நக்கீரன்தான் அந்த எச்சரிக்கை மணியை பலமாக அடித்தது. சாமியார் சிவசங்கர பாபாவின் நிர்வாகத்தில் உள்ள பள்ளியில் நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து ஆதாரங்களுடன் தொடர்ச்சியாக கவர் ஸ்டோரிகளை வெளியிட்டு வந்தது. நக்கீரன் யூலிடியூப் சேனலிலும் பல லட்சக்கணக்கானவர்களிடம் பாபாவின் லீலைகள் அம்பலமாயின. அது பொதுமக்களிடம் மட்டுமல்ல, போலீசின் கவனத்தையும் ஈர்க்கத் தவறவில்லை.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவிகள் சிலர் அவரது குடும்பத்தினர் ஆகியோர் நக்கீரனைப் பெரிதும் நம்பினர். எப்படியாவது நடவடிக்கை எடுத்து, மாணவிகளின் எதிர்காலத்தைக் காப்பாற்ற வலியுறுத்தினர். அதற்கேற்ப புகார் தருவதற்கும் ஆயத்தமாயினர். இதனை தமிழக காவல்துறை தலைவரான டி.ஜி.பி. திரிபாதியின் கவனத்திற்கு கொண்டு சென்றது நக்கீரன்
09:06:2021 புதன் கிழமை காலை 10 மணி :
நக்கீரன் அலுவலகத்தில் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளியின் மாணவிகள் மீதான பாலியல் அத்துமீறல்கள், அவை சம்பந்தப்பட்ட ஆவணங்கள், அதுபற்றி நேரில் தெரிவிக்க முன்வந்தவர்கள் மற்றும் பாலியல் குற்றங்களின் தன்மை பற்றிய முழு ரிப்போர்ட்டையும் நக்கீரன் ஆசிரியரிடம் கொடுத்தோம். மிகவும் மனவேதனையுடன் இந்த விவரங்களையும் அதற்கான ஆதாரங்களையும் ஆசிரியர் அவர்கள் பார்த்து, "இவ்வளவு மோசமாகவா நடந்து வருகிறது இந்த சிவசங்கர் பாபாவை சட்டத்திற்க்கு முன் நிறுத்தி தண்டனை வாங்கித் தரவேண்டும்' என்று சொன்னபடி நமது வழக்கறிஞர் பி.டி.பெருமாளிடம் செல்பேசியில் ஆலோசனை செய்தார்.
வழக்கறிஞரின் வழிகாட்டுதலின்படி உடனடியாக புகார் மனுவை தயார் செய்தோம். நமது ஆசிரியர் உடனே தமிழக காவல்துறை சட்டம்லிஒழுங்கு டி.ஜி.பி.யைத் தொடர்பு கொண்டு, நேரில் சந்தித்து புகார் மனு தருவதாகக் கூறினார். ஆசிரியர் நேரில் சென்றால், என்ன விவரம் என பரபரப்பாகிவிடும் என்பதால், "தங்கள் நிருபரிடம் கொடுத்து அனுப்புங்கள். உரிய நட வடிக்கை எடுக்கிறேன்' என்றார் டி.ஜி.பி. நாம் சற்றும் தாமதிக் காமல் புகார் மனுவுடன் சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள டி.ஜி.பி. அலு வலகத்திற்கு விரைந் தோம்.
09:06:2021 மதியம் 1:30 மணி :
டி.ஜி.பி. கேம்ப் ஆபிசில் வரவேற் பறையில் இருந்த காவலர் ஜான்சனிடம் நக்கீரனில் இருந்து வந்திருப்பதையும் டி.ஜி.பி.யை சந்திக்க வேண்டும் என்பதையும் டி.ஜி.பி.யிடம் அப்பாயின்ட் மெண்ட் வாங்கியிருக்கிறோம் என்றும் கூறியதும், சற்று நேரத்தில் முதல் தளத்திற்கு அனுப்பி வைத்தார். அங்கு பார்வையாளர் சந்திப்பறையில் அமர வைக் கப்பட்ட நிலையில், டி.ஜி.பி. திரிபாதி அந்த அறைக்கே வந்தார். அங்கே இருந்த மற்றவர்களை சற்றுநேரம் வெளியில் இருக்கும்படி கேட்டுக்கொண்டு, சிவசங்கர் பாபா மீதும் அவரது பள்ளி மீதுமான இந்த வழக்கை பற்றிக் கேட்டு தெரிந்து கொண்டார்.
முழுமையாக நேரம் ஒதுக்கிக் கேட்டுக்கொண்ட டி.ஜி.பி. திரிபாதி, "இவ்வளவு மோசமாக நடந்திருக்குதா?'' என்றபடி, "உடனடியாக ஏ.டி.ஜி.பி. தாமரை கண்ணன் மேற்பார்வையில் ஸ்பெஷல் டீம் போட்டு ரகசியமாக விசாரித்து வழக்கைப் பதிவுசெய்கிறேன்'' என்று கூறிவிட்டு புகார் மனுவையும் ஆதாரங்களையும் ஏ.டி. ஜி.பி.யிடமே தரும்படி சொல்லிவிட்டு தனது அறைக்கு சென்றுவிட்டார்,
சற்று நேரத்தில், நாம் உட்கார்ந்திருந்த அறைக்கு வந்த ஏ.ஆர். காவலர், "ஏ.டி.ஜி.பி. அய்யா தங்களை அறைக்கு அழைக்கிறார்' என்று அழைத்துச் சென்றார்.
வரவேற்று தண்ணீர் கொடுத்தார் ஏ.டி.ஜி.பி. தாமரைகண்ணன். பின்னர் புகார் மனுவை அதற் கான ஆதாரங்களை யும் கொடுத்து, பின்னர் மாணவிகளுக்கு நேர்ந்துவரும் பாலியல் கொடுமைகளை விவரித்தோம். அவற்றில் கவனம் செலுத்திய ஏ.டி.ஜி.பி. தாமரைகண்ணன், உடனடியாக வடக்கு மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமாருக்கு போன்செய்து, "இந்தப் புகார் பற்றி ஸ்பெசல் இன்வஸ்டிகேஷன் செய்து சம்பந்தப்பட்ட சிவசங்கர் பாபா மற்றும் இதற்கு உடந்தையானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி' உத்தரவிட்டார். வடக்கு மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமாருடன், செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. டாக்டர் விஜயகுமாருக்கும் உத்தரவிட்டார் ஏ.டி.ஜி.பி. தாமரைக்கண்ணன். நக்கீரன் அளித்த புகார் மீதான நடவடிக்கையில் டி.ஜி.பி. அலுவலகம் பரபரப்பாக செயல்பட்டது.
09:06:2021 மதியம் 2:30 மணி:
ஆலந்தூரில் உள்ள வடக்கு மண்டல ஐ.ஜி. அலுவலகத்திற்கு நேரில் சென்றோம். சற்று காலதாமதத்திற்கு பின் உள்ளே அழைத்தனர். அப்போதுதான் புரிந்தது, செங்கல்பட்டு எஸ்.பி. டாக்டர் விஜயகுமார் வருகைக்காக நம்மை காத்திருக்க செய்தது. அவர் வந்தவுடன் வடக்கு மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமார் இருந்தார். சுஷில் ஹரி பள்ளி பற்றியும் அங்கு நடந்துவரும் பாலியல் குற்றங்கள் பற்றியும் புகார் மனுவுடன் ஆதாரங்களையும் வழங்கியவுடன், இந்த வழக்கு விசாரனை முடியும்வரை போலீசாருடன் ஒத்துழைக்கும்படி நம்மிடம் கூறினார் ஐ.ஜி. சந்தோஷ்குமார்,
10:06:2021 வியாழக்கிழமை காலை 10 மணி:
செங்கல்பட்டு எஸ்.பி. அலுவலகத்தில் உடனடியாக டி.எஸ்.பி. மணிமேகலை மற்றும் டி.எஸ்.பி. கல்பனா ஆகியோர் கொண்ட இரு தனி படைகளை அமைத்தனர். அவர்களின் இரு பிரிவுகளாக பிரிந்து மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சத்தியபாமா மற்றும் ஆய்வாளர் அஞ்சுலட்சுமி என இருபிரிவாக பிரிந்து மாணவிகளிடம் தனியாகவும் ரகசியமாகவும் சிவில் உடையில் விசாரிக்க ஆயத்தமாயினர்.
அதன்படி காலை 10:30 மணிக்கு தனிப்படை போலீசார் மாணவிகள் தரப்பைத் தொடர்பு கொண்டனர்.
காலை 11:30 மணியளவில் தி.நகர் பகுதியில் உள்ள முன்னாள் மாணவி ஓவியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மற்றும் அவர் தங்கை கார்த்திகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகியோரை தனிப்படை போலீஸார் அஞ்சுலட்சுமி டீம். அவர்களின் வீட்டிலேயே விசாரிக்கத் தொடங்கினர். தனி அறையில் இருவரிடமும் விசாரித்து வீடியோ பதிவையும் செய்தனர் இந்த விசாரணை காபிலிடீ டைம் தாண்டி, லஞ்ச் டைமையும் கடந்து மாலை 6 மணிக்கு முடிவடைந்தது.
ஓவியாவின் கணவர் ஒத்துழைப்புடன் காரில் வண்டலூர் பகுதியில் இருக்கும் மைனர்பெண்ணான ப்ரியாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அழைத்து, அவரின் விருப்பத்தின் பெயரிலே காரிலே பிரியாவிடம் வைத்து ஓவியா மற்றும் காவல் ஆய்வாளர் அஞ்சுலட்சுமி விசாரித்து ஸ்டேட்மெண்டு எழுதி ப்ரியாவிடமும் அவர் அம்மாவிடமும் கையெழுத்து வாங்கி னார்கள். வாக்குமூலம் வாங்குகிற இந்தப் பணி முடிவடைய இரவு 9:00 மணியானது. அதுவரை ஓவியாவின் கணவர் மிகவும் பொறுமை காத்து, காருக்கு வெளியே சுற்றிக் கொண்டி ருந்தார்.
அதே சமயம், மதியம் 11:30 மணிக்கு ஈ.சி.ஆர். சாலையில் உள்ள அட்சயா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வீட்டுக்கு வந்த தனி காவல் ஆய்வாளர் சத்தியபாமா மற்றும் போலீசார் தனியறையில் முதலில் அட்சயாவிடம் விசாரித்து வாக்குமூலம் பெற்றார். அதன்பின், சொர்ணா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வீட்டில் வசதியில்லை என்ற காரணத்தால் அட்சயா வீட்டுக்கே வரவழைக்கப்பட்டார். இருவரையும் ஒவ்வொருவராக விசாரித்தனர். முதலில் அட்சயாவை விசாரித்து வீடியோ பதிவை செய்தனர். ஸ்டேட்மெண்டு எழுதிக்கொண்ட போலீசார் அட்சயாவிடம் கையெழுத்தை வாங்கினர்.
விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் நக்கீரன் பல ஆவணங்களை வழங் கியது. மணி மாலை 4:30. எல்லாரும் அப்போதுதான் சாப்பிட்டோம். அனை வருக்கும் அட்சயாவின் அம்மா க்ரீன் டீ தந்தார்.
மாலை 5:00 மணிக்கு சொர்ணாவின் வாக்கு மூலத்தை வாங்க ஆரம்பித்தார்கள் "இரவோடு இரவாக சொர்ணாவின் வீட்டிலிருந்து போன் மேல் போன் வந்தது. ஒரு கட்டத்தில் இரவு பசி எடுக்க ஆரம்பித்தது. அட்சயாவின் அம்மா தந்த காபி வித் பிஸ்கட் சற்று பசியை அடக்கியது. அந்த கேப்பில் நக்கீரன் கேமரா டீமின் உதவியுடன் அட்சயா வின் வீடியோ பேட்டியும் பதிவு செய்யப்பட்டது. ஒரு வழியாக சொர்ணாவின் வாக்குமூலத்தை வாங்கிய போலீசார் வீடியோ பதிவும் செய்து கொண்டு இரவு 10:30லிக்கு விசாரணையை முடித்தனர். காவல்துறையின் அக்கறையான விசாரணையையும், அவர்களிடம் வாக்குமூலங்கள் அளித்தவர்கள் பற்றியும் நமது ஆசிரியருக்குத் தகவல் தெரிவித்தோம்.
11:06:2021 வெள்ளிக்கிழமை காலை 10:30 மணி
நம்மிடம் தொடர்புகொண்ட போலீஸ் டி.எஸ்.பி. மணிமேகலை நக்கீரனில் வெளிவந்த செய்தியை பற்றியும் நம்மிடம் தொடர்பில் உள்ள அந்தப் பள்ளியின் மாணவர்கள் பற்றியும் தொடர்ந்து கேட்டுவந்தனர்.
காலை 11:00 மணி முதல் தனிபடை போலீஸாருடன் செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. டாக்டர் விஜயகுமார் தலைமையில் மீட்டிங் தொடங்கியது. நாமோ வெளியே மரத்தடியில் எப்போது வருவார்களோ... வெளியே வந்து, தெரியாமல் சென்றுவிட்டார்களோ என்று உள்ளே என்ன நடந்து கொண்டுருக்கிறது என்று ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்தோம் மதியம் உணவு சாப்பிட கூட யாரும் செல்லவில்லை. மீட்டிங் நடக்கும் அறை உள்ளேயும் யாரையும் அனுமதிக்கவில்லை.
ஒருவழியாக மாலை 4:00 மணிக்கு வெளியே வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக அரசின் சட்டவல்லுநர்களுடன் ஆலோசித்ததாகப் போலீசார் தெரிவித்தனர்.
நேரம் காலை 11:30 மணி
அதேநாள் அட்சயாவும், ஓவியாவும் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் கொடுத்திருந்த புகார் மீது இருவரும் ஆன்லைனில் ஆஜராகி, சிவசங்கர் பாபா மீதும் அவருக்கு உடந்தையானவர்கள் மீதும் கொடுக்கப்பட்டிருந்த புகாரின் பெயரில் நடந்த விசாரணையில் பங்கேற்றனர்.
நேரம் மதியம் 2:00 மணி :
சிவசங்கர் பாபா மீதும் அந்த பள்ளி நிர்வாகிகள் மீதும் இரு மாணவிகள் அளித்த புகாரின் பெயரில் ஆஜராக சொல்லி சிவசங்கர் பாபாவுக்கும் பள்ளி தாளாளருக்கும் குழந்தைகள் ஆணையம் சம்மன் வழங்கியிருந்தது. மீடியாக்கள் எல்லாம் காலையிலிருந்தே பாபா வருவார் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அவர் வரவில்லை. வழக்கறிஞர்கள்தான் வந்தனர். இன்னொருபுறம், போலீஸ் விசாரணையும் தொடர்ந்துகொண்டிருந்தது. எந்தக் கட்டத்தில் இருக்கிறது என்பதை முழுமையாக அறிந்துகொள்ள முடியவில்லை.
12:06:2021 சனிக்கிழமை காலை 7:00 மணி:
பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகளிடம் இருந்து தொடர்ந்து மிஸ்டுகால் வந்திருந்தது. அதை அட்டெண்ட் செய்வதற்கு தனிப்படை டி.எஸ்.பி. மணிமேகலை தொடர்பில் வந்தார். புகார் கொடுத்த அனைத்து மாணவிகளையும், அவர்களின் பெற்றோருடன் அழைத்துக்கொண்டு மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு தொனியில் பேசினார்.
அவரிடம், "புகார் கொடுத்துள்ள மாணவிகள் எல்லாம் சிவசங்கர் பாபாவால் பாதிக்கப்பட்டவர்கள், எல்லாரும் பெண்கள். அதில் சிலர் திருமணம் ஆனவர்கள். காவல் நிலையத்துக்கு வந்தால் மீடியாவில் ஃப்ளாஷ் ஆகும். அதன்மூலம் இவர்களை அடை யாளம் தெரிந்து கொண்டால் பாபாவின் ஆட்களால் இவர் களது உயிருக்கே ஆபத்து'' என்றோம். டி.எஸ்.பி.யோ காதிலே போட்டுக்கொள்ளவில்லை. எஸ்.பி. ஆர்டர் என்று தொடர்பை துண்டித்தார். எஸ்.பி. விஜயகுமாரிடம் பேசி னோம். அவரும், "இது கேம் கிடையாது, சட்டம். சட்டப் படிதான் நடக்கும், ஒத்துழைப்பு கொடுங்க'' என்றார். சட்டத்தின் சந்து பொந்துகள் வழியே பாபாவும் அவர் கூட்டமும் தப்பிவிடக்கூடாது என போலீஸ் நினைத்தது.
பயத்தில் இருந்த மாணவிகளிடம் இருந்து தொடர்ச்சியாக போன் வந்தபடியே இருந்தது, "அனைவரும் தைரியமாக இருங்கள் நக்கீரன் உங்களுக்கு துணையாக நிற்கும்' என்று திடப்படுத்தினோம். ஆசிரியர் கவனத் திற்கும் இதனைக் கொண்டுசென்று, நமது வழக்கறிஞர் பி.டி.பெருமாள் அவர்களின் அறிவுறுத்தலின்படி போலீசாரிடம் பேசினோம். அதே சமயம், நமது ஆசிரியர் அவர்கள் ஏ.டி.ஜி.பி. தாமரை கண்ணனிடம் பேசியதன் விளைவாக, மாணவிகள் தாங்கள் விரும்புகிற இடத்தில் வாக்குமூலம் தரலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதை நம்மிடமும் தெரிவித்த ஏ.டி.ஜி.பி, மாணவிகளுடன் "அவர்கள் விரும்புபவர்கள் இருந்தால் போதும்' என்றார். காவல்துறை உயரதிகாரி தந்த உத்தரவாதத்தை மாணவிகளிடமும் கூறினோம்.
மதியம் 1:00 மணி:
கோட்டூர்புரம் பகுதிக்கு காரில் சென்ற போலீஸ் தனிப்படையின் உதவி ஆய்வாளர் மகாலட்சுமி, காரிலேயே ஓவியாவின் கைப்பட வாக்குமூலத்தை வாங்கிக்கொண்டார். அவரது கணவர் கடைசிவரை துணையாக நின்று, பாபாவின் பாலியல் வக்கிரத்தை வெளிக்கொண்டு வருவதில் உறுதியாக இருந்தது பாராட்டுக்குரியது என்றார் ஏ.டிஜி.பி. நம்மிடம். மாமல்லபுரம் பகுதியில் காத்திருந்து எஃப்..ஐ.ஆர் பெற்றுக் கொள்ளும்படி சொல்லிவிட்டு, போலீசார் ப்ரியா வீட்டுக்கு வந்தனர்.
ப்ரியாவுக்கும் சொர்ணாவுக்கும் தமிழில் எழுத தெரியாது என்பதால் மாமல்லபுரம் காவல்நிலையத்திலே முன்பு கொடுத்த வாக்குமூலத்தை டைப் செய்து எடுத்துவந்த னர். ஒரு வழியாக 4:30 மணிக்கு ஆய்வாளர் சத்தியபாமா டைப் செய்த பேப்பருடன் வந்தார். சொர்ணா கையொப்பம் போட்டவுடன் தனிப்படை போலீசார் எஃ.ப்ஐ.ஆரை சற்றுநேரம் பொறுத்து தருவதாகக் கூறிவிட்டுக் கிளம்பினர்.
ஒரு பக்கம் மாணவி சப்னாவுக்கு அவர் அப்பா போன் மேல போன் போட்டார். அவரையும் வீட்டில் பத்திரமாக விட்டுவிட்டு, வண்டலூர் பகுதியில் உள்ள மைனர் பெண் ப்ரியாவை சந்திக்கச் சென்றோம். தனிப்படை போலீசார் மகாலட்சுமி, காரின் உள்ளே ப்ரியாவை அழைத்து கையெழுத்து வாங்கினார். அவர் மைனர் என்பதால் அவரின் தாயாரிடமும் கையெழுத்து வாங்கினார்.
நடப்பவை அனைத்தையும் நமது ஆசிரியரும் அடிக்கடி தொடர்பு கொண்டு அறிந்துகொண்டார். போலீசின் வேகமும் மாணவிகளுக்கான பாதுகாப்பும் அவர் கவனத்திலேயே இருந்தன. மாலை 6:30 மணிக்கு இவை நிறைவடைந்தன.
காரில் கேளம்பாக்கம் வழியாக மாமல்லபுரம் சென்று எஃப்.ஐஆர் காக வேறு இடத்தில் ஓவியா, அவருடைய கணவருன் காத்திருந்தோம். கடுமையான களைப்பு. ஸ்ட்ராங்காக டீ குடித்தோம். உற்சாகம் ஏற்பட்டது. போன் மணியும் அடித்தது. ஆய்வாளர் மணிமேகலை அனைவரின் எஃப்.ஐ.ஆர் காப்பியைக் கொடுத்தார்.
அதற்குள் ஆசிரியர் அவர்கள் போன் செய்தார். சாட்சி விசாரணைக்காக நக்கீரனைத் தனிபடை போலீஸார் வரச்சொன்னதாகத் தெரிவித்தார். ஓவியா கணவர் காரில் இரவு பத்து மணிக்கு ராயப்பேட்டை அலுவலகம் சென்றோம்.
இரவு 11:00 மணி:
தனிப்படை போலீஸ் டி.எஸ்.பி கல்பனா ஆசிரியரிடம் வாக்குமூலமும், ஆதாரங்களையும் வாங்கி கொண்டிருந்தார். உடன் கேளம்பாக்கம் ஆய்வாளர் கோவிந்த ராஜி இருந்தார் மற்றும் சில போலீசாரும் இருந்தனர். ஆசிரியர் அவர்களின் சாட்சி வாக்குமூலம் நிறை வடைந்தபின், நம்மை அழைத்து வாக்குமூலம் பெற்றார் டி.எஸ்.பி கல்பனா. அது நிறைவடைந்தபோது இரவு 12.30 மணி. ஆசிரியரிடம் போலீஸ் விசாரணையில் நடந்த விவரங்களை நேரில் தெரிவித்தோம்.
13-6-2021 ஞாயிறு காலை:
களத்தில் இறங்கி நக்கீரன் மேற்கொண்ட சளைக்காத முயற்சியும், டி.ஜி.பி-ஏ.டி.ஜி.பிலி ஐ.ஜிலிஎஸ்.பி உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகளின் வேகமான நடவடிக்கைகளும் சிவசங்கர் பாபா இனி தப்பிக்கவே முடியாது என்ற நிலையை உருவாக்கின.
இந்த நிலையில் சிவசங்கர் பாபா வெளிநாடு தப்பியதாகவும் தகவல்கள் பரவியது. நேபாள நாட்டுக்கு சென்று பாதுகாப்புடன் இருக்க நினைப்பதாகவும் சொல்லப்பட்டது. பள்ளி நிர்வாகத்தில் தொடர்புடையவர்களிடம் நாம் விசாரித்ததில் சிவசங்கர் பாபா அங்கு இல்லை என்பது தெரியவந்தது.
தமிழக காவல்துறை இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி விசாரணை வளையத்தை இறுக்கியுள்ளது. பா.ஜ.க பிரமுகர்கள் பலரையும் தன் தொடர்பில் வைத்திருக்கும் சிவசங்கர் பாபா மீதான நடவடிக்கையை இதே வேகத்தில் காவல்துறை கையாளும்போது, பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நீதி கிடைக்கும்.
-அரவிந்த்
படங்கள் : ஸ்டாலின், அசோக்
ஆசிரியர்-நிருபரிடம் விசாரணை!
மாணவர்களிடம் புகாரை பெற்று வழக்கு பதிவு செய்தது போலவே ஜூன் 12-ஆம் தேதி நக்கீரன் ஆசிரியர் அளித்த புகாரின் அடிப்படையில் சாட்சி விசாரணையாக நமது ஆசிரியரிடமும் நிருபர் அரவிந்திடமும் நக்கீரன் அலுவலகத்தில் தனிபடை போலீஸார் டி.எஸ்.பி கல்பனா தலைமையில் ஆய்வாளர் கோவிந்தராஜூ மற்றும் தனிபடை போலீசார் விசாரணை நடத்தி ஸ்டேட்மெண்டு மற்றும் அதற்காக ஆதாரங்கள் ஆகியவற்றை பெற்றனர்.
டி.சி. வாங்கும் பெற்றோர்! ரிசைன் பண்ணும் ஆசிரியைகள்!
சி.பி.சி.ஐ.டி விசாரணை என்ற தகவல் ஞாயிறன்று வெளியானதுமே பாபா நிர்வாகத்தில் உள்ள பள்ளி மீதான அதிருப்தி அதிகமானது. அதனை சரி செய்ய, திங்கள் காலையில் பிரஸ் மீட் என்ற செய்தி கசிந்தது. ஆனால், திங்களன்று காலையிலேயே அங்கு தங்கள் பிள்ளைகளுடன் வந்த பெற்றோர் பலரும் டி.சி. வாங்கிக் கொண்டு வேறு பள்ளியில் சேர்க்க ஆயத்தமாயினர். அதுபோல ஆசிரியைகள் பலரும் ரிசைன் லெட்டர் கொடுக்க வந்திருந்தனர்.
வீடியோ சாட்டிங் வில்லங்கம்!
பதினேழு வயதான ப்ரியா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த சில மாதம் முன்பு வரை பாபா, சமூக வலைத்தளத்தில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் அதில் ஆபாசமாகவும், இரட்டை அர்த்தத்துடன் இமெயில் செய்த தாகவும் ஆதாரத்துடன் தெரிவித் தார். மேலும் பல பெண்களிடம் இப்படி தான் பேசுவார் என்றும் சமீபத்தில் தன் பள்ளி தோழி ராதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) படுக்கை அறையில் படுத்தபடி லைவ் வீடியோ சாட்டிங்கில் பேசியபடி பாபா உன் ஆடைகளை கழட்டி நிர்வாணமாக வீடியோ சாட்டிங் செய் என்று சொன்னார் என்று கூறினாள். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த நான் அவர்களின் தொடர்புகளை துண்டித்தேன் என்றார்.
அடுத்து நாம் சந்தித்த அப்பள்ளியின் முன்னாள் மாணவி ஷர்மிளா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) "அந்த பள்ளியில் இயல்பாகவே சிவசங்கர் பாபா மாணவிகள் மற்றும் பக்தர்களை கட்டிபிடித்துதான் முத்தம் தருவார். தேர்வு தாளில்கூட பிள்ளையார் சுழிக்கு பதில் சங்கரம் சிவ சங்கரம் என்ற சுருக்கத்தை மூன்று எஸ் என்று குறிப்பிட்டால் தான் கூடுதல் மார்க் கிடைக்கும். என்னையும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்திருக்கிறார். என்னுடன் அப்பள்ளியில் படித்த தோழிக்கு ஏதோ குடும்பப் பிரச்சினை இருந் ததை பாபாவிடம் சொல்ல அவரின் லவுன்ஞ்க்கு சென்றுள்ளார். உன் பிரச்சனை சரியாக கண்களை மூடு என்று சொல்லிவிட்டு அவளிடமும் தவறாக நடந்துள்ளார். எப்படியோ ஒருவழியாக தப்பிவந்த அவள் விடுதி வார்டனிடம் சொன்னால் அவரோ, "பாபா கடவுள் அவர் மீதே புகார் சொல்லக்கூடாது'னு சொல்லி அனுப்பியதாக என்னிடம் கூறினாள்.
அதேபோல அப்பள்ளி ஆசிரியை ஆன கருணா அதே பள்ளி மாணவியான தோழி சந்திராவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பாபாவின் லவுன்ஞ்ச் மூன்று நாள் அழைத்து சென்றுள்ளார். பின்னர் நான்காம் நாள் தனியாக போகச் சொல்ல அவளும் தனியாக செல்ல அவளிடமும் பாலியல் அத்து மீறலில் சிவசங்கர பாபா ஈடுபட்டுள்ளார். இந்த விவரமும் எனக்கு தெரிய வரவே, இதை பள்ளியில் படிக்கும் சகமாணவிகள் ஆன பக்தர்களாக உள்ளவர்கள்(பாபாவின் ஸ்பை) பாபாவுக்கு தகவல் தர, என்னை கார்னர் செய்து பள்ளியின் சக மாணவனுக்கு நோட்டுபுத்தகம் கொடுத்ததை காரணம் காட்டி என் பெற்றோர்களை அழைத்து பதினோ ராம் வகுப்பு முழுஆண்டு தேர்வுக்கு முன் டி.சி கொடுப்பேன் என்று மிரட்டினர். என் பெற்றோர்களின் வேண்டுதலின் பெயரில் தேர்வு மட்டும் எழுத அனுமதி கொடுத்து முடிந்தவுடன் கட்டாய டிசி கொடுத்து அனுப்பப்பட்டேன்,
வேறு பள்ளியில் சேர்ந்து அந்த பள்ளியில் முதல் மாணவியாக மார்க் வாங்கினேன். மாணவர் களுக்கு ஒன்பதாம் வகுப்பு, பதினோ ராம் வகுப்பு முழுஆண்டு தேர்வுக்கு முன் டிசி கொடுத்து டார்ச்சர் கொடுப்பது வழக்கம் என்று விவரித்தார். அதை வீடியோ ரிக்கார்டு செய்து நக்கீரன் யூடியுப் சேனலில் பத்துலட்சம் பேர் கண்டுள்ளனர்.
சம்மன் இல்லாமல் ஆஜரான ஜானகி!
பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவிகள் இருவர் புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சம்மன் வழங்கி விசாரித்தது ஆன்லைன் மூலம் மாணவிகளிடம் ஸ்டேட்மெண்ட் பெற்றனர். மேலும் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மற்றும் பள்ளியின் தாளாளர் நேரில் ஆஜராக சம்மன் வழங்கி உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் கடந்த ஜூன் 11 ஆம் தேதி குழந்தைகள் ஆணைய தலைவர் சரஸ்வதி மற்றும் சரண்யா முன்னிலையில் பாபாவின் வழக்கறிஞர், அப்பள்ளி நிர்வாகி வெங்கட்ராமன் மற்றும் அழையா விருந்தாளியாக பாபாவின் அனைத்து தீய செயலிலும் நீண்டநாட்களாக நிழலாக தொடரும் பள்ளி நிர்வாகி ஜானகி ஆஜராகி சிவசங்கர் பாபா மாரடைப்பு ஏற்பட்டு உத்ரகாண்ட் மாநிலம் டெராடூனில் மேக்ஸ் மருத்துமனையில் சிகிச்சையில் இருப்பதாக தெரிவித்து மருத்துவ சான்று மற்றும் சிகிச்சை பெறும் போட்டோவையும் வழங்கியதாக தெரிவித்தனர்.
என்ன சொல்கிறது எஃப்.ஐ.ஆர்?
12-06-2021 அன்று 17 வயதான பிரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மகாபலிபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். அந்தப் புகாரில் அவர் கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளியில் தங்கி படித்ததாகவும், அந்த காலகட்டங்களில் சிவசங்கர் பாபா, அவர் நடத்தும் சத்சங் நிகழ்ச்சி முடித்ததும் மாணவிகளை கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பார் என்றும் கூறுகிறார். தன்னையும் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்ததாகக் கூறுகிறார். மேலும் விடுதி மாணவிகள் ஓவியம் வரைந்தும் நாட்டியம் ஆடியும் அதை பாபாவின் மெயிலுக்கு அனுப்புவது வழக்கம். பிரியாவும் பல படங்கள் வரைந்து சிவசங்கர் பாபாவுக்கு மெயிலில் அனுப்பியுள்ளார். 2020 லாக்டவுன் காலத்தில் பிரியாவும் மற்ற தோழிகளும் பழைய சினிமா படக் காட்சிகளை நடித்து (டிக்டாக் பாணியில்), பாபாவின் மெயிலுக்கு அனுப்பி யிருக்கிறார்கள். பிரியாவின் மெயிலுக்கு பதில் அனுப்பிய சிவசங்கர் பாபா, அதில் ரெட்டை அர்த்த வசனங்களை கூறியிருக்கிறார். I am capable of making you very wet (வெறி... வெறி... wet) come soon. Missing என்று அனுப்பினார்.
20-2020, மே மாதம் ஒருநாள், என் தோழியோடு பாபா படுக்கையறையில் படுத்துக்கொண்டு அவளது செல்போனில் பாபா வீடியோகால் பேசினார். என்ன மாதிரி டிரெஸ் போட்டிருக்கிறாய் என்று கேட்டார். டாப்பை கழற்றிக் காமி என்றார். அவரோடு என் தோழி படுத்திருப்பதை நான் ஸ்கிரீன் ஷாட் எடுத்தேன்.
எங்கள் பள்ளியில் பயிலும் பல மாணவிகளை சிவசங்கர் பாபா செக்ஸ் டார்ச்சர் செய்துள்ளார். இனியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரையும் அவரின் தங்கையையும் அவர்கள் அங்கு படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் பாபா பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அறிந்தேன். பாபா தன்னை கிருஷ்ணர் என்றும், அங்குள்ள மாணவிகளை கோபிகா என்றும் அழைப்பார். அருணா, தீபா, பாரதி சீனிவாசன், வார்டன் நீரஜா என்று அந்தப் பள்ளியில் பணிபுரியும் பலரும் சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக செயல்பட்டு, அவருடைய ஆசைகளை தீர்த்து வைக்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்..
இந்த புகார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்சோ சட்டம் செக்ஷன் 8, 10, 12 ன் கீழும் உமன் ஹாரஸ்மென்ட் ஆக்ட் செக்ஷன் 4லின் கீழும், ஐ.பி.சி. செக்ஷன் 354, 366லின் கீழ், இந்தக் குற்றங்கள் இழைத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
படங்கள் : அசோக்