைசெய்துள்ளார். பின் தப்பி வீட்டுக்குச் சென்று மனைவி, குழந்தைகளைக் கொன்றுவிட்டு அவரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதையடுத்து சட்டவிரோதமாக துப்பாக்கி உரிமம் வைத்திருப்பவர்களின் விவகாரத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறது தாய்லாந்து. புயலா வந்து அரும்புகளை உதிர்த்துட்டானே!

பா.ஜ.க. அரசு மத்தியில் பொறுப்பேற்றது முதலே இந்தியை நாடுமுழுவதும் கட்டாயமாக்குவதற்கான அடியெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக எய்ம்ஸ் மருத்துவக் கல்வி நிறுவனம், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். மத்தியப் பல்கலைக்கழகங்கள், கேந்திரிய வித்யாலாயா போன்றவற்றில் இந்தியை கட்டாயமாக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது. மேலும் இந்தப் பரிந்துரையில், மத்திய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் இந்தியில் மட்டுமே நடத்தப்படவேண்டும். இந்தியில் பணிசெய்யாத அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், “"ஒரே நாடு என்ற பெயரில் ஒரே மொழி, ஒரே உணவு, ஒரே மதம், ஒரே கலாச்சாரத்தை நிறுவ மத்திய அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டுவருகிறது. இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணிக்காதீர்கள்''’என எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். திணிக்கிறது எதுவும் நிலைக்காது!

வாட்ஸ்அப்புன்னா வாட்ஸ் அப்புதான் என பங்கஜவல்லி பாராட்டி மகிழ்ந்துகொண்டிருக்கிறார். எதற்கு பங்கஜவல்லி வாட்ஸ் அப்பைப் பாராட்டுகிறாராம்? தென்காசி மாவட்டம் சிவகங்கை நகரைச் சேர்ந்தவர் பங்கஜவல்லி. இவர் ஓய்வுபெற்ற ஆசிரியை. மூன்று வருடங்களுக்கு முன்பு இவரது 16 பவுன் தங்க நகை காணாமல்போனது. தென்காசி காவல் நிலையத்தில் புகார் செய்தார். சந்தேகத்துக்குரியவர்களை எல்லாம் விசாரித்துவிட்டு, கையை விரித்துவிட்டது காவல் நிலையம். இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்அப் பார்த்துக்கொண்டிருந்தார். அதில் ஒரு வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்ததும் பங்கஜவல்லிக்கு ஹைவோல்ட் அதிர்ச்சி. ஸ்டேட்டஸில், ஈஸ்வரி என்பவர் அணிந் திருந்த நகை இவரது நகையைப் போலவே இருந்திருக்கிறது. இந்த ஈஸ்வரி வேறு யாருமல்ல… பங்கஜவல்லி வீட்டில் முன்பு வேலை பார்த்தவர்தான். உடனடியாக தென்காசி காவல் நிலையத்தில் மீண் டும் புகார் செய்தார். போலீஸ் விசாரிக்கவேண்டிய விதத்தில் விசாரித்ததில், நகையைத் திருடியதை ஒப்புக்கொண்டார். மீட்டுக் கொடுத்தது போலீஸ் என்றாலும், துப்பறிந்து சொன்னது வாட்ஸ் அப்தானே! பாராட்டாமலிருப்பாரா பங்கஜவல்லி! சமூக ஊடகம்னா இளக்காரமா நினைச்சீங்களா!

-நாடோடி

Advertisment