திருச்சி மத்திய சிறையில் கடந்த சில மாதங்களாகவே துணை சிறை அலுவலரான பெண் அதிகாரிக்கும், அங்குள்ள சில ஆண் காவலர்களுக்கும் இடையே சில தகாத உறவுகள் இருப்பதாக சிறைக்காவலர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
இதுகுறித்த விசாரணையில் இறங்கியபோது சில தகவல்கள் நம் செவியை எட்டின.
கடந்த 2019-ஆம் ஆண்டு திருச்சி மத்திய சிறைக்கு உதவிச் சிறை அலுவலராக வந்துசேர்ந்தவர் அந்த அதிகாரி. இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இவருடைய கணவர் தனியார் நிறுவன ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/in-jail.jpg)
இவர் திருச்சி மத்திய சிறையில் பணியாற்றும் புண்ணியமூர்த்தி (35) என்பவருடன் கொஞ்சம் நெருக்கமாக இருப்பதை சிறைக் காவலர்கள் அனைவரும் அறிவர். இவர் பணிக்கு வந்து சேர்ந்த அதே ஆண்டில் பணிக்கு வந்துசேர்ந்தவர் சதீஷ் (35). அவர் ஜெயிலராகப் பணிக்கு வந்து சேர்ந்தபோது, அந்தப் பெண்அதிகாரி டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதி தேர்வாகி நேரடியாக உதவி சிறைஅலுவலராக ஆண்கள் மத்திய சிறையில் பணியமர்த்தப்பட்டார்.
இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சிறையின் பின்புறமுள்ள அலுவலக அறையில் ஜெயிலர் சதீஷ், உதவி சிறை அலுவலரான பெண் அதிகாரியை பின்பக்கமாக இடுப்பின்கீழ் கையால் தட்டியுள்ளார். இதை போக்சோ கைதியான சரத்குமார் (28) கவனித்துவிட்டார். தனது நடத்தையை கைதி பார்த்து விட்டார் என்பதை அறிந்த ஜெயிலர் சதீஷ், கைதியை அழைத்து "வெளியே சொல்லிவிடாதே' என்று கூறியிருக்கிறார்.
கைதியோ, "பெண் அதிகாரியை என்னுடன் கொஞ்சம் நெருக்கமாக இருக்கச் சொல்லுங்கள்'' என்று சதீஷிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த தகவலை சதீஷ் பெண் காவலரிடம் கூறியிருக்கிறார். ஆனால் எந்தவித பதற்றமும் இல்லாமல் பெண் காவல்அதிகாரி சதீஷிடம், “"நீங்களே கைதியை சமாளித்து விடுங்கள், இல்லை என்றால் நான் நீங்கள் சிறையில் தினமும் களவாடும் பொருட்கள், குறித்த சில இரகசியங்களை எழுதி மேல் அதிகாரிக்கு அனுப்பி விடுவேன்''” என்று கூறியுள்ளார்.
சாதாரணமாக சிறைக்குள் தவறு செய்பவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆபத்தானவர்கள் என்று கருதுபவர்களை சிபி-1 என்ற தனி செல்லில் அடைத்து வைப்போம். அந்த தனி சிறை அறையில் போக்சோ கைதியான சரத்குமாரை அடைக்கச்சொல்லி சதீஷ் உத்தரவிட்டார். அதன்பிறகு அவரை ஜெயிலர் சதீஷ் தனியாகக் கவனித்துள்ளார். ராஜமரியாதை கொடுக்கப்பட்டிருக்கிறது. எப்போதெல்லாம் நினைக்கிறார்களோ, அப்போதெல்லாம் கைதிக்கு வேண்டியதை செய்துகொடுத்து தன்னுடைய தாராள மனதை காட்டியிருக்கிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/jail1_1.jpg)
கைதிக்கு மட்டும் தாராள மனதைக் காட்டாமல், உதவி சிறைக் காவலர் பதவியிலிருந்த அதிகாரிக்கும், துணை சிறைக் காவலராக தன்னுடைய முழு செல்வாக்கையும் பயன்படுத்தி பதவி உயர்வு கொடுத்துள் ளார்.
இப்படி தொடர்ந்து தனி கவனிப்பு நடைபெற்று வந்தாலும், தற்போது விஷயம் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது. அந்த விவகாரம் அணைவதற்குள் அடுத்த ஒரு பிரச்சினை தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.
சிறையிலுள்ள சிபி-1ல் பணிபுரிந்து வந்த முதல் தலைமைக் காவலரான கோபால கிருஷ்ணன், தற்போது மாற்றுப் பணி கொடுக்கப்பட்டு பாபநாசம் சிறைக்கு தற்காலிகமாக அனுப்பப்பட்டுள்ளார்.
இதற்கு காரணமும் இந்தப் பெண் அதிகாரிதான் என்று செய்திகள் பரவ ஆரம்பித்துள்ளது. இதன் பின்னணி குறித்து விசாரிக்கையில், சிபி-1ல் கோபாலகிருஷ்ணன் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, ஆய்விற்குச் சென்ற துணை சிறை அலுவலர், பெண் அதிகாரியிடம் இரட்டை அர்த்தத்தில் பேசி நெருங்க முயற்சி செய்திருக்கிறார்.
இந்த சம்பவம் குறித்து புகார் மனு ஒன்றை எழுதி ஜெயிலர் சதீஷிடம் பெண் காவலர் கொடுக்க, அதன்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கோபாலகிருஷ்ணனை அழைத்து ஜெயிலர் அறிவுரைகூறி அனுப்பியுள்ளார். ஆனால் கோபாலகிருஷ்ணன் பெண் காவலரை விடுவதாக இல்லை. சிறைக்காவலர்களுக்கு என்று ஒதுக்கப் பட்டுள்ள குடியிருப்புகளில் ஒரே இடத்தில் வசித்து வருவதால், கோபாலகிருஷ்ணன், பெண் காவலரை பார்த்துக்கொண்டே செல்போனில், "நீ எந்த ஆபீசர்கிட்ட போனாலும் எதுவும் நடக்காது''’என்று பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண் காவலர், புகாரை எழுதி நேரடியாக சிறை டி.ஐ.ஜி. கனகராஜிடம் கொடுக்க... அவரும் உடனடியாக கோபாலகிருஷ்ணனை மாற்றுப்பணிக்கு பாபநாசம் சிறைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
திருச்சி மத்திய சிறைக் கண்காணிப்பாளர் சங்கர் ஓய்வுபெற உள்ள நிலையில், தற்போது ஜெயிலராக இருக்கும் சதீஷ் எந்த ஒரு தகவலையும் கண்காணிப்பாளர் கவனத்திற்கு கொண்டுசெல்லாமல் நேரடியாக டி.ஐ.ஜி.க்கு கொண்டுசெல்வதும், அவர் ஜெயிலரிடம் பதிலளிப்பதுமாக இருப்பதாகவும், கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து கோப்புகளில் கையெழுத்திடுவதோடு அவருடைய பணி முடிந்தது என்ற நிலை உருவாகியுள்ளது.
எனவே சிறைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, திருச்சி மத்திய சிறையில் மாற்றம் ஏற்படுத்தினால் மட்டுமே இப்பிரச்சனைக்கு தீர்வு காணமுடியும் என்று சிறைக் காவலர்கள் புலம்பித் தீர்க்கின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-06/jail-t.jpg)