மெரிக்கா, பிரேசில், இத்தாலி, இங்கிலாந்து என மேற்கத்திய நாடுகளில் கோலோச்சி வந்த கொரோனா, இரண்டாவது அலையின்போது இந்தியாவில் தன் மேலாதிக்கத்தை வலிமையாகச் செலுத்திவருகிறது. இந்தியாவில் நாளொன்றுக்கு 3.5 லட்சம் பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். நாளுக்கு மூவாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துவருகின்றனர்.

தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்கும் முன்பே, கொரோனா கோலோச்சிவரும் நிலை யில், கொரோனாவின் பரவலைத் தடுக்க தமிழகத் தில் மே-6 முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன. அதன்படி அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவிகித பணியாளர்களுடன் இயங்கலாம். வணிக வளாகங்கள் இயங்க ஏற்கெனவே தடையிருக்கும் நிலையில் சிறிய பலசரக்கு, காய்கறிக் கடைகளும் இனி மதியம் 12 மணி வரையே இயங்கும். மருந்தகங்கள், பால் விநியோகத்துக்கு எந்தத் தடையுமில்லை. இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 20 பேருக்குமேல் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

d

தமிழகத்தில் நாளொன்றுக்கு 20,952 பேருக்கும் சென்னையில் மட்டும் 6150 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்படுகிறது. தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 1,23,258 பேர் கொரோனா சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதைச் சமாளிக்க 1600 படுக்கை வசதிகள் கொண்ட ராஜிவ்காந்தி மருத்துவமனையில், இன்னும் 500 பேரை கூடுதலாக அனுமதிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கண்காணிப்பு மையங்களை அதிகரிக்கவும் நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Advertisment

மே 2-ஆம் தேதி ஸ்டாலினை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை அலு வலர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இக்கூட்டத் துக்குப் பின் வெளியிட்ட அறிவிப்பில் மு.க. ஸ்டாலின், கொரோனோ நோயால் பாதிக்கப்பட்டு கடுமையான தாக்கம் உள்ளவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாட்டைப் போக்க சென்னையைப் போன்றே தமிழகத்தின் பிற நகரங்களிலும் ரெம்டெசிவர் மருந்து வழங்க நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் சிகிச்சைகளுக்குத் தேவையான படுக்கை வசதி, ஆக்ஸிஜன் அனைத்தும் தங்குதடையின் றிக் கிடைப்பதை உறுதிசெய்யும்படி கேட்டுக்கொண்டார்.

தமிழகத்தின் முதல்வராக புதிதாக பதவியேற்க வுள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முன்னிருக்கும் முதன்மையான சவால் கொரோனா பாதிப்பைக் கட்டுக் குள் கொண்டுவருவதேயாகும். மத்திய அரசிடமிருந்து தேவையான தடுப்பூசிகளைப் பெற்று தமிழகம் முழுவதுமுள்ள மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதாகும். இதற்கான வலிமையான வியூகங்களை வகுத்து, விரைவாகச் செயல்படவேண்டும்.

st

Advertisment

டெல்லி, உத்தரப்பிரதேசம் மட்டுமல்லாமல் ஆக்ஸி ஜன் தட்டுப்பாடு தென்மாநிலங்களுக்கும் பரவிவருவது கவலையளிக்கும் விஷயமாகும். கர்நாடக மாநிலத்தின் சாம்ராஜ் நகர் அரசு மருத்துவமனையில் மே 3-ஆம் தேதி ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 24 பேர் பலியாகியிருப்பது பலரையும் கவலையடையச் செய்திருக்கிறது.

திங்கள்கிழமை இரவு 12 மணிக்குமேல் கொரோனா மற்றும் பிற நோயால் பாதிக்கப்பட்ட ஆக்ஸிஜன் தேவைப்படும் நோயாளிகளின் உறவினர்கள் தலைமை மருத்துவரிடம் இதுகுறித்துப் புகாரளித்துள்ளனர். மருத்துவமனையில் போதிய ஆக்ஸிஜன் இல்லாத நிலையில் தலைமை மருத்துவர் பெங்களூருவிலிருந்து ஆக்ஸிஜன் வருவதாகக் கூறி புகார் அளித்தவர்களைச் சமாதானப்படுத்தியுள்ளார். ஆனால் ஆக்ஸிஜன் வந்து சேராத காரணத்தால் ஒருவர்பின் ஒருவராக 24 நோயாளிகள் பலியான பரிதாபம் நடந்துள்ளது. இதுகுறித்து பெங்களூரு முதல்வர் எடியூரப்பா மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

st

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து விளக்கமளித்த அமைச்சர் சுரேஷ்குமார், "விசாரணையின் முடிவில்தான் நோயாளிகள் எதனால் உயிரிழந்தார்கள் எனத் தெரிய வரும். 24 பேரும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழந் திருக்க வாய்ப்பில்லை. மருத்துவமனையில் 6 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்ஸிஜன் இருந்தது. ஆனால் ஆக்ஸிஜன் உருளைகள்தான் பெங்களூருவிலிருந்து வரவேண்டியது தாமதமாகிவிட்டது''’என அளித்த விளக்கம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டையும் அரசின் கையாலாகாத்தனத்தையும் மறைக்க நோயாளிகளின் உடல்நிலை மீதே பொறுப் பைத் திருப்பும் அமைச்சரின் பேச்சை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டித்துள்ளன. அதேசமயம் ஆந்திரப்பிர தேசம் இந்துபுர் அரசு மருத்துவமனையிலும் திங்கட்கிழமை அதிகாலையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் எட்டு கொரோனா நோயாளிகள் இறந்துள்ளனர். ஆக்ஸிஜன் தேவையிருப்பதையறிந்து நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனை பணியாளர் களிடம் தெரிவித்தபின்பும் எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படாததால், ஆத்திரமடைந்து மருத்துவமனை ஜன்னல் கதவுகளை உடைத்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியிலும் இன்னும் ஆக்ஸிஜன் சிலிண்டருக்கான தட்டுப்பாடு நீங்காததால், பல தனியார் மருத்துவமனைகள் தங்களின் ஆக்ஸிஜன் இருப்புக்கேற்ப சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளனர்.

அமைச்சர் பியூஷ் கோயல், “இந்தியா வில் போதுமான அளவு ஆக்ஸிஜன் இருப்ப தாகவும், அவற்றை மிகவிரைவாக அனுப்பி வைப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். அவை முறையாக இந்தியா முழுவதும் வந்து சேர்வதற்குள் இன்னும் எத்தனை மருத் துவமனைகளில் எத்தனை உயிரிழப்புகள் நடக்கப்போகிறதோ?

st

இதேபோல கொரோனா தடுப்பூசிக் கும் தட்டுப்பாடு நிலவுவதால், நாடெங் கும் உள்ள தனியார் மருத்துவமனைகள் வெளிப்படையாகவே தங்கள் மருத்துவ மனையில் தடுப்பூசி போடப்படுவதில்லை என அறிவிப்பே செய்துள்ளன. மத்திய அரசு, மாநிலங் கள் கேட்ட எண்ணிக்கையில் பாதியளவிலான தடுப்பூசி மருந்துகளையே விநியோகித்து வருகிறது.

இந்தியாவில் இதுவரை 15 கோடியே 72 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப் பட்டுள்ளது. 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், மீதமுள்ள 125 கோடி பேருக்கும் தடுப்பூசி போட எத்தனை மாதம் பிடிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தடுப்பூசி தட்டுப்பாட்டைப் போக்க, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் 11 கோடி கோவி ஷீல்ட், 5 கோடி கோவாக்சின் என மொத்தம் 16 கோடி கோவிட் தடுப்பூசி மருந்துகளை வாங்க உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா வின் தலைமைச் செயல்அதிகாரி பூனவாலா, "மத்திய அரசு புதிய ஆர்டர் எதுவும் தராததால், தடுப்பூசி தயாரிப்பு விரைவுபடுத்தப்படவில்லை. எனவே தடுப்பூசி தட்டுப்பாடு குறைந்தது இன்னும் 3 மாதங்களுக்கு நீடிக்கும்'' எனத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவுக்கு போதுமான அளவு தடுப்பூசிகளை வழங்க மத்திய அரசு தவறிவிட்ட தாக மகாராஷ்டிர அமைச்சர் நவாப்மாலிக் குற்றம்சாட்டியுள்ளார். பஞ்சாப், கேரளா போன்ற மாநிலங்களும் தேவையான அளவு தடுப்பூசி வழங்கவில்லையென மத்திய அரசை குற்றம்சாட்டி வருகின்றன.

பா.ஜ.க. ஆளும் மத்தியபிரதேசத் தில் முதல்வர் சிவராஜ்சிங் சௌகான் கோவிட் பிரச்சனையைக் கையாளும் விதம் குறித்து போஜ்பூர் எம்.எல்.ஏ. சுரேந்திர பத்வாவும் மற்றொரு எம். எல்.ஏ. நாராயண் திரிபாதியும் விமர் சித்துள்ளனர். மற்றொரு முன் னாள் பா.ஜ.க. அமைச்சர் அனுப் மிஸ்ரா, “"ஆக்ஸி ஜன் சிலிண்டரும் ரெம்டெசிவிர் மருந்தும் கள்ளச்சந்தையில் விற்கப்படு கின்றன. தரகரோ, அரசியல்வாதி களின் சிபாரிசோ இருந்தால்தான் அவை கிடைக்கின்றன. அவை தேவைப்படும் சாதாரண மனிதர் களுக்குக் கிடைப்பதில்லை''’என விமர்சித்துள்ளார்.

st

மத்திய நிதித்துறை அமைச்சகம் மருத்துவ ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் மருந்து, தடுப்பூசிகளின் இறக்குமதிக்கு ஜூன் 30 வரை ஜி.எஸ்.டி. விதிக்கப்படாதென தெரிவித்துள்ளது. எனினும் இந்தச் சலுகை உள்நாட்டு நிறுவனங்களுக் கும், இலவசமாக மருந்துகளை வழங்கும் தொண்டு நிறுவனங்களுக்கும் பொருந்தாதெனத் தெரி வித்துள்ளது விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.

இந்தியாவின் கொரோனா தொற்றுப் பரவலையும், உயிரிழப்புகளையும் தடுக்க உலக நாடுகள் உதவ முன்வந்திருக்கின்றன. மருந்து நிறுவனமான பைசர் ரூ. 570 கோடிக்கு கொரோனா தடுப்பு மருந்துகளை நன்கொடையாகத் தர ஒப்புதல் கோரியுள்ளது. அரபு அமீரகத்திலிருந்து இந்தியாவின் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டைப் போக்க 140 மெட்ரிக் டன் ஆக்சிஜன் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனமும் இந்தியா வுக்கு ரூ. 135 கோடி மதிப்பிலான கொரோனா மருந் துப் பொருட்களைத் தந்துதவ முடிவெடுத்துள்ளது.

இந்நிலையில் இந்தியா முழுவதுமே கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் பொதுமக்கள் நலன் கருதி வைரஸ் தொற்றின் வேகத்தைக் குறைக்க மத்திய- மாநில அரசுகள் ஊரடங்கு விதிக்க உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. ஆனால் இந்தியாவின் பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்பதாலும், நிவாரணம் வழங்கவேண்டும் என்பதாலும் தேசிய அளவிலான ஊரடங்கைப் பிறப்பிக்க மத்திய அரசு தயாராக இல்லை. மாறாக மாநில அரசின் பொறுப்பில் ஊரடங்கு விதிக்கும் பொறுப்பை விட்டுவிட்டு கைகழுவுவதி லேயே குறியாக உள்ளது.

தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனாதான் கோலோச்சுகிறது. கைபிசைவதற்கு அதிகமாக எதுவும் செய்யாமல் அரசி யல்வாதிகள் செயலிழந்து நிற்கின்றனர்.