திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரை சேர்ந்தவர்கள் 25 வயதான ஜனார்த்தனன், 24 வயதான சரவணன். இருவரும் சரக்கு குரூப் என ஒரு குழுவை வாட்ஸ் அப்பில் உருவாக்கி அதில் 150 பேரை உறுப்பினர்களாகச் சேர்த்துள்ளனர். அந்த 150 பேரில் பலர் சரக்கு விற்பனை யாளர்கள். வாணியம்பாடி, ஆம்பூர், நாட்றாம்பள்ளி நகரத் தையும், அதனை சுற்றியுள்ள கிராமங்களையும் சேர்ந்தவர்கள். இவர்கள் தங்களிடம் உள்ள சரக்கு பட்டியல், விலை விபரத்தை தினமும் குழுவில் பதிவிடுவார்கள். யாராவது சரக்கு கேட்டால் அவர்கள் எந்தப் பகுதி, எந்த சரக்கு வேண்டும் என்பதை கேட்டுக்கொண்டு அதனை குரூப்பில் பதிவிடுவார் கள். குழுவில் உள்ளவர்கள் அந்தப் பகுதி தங்களுக்கு அருகில் இருந்தால், அவர்கள் கேட்ட சரக்கும் இருந்தால் தகவல் பதிவிடுவார்கள். வாங்குபவர் வாட்ஸ்அப்பில், லொக்கேஷன் ஷேர் செய்தவுடன் அங்கு சென்று சரக்கு தந்துள்ளார்கள்.
குவார்ட்டர் 400 முதல் 600 ரூபாய் வரையிலும், ஆஃப் 1000 முதல் 1500 ரூபாய் வரையிலும், ஃபுல் பாட்டில் 2000 முதல் 4000 வரையிலும் விற்பனை செய்துள்ளார்கள். வாணியம்பாடி நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமப்பகுதிகளில் சரக்கு விற்பனை சக்கப்போடு போட்டுள்ளது. இதுபற்றிய தகவல் திருப்பத்தூர் எஸ்.பி விஜயகுமாருக்கு தெரிவிக்கப்பட, அதிர்ச்சியான அவர் இதனை கண்காணிக்கச் சொல்லியுள் ளார். அந்த வாட்ஸ்ஆப் குரூப்பில் உள்ள ஒருவனை பிடித்து அதற்குள் நடப்பவற்றை கவனித்த தனிப்படை போலீஸ் அதிகாரி ஒருவர், சரக்கு விற்பனை செய்வது உறுதியானதும் குரூப் உருவாக்கிய அட்மின்களை கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் நடத்திய விசா ரணையில், முதலில் காய்கறிகள்தான் விற்பனை செய்துகொண்டு இருந் தோம். அதில் வருமானம் குறைவாக இருந்தது. அப்போதுதான் மதுபானம் பலரும் கேட்டார்கள். அதன்பின்பே ஐடியா வந்து இரயில் மூலமாக கர்நாடகாவில் இருந்து சரக்குகளை கொண்டு வந்து விற்பனை செய்யத் துவங்கினோம். இதில் எங்களிடம் சரக்கு வாங்கி விற்பவர்களையும் இணைத்து வாட்ஸ்அப்பில் குழு தொடங்கி, அவரவர் ஏரியாவில் விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தோம் என்றுள்ளார்கள். குரூப்பில் இருந்த இன்னும் 8 பேரை கைது செய்துள்ளது போலீஸ். திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டும் 5 ஆயிரம் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன எனக் கூறப்படுகிறது.
அத்தியாவசிய பொருட்கள் கொண்டுசெல் லும் வாகனங்களுக்கு இந்தியா முழுமைக்கும் தடையில்லை. இதனை பயன்படுத்திக்கொண்டு வெளிமாநில மதுபானத்தை ரயில் மற்றும் லாரிகள் வழியாக தமிழகத்திற்குள் கொண்டுவரு கிறார்கள். விழுப்புரம் மற்றும் கடலூரில் சில லாரி ஓட்டுநர்கள் மதுபான பாட்டில்கள் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளனர் என்கிறார்கள் போலீஸார். சாராசரி விலையை விட ஐந்து முதல் 10 மடங்கு அதிக விலை தந்து மதுபாட்டில்கள் விற்கப்பட அவ்வளவு தொகை தந்து வாங்கி குடிக்க குடிமகன்கள் தயாராகயிருந்தும் பாட்டில் மது கிடைக்காதவர்கள் சாராயத்தை தேடுகின்றனர்.
வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்கள் வரை பரந்துவிரிந்துள்ள ஜவ்வாது மலையில் காய்ச்சப்படும் நல்ல பவரான மலைச் சாராயத்தில் 1 லிட்டரில் 3 லிட்டர் தண்ணீர் ஊற்றினாலும் கிக்காக போதையேறும் என்பதால் அதற்கான டிமாண்ட் அதிகமாகிவிட்டது. இந்த 3 மாவட்ட எல்லைகளை ஒட்டி ஆந்திரா, கர்நாடகா மாநில எல்லைகள் உள்ளன. ஆந்திரா, கர்நாடகா எல்லைப்பகுதிகளில் காய்ச்சப்படும் சாராயமும் தமிழகத்துக்குள் வருகின்றன. வெளிமாநில சாரா யம் லிட்டர் 500, 600 என விற்பனை செய்யப்பட் டால், உள்ளூர் மலைச்சாராயம் லிட்டர் 1000 ரூபாய் என விற்பனை செய்யப்படுவதாக மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாரே கூறுகின்ற னர். இதுபோல தமிழகத்தின் அனைத்து மாவட்டங் களிலும் சாராய விற்பனை அதிகரித்துள்ளது. இது குறித்து மருத்துவர்கள் சிலரிடம் கேட்டபோது, "கடுமையாக வேலை செய்யும் உடலுழைப்பு தொழிலாளர்கள், கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்பவர்கள் தங்களது உடல் அசதியைப் போக்க மது குடிக்கிறார்கள். அதைவிட அதிகமாக ஜாலிக்காக குடிப்பவர்களும் இருக்கிறார்கள். இரண்டு தரப்பை சேர்ந்த தீவிரமான மதுப்பிரியர்களால் உடனடியாக மதுவை நிறுத்தமுடியாது. உடனே நிறுத்தினால் வேறுசில உடல்நலப் பிரச்சினை வரும். அதனால் படிப்படி யாக நிறுத்தும் வழிமுறைகளை கூறுவோம். தற்போது ஊரடங்கு காலத்தில் தீவிர மதுப்பிரியர் களுக்கு மது கிடைக்காததால் பலரும் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். குடித்தே ஆகவேண்டும் என்பதால் சாராயத்தை குடிக்கிறார் கள். இது அதிக ஆபத்துக்குரியது'' என்கிறார்கள்.
ரயில்வே காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு உத்தரவால், மே 25 டூ 30-ஆம் தேதிக்குள் ரயில்கள் மூலம் அண்டை மாநிலங்களில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தலை கண்டு பிடித்து 50 வழக்குகள் பதிவுசெய்து 1541 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டு, 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளர். திருப்பத்தூர், வேலூர், திருவள்ளுவர் மாவட்டத்தில் ரயில்வே போலீஸார் எச்சரிக்கையாக இருக்கும்படி கூறப்பட்டுள்ளது என்கிறார்கள்.
டெல்லி அரசுபோல ஆன்லைன் புக்கிங், டோர் டெலிவரி சிஸ்டத்தை டாஸ்மாக் மூலம் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்துவார்களா என எதிர்பார்க்கின்றனர் குடிமகன்கள்.