Skip to main content

டூரிங் டாக்கீஸ்!

Published on 07/04/2018 | Edited on 08/04/2018
ஆளைக் கொன்று... மானைக் கொன்று...! 1998-ஆம் ஆண்டு... "ஹம் சாத் சாத் ஹைன்'’ எனும் இந்திப் படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர்கள் சல்மான்கான், சயீப் அலிகான், நடிகைகள் தபு, நீலம் மற்றும் சோனாலி பிந்த்ரே ஆகியோர் ராஜஸ்தான் மாநிலம் சென்றிருந்தனர். அக்டோபர் 1-ஆம் தேதியன்று ஜோத்பூரை அடுத்த கன்கான... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

4 பெண் இயக்குநர்களின் ஆந்தாலஜி; இயக்குநர் பா. ரஞ்சித் பர்ஸ்ட் லுக் வெளியீடு

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

 4 An Anthology of Women Directors; Director pa Ranjith First Look Released

 

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் பா. ரஞ்சித். திரைப்படம் இயக்குவதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய நீலம் தயாரிப்பு நிறுவனத்தின் வழியாகத் திரைப்படங்களைத் தயாரித்தும் வருகிறார். அந்த வகையில் நான்கு பெண்கள் இயக்கிய ஆந்தாலஜி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் பா. ரஞ்சித் தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

 

பெண்களின் மாறுபட்ட கதைகளைக் கொண்டாட, நான்கு பெண் இயக்குநர்கள் இயக்கிய ஆந்தாலஜி படத்திற்கு ‘கள்ளிப் பால்ல ஒரு டீ’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.  இதன் இயக்குநர்களாக அபிஷா, சினேகா பெல்சின், கனிஷ்கா, சிவரஞ்சனி ஆகியோர் உள்ளனர். மேலும் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

 

 

Next Story

ஸ்டைலான லுக்கில் சிரஞ்சீவி ; வெளியானது மோகன் ராஜா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

Published on 04/07/2022 | Edited on 04/07/2022

 

 Chiranjeevi, salmaan khan & Mohan Raja ; First look of released of godfather movie

 

மலையாளத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் 'லூசிஃபர்'. நடிகர் ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளியான இப்படம், பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது. அந்த வகையில் இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கை மோகன் ராஜா இயக்கி வருகிறார். கதாநாயனாக சிரஞ்சீவி நடிக்க கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் சல்மான் கான் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' மற்றும் 'என்.வி.ஆர் ஃபிலிம்ஸ்' இணைந்து தயாரிக்கும்  இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். 'காட்ஃபாதர்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில் 'காட்ஃபாதர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் ஸ்டைலான லுக்கில் சிரஞ்சீவி அமர்ந்திருக்கிறார். இதனை அதிகாரப்பூர்வமாக தங்களது ட்விட்டர் பக்கத்தில் மோகன்ராஜா உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் பகிர்ந்துள்ளனர். அதோடு ஒரு புது வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ ரசிகர்களின் வரவேற்பை பெற்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.