முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் புகழுக்கு புகழ் சேர்க்கின்ற வகையிலும், இன்றைய இளம் தலைமுறையினர்களுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பன்முகத்தன்மையை எடுத்துக்கூறும் வகையிலும், எழுத்தாளர் கலைஞர் குழுவின் சார்பில் அமைக்கப்பட்ட முத்தமிழ்த்தேர் கடந்த 04.11.2023 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் துவக்கி வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இந்த அலங்கார ஊர்தியானது பயணித்து, அதன் ஒருகட்டமாக செவ்வாய்க்கிழமையன்று சரித்திர பூமியாம் சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை புரிந்தது.
பேனாவின் தோற்றம், பேனாவிற்கு அருகி லேயே கலைஞர் எழுதிய காவியங்கள், பேனாவில் உள் நுழைந்தால் இருபக்க சுவரிலும் பொன்மொழி கள், வாசகங்கள் என ஆங்காங்கே கலைஞரின் எழுத்துக்கள். அவர் வசித்த கோபாலபுரத்து வீடு. அதனுள்ளே அஞ்சுகம் அம்மையாரின் திருவுருவச் சிலை. தாயின் அருகிலேயே முத்தமிழறிஞர் கலைஞரின் உட்கார்ந்த நிலையில் ஆளுமையுடன் வீற்றிருக்கின்றது அவரது சிலை. இதுவே முத்தமிழ்த் தேர்.
செவ்வாய்க்கிழமையன்று மாவட்ட எல்லையான மானாமதுரையில் முத்தமிழ்த் தேரை வரவேற்று மகிழ்ந்தனர். தொடர்ச்சியாக சிவகங்கைக்கு பயணிக்க மா.செ.வும், கூட்டுறவுத்துறை அமைச்சரு மான பெரியகருப்பன் தலைமையில் கூடிய மாவட்ட தி.மு.க.வினர், ஒன்றன் பின் ஒன்றாக உட்பகுதியிலுள்ள கலைஞரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வந்தனர்.
"முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, அதனை தமிழகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடிடும் நோக்கில், முதலமைச்சர் அவர்களால் 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றாக, ”எழுத்தாளர் – கலைஞர்” குழுவின் சார்பில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டிற்கு ஆற்றிய அரும்பணிகள் மற்றும் அவரது பரிமாணங்களை போற்றிடும் வகையில், பல்வேறு முன்னெடுப்புகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் முத்தமிழ்த் தேர். எழுத்தையே மூச்சாகக் கொண்ட கலைஞரின் வாழ்க்கையினை இன்றைய சமுதாயமும் அறிந்து தெளிந்துகொள்ள அமைக்கப்பட்ட முத்தமிழ்த் தேரை வரவேற்பளிப்பதில் பெருமிதம் கொள் கின்றது சிவகங்கை சீமை.
மேலும் இந்நிகழ்ச்சியை எங்கள் அமைச்சர் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்து பார்வையிட வந்த பொதுமக்கள், மாணவர்கள், தொண்டர்கள் அனைவருக்கும், இரண்டு மணி நேரம் பொறுமை காத்து பேனா பரிசளித்து... கலைஞர் சிலையுடன் செல்பியும் எடுத்துக்கொண்டது நெகிழ்ச்சியாக இருந்தது'' என்கிறார் மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளரான ராஜபாண்டியன்.
-நாகேந்திரன்
படங்கள்: விவேக்