சிங்கள மக்களின் கோபத்தை எதிர்கொள்ள முடியாமல் இலங்கையை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சமடைந்திருந்த முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்சே, இலங்கை திரும்பியிருக்கிறார். இதனால் மீண்டும் கிளர்ச்சிகள் வெடிக்கும் அபாயம் கொழும்புவை சூழ்ந் திருக்கும் நிலையில், பிரதமர் பதவியைக் கைப்பற்ற திட்டம் தீட்டி வருகிறார்கள் ராஜபக்சே சகோதரர்கள்.
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார சீரழிவுகளை ஏற்படுத்திய இன அழிப்பு குற்றவாளி களான ராஜபக்சே சகோதரர்களின் ஆட்சி அதிகாரத்திற்கு எதிராக சிங்களவர்களின் போராட்டங்களும் கோபமும் கடுமையாக வெடித்தது. இதனால் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி களால் பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்சேவும், அதிபர் பதவியிலிருந்து கோத்த பாய ராஜபக்சேவும் விலகினர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/srilanka_31.jpg)
உயிருக்கு பயந்து வெளிநாடுகளுக்கு தப்பியோடினார் கோத்தபாய ராஜபக்சே. மாலத்தீவு, சிங்கப்பூர், தாய்லாந்து என 3 நாடுகளில் அகதியாக அடைக்கலமானார். அமெரிக்காவில் செட்டிலாக நினைத்த அவரால் அந்நாட்டுக்குள் நுழைய முடியவில்லை.
இதற்கிடையே இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும் பான்மை பலம் ராஜபக்சேக் களின் கட்சிக்கே இருந்ததால், அதிபர் பதவியில் எதிர்க்கட்சி கள் அமர்ந்து விடாமல் காய் களை நகர்த்திய ராஜபக்சேக்கள், தங்களின் எதிரியான ரணில் விக்கிரம சிங்கேவோடு கைகோர்த் தனர். இந்தியாவின் திட்டமும் இதில் இருந்தது. ராஜபக்சேக்களிடமிருந்த எம்.பி.க்களின் வலிமையோடு இலங் கையின் அதிபர் நாற்காலியை கைப்பற்றினார் ரணில் விக்கிரமசிங்கே.
நாடாளுமன்றத்தில் ரணில் கட்சிக்கு அவரைத் தவிர ஒரு எம்.பி. கூட கிடையாது. நாடாளுமன் றத்தில் ஒரு எம்.பி. கூட இல்லாத ஒரு கட்சியின் தலைவர் (ரணில்) அதிபரான விந்தையும் இலங்கை அரசியலில் அரங்கேறியது. அதிபரான ரணிலும் சீரழிந்த பொருளா தாரத்தை மீட்டெடுக்க முயற்சிக்காமல், ராஜ பக்சே சகோதரர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதி லேயே அதிகம் கவனம் செலுத்திவந்தார்.
வெளிநாடுகளில் 50 நாட்கள் அகதியாய் அடைந்து கிடந்த கோத்தபாய ராஜபக்சே, கடந்த 2-ந்தேதி நள்ளிரவில் இலங்கைக்கு திரும்பினார். அவருக்கு, அதி உயர் பாதுகாப்பளித்திருக்கிறார் ரணில் விக்கிரமசிங்கே. அவரை இலங்கைக்கு அழைத்து வரும் அனைத்து ஏற்பாடுகளையும் ரணில் அரசாங்கமே ரகசியமாக கவனித்துக் கொண்டிருக்கிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/srilanka1_19.jpg)
சிங்கள மக்களின் கடுமையான கோபத்தையும் எதிர்ப்பினையும் பொருட்படுத்தாமல், கோத்த பாயவை கொழும்புக்கு திரும்ப வைத்து பாதுகாத்துள்ள ரணில் மீது, சிங்கள மக்களின் ஆத்திரம் திரும்பியுள்ளது. எப்போது வேண்டு மானாலும் ரணிலுக்கு எதிராகவும் கோத்தபாய வுக்கு எதிராகவும் கிளர்ச்சிகள் வெடிக்கலாம் என்ற அபாயம் கொழும்புவை சூழ்ந்திருப்பதாக அங்கிருந்து தகவல்கள் கிடைக்கின்றன.
இது குறித்து கொழும்பு பத்திரிகையாளர்கள் சிலரிடம் பேசியபோது, ‘’"வெளிநாடுகளில் தஞ்சமடைந்த கோத்தபாயவுக்கு எதிராக, தமிழின அழிப்பின் போர்க் குற்றங்களுக்கு உயிர் கொடுக்கும் வகையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்கான சில முயற்சிகளை வெளிநாடுகளிலுள்ள ஈழத்தமிழ் அமைப்புகளும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் எடுத்து வந்தனர். இதனால் சர்வதேச சமூகம் தன் மீது வழக்குகள் பதிந்து தன்னை கைது செய்யக்கூடும் என்ற அச்சத்தில் இருந்தார் கோத்தபாய ராஜபக்சே.
இதனை ரணிலிடமும் மகிந்த ராஜபக்சேவுட னும் விவாதித்தபடியே இருந்த கோத்தபாய, இலங்கைக்கு திரும்ப வழியை ஏற்படுத்துங்கள் என அழுத்தம் கொடுத்தபடி இருந்தார். அதற்கு ரணில் விக்கிரமசிங்கே, "நீங்கள் நாடு திரும்புவதை இந்தியா விரும்பவில்லை. கொஞ்சநாள் அமைதியாக இருங்கள்' என்றே சமாதானப்படுத்தி வந்தார்.
இதற்கிடையே, 50 நாட்கள் கடந்த நிலையில், அவரை வெளியேற வலியுறுத்தி தாய்லாந்து நாடு நெருக்கடி கொடுத்தது. தாய்லாந்திலிருந்து வேறு ஒரு நாட்டுக்குச் செல்ல எந்த ஒரு நாடும் அவரை ஏற்க முன்வரவில்லை. இந்த நிலையில்தான், கோத்தபாயவுக்கு எதிரான இன அழிப்பு குற்றங்களை அமெரிக்கா ஆராயத் துவங்கியிருக் கிறது. இதனையறிந்த கோத்தபாய, இலங்கைக்கு என்னை அழைத்துக்கொள்ள வேண்டும் என ரணிலிடம் வலியுறுத்திய நிலையில், அவரை கொழும்புவுக்கு அழைத்து வந்துவிட்டார் ரணில்.
இலங்கைக்கு மீண்டும் வந்துள்ள கோத்த பாயவை ரகசியமாகச் சந்தித்து விவாதித்துள்ளார் மகிந்த ராஜபக்சே. அந்த சந்திப்பில், ஆட்சி அதிகாரம் மீண்டும் என் கைக்கு வரவேண்டும் எனச் சொல்லியுள்ளார் கோத்தபாய. அதனால் இலங்கையின் பிரதமர் பதவியில் உட்கார ராஜபக்சே சகோதரர்கள் திட்டமிட்டுள்ளனர்.
ராஜபக்சேக்களின் ஆதரவுடன்தான் அதிபராக இருக்கிறார் ரணில். அதனால் கோத்த பாயவின் பிரதமர் ஆசையை அவர் நிராகரிக்க மாட்டார். ஆனால், மக்களின் மனநிலையையும் எதிர்க்கட்சிகளின் அரசியலையும் கவனித்தே இதில் முடிவெடுக்க முடியும். சில நாட்கள் பொறுத்திருங்கள் என்று கோத்தபாயவிடம் ரணில் சொல்லியிருக்கிறார்.
இதற்கிடையே, அரசாங்கத் தின் முக்கிய அதிகாரிகளும், ராஜபக்சே கட்சியின் சில எம்.பி.க்களும் கோத்தபாயவை சந்தித்து வருகின்றனர். ராஜ பக்சேக்களின் தலையீடுகள் ஆட்சி ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அதிகரித்தாலும், பிரதமர் பதவியில் கோத்தபாய அமர்ந் தாலும் மீண்டும் கிளர்ச்சிகள் வெடிக்கும்'' என்கி றார்கள் கொழும்பு பத்திரிகையாளர்கள்.
கோத்தபாய நாடு திரும்பியிருந் தாலும், இலங்கைத் தீவில் அதிகாரமற்று அகதியாக இருக்க அவரால் முடியாது. இழந்த அதிகாரங்களை மீண்டும் கைப்பற்றவே திட்டமிட்டு வருகின்றனர் ராஜபக்சே சகோதரர்கள். அதிகாரத்தில் மீண்டும் அமர்ந்து போர்க்குற்றங்களில் இருந்து தப்பிக்கத் துடிக் கின்றனர்.
-சஞ்சய்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-09/srilanka-t.jpg)