ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளு ரமணா கடந்த வெள்ளியன்று ஈஷா கொன்றை பில்டிங் முதல் தளத்திலுள்ள அறை எண் 101-ல் காலை (22/07/2022) தற்கொலை செய்துகொண்டார். 1 மாதத்திற்கு முன்பு யோகா நிகழ்ச்சிக்காக யோக மையம் வந்தவர், தனிப்பட்ட காரணங்களால் தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதிய கடைசி கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கு வேறு யாரும் காரணமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்'' என்றது ஈஷா யோக மையம். அதனடிப்படையில் கொள்ளு ரமணாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் பேரூர் சப்-டிவிஷனைச் சேர்ந்த ஆலாந்துறை காவல் நிலைய போலீஸார்.
ஈஷா யோக மையத்தின் பொள்ளாச்சி பகுதி ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி விலகிய ஒருவரிடம் பேசினோம். பெயரோ, முகமோ வேண்டாமென மறுத்த அவர், "ஈஷாவில் யோகா கற்றுக்கொள்ள வருகின்றவர்கள் அனைவரும் ஐ.டி. துறைகளிலும், பெரிய நிறுவனங்களில் இருக்கும் அதிகாரிகளே! ஈஷாவிற்குள் நுழைந்ததுமே முதலில் சாம்பவி மகாமுத்ரா என்கிற 7 நாள் பயிற்சி. அதன்பின் பாபஸ் பந்தனா (உயிர்களின் சங்கமம்) பயிற்சி, தொடர்ந்து சூன்ய தியானம், அட்ட யோகா பயிற்சிகள். இது முடிந்தநிலையில் ஜக்கியின் நேர்முகம் கிடைக்கும். அவரது மூளைச்சலவையில் பலரும் தொண்டுசெய்ய ஒத்துக்கொள்வார்கள். இவர் கள் ஜக்கியின் அடுத்தடுத்த நிகழ்வுகளை வடிவமைப்பது, மார்க்கெட்டிங் செய்வது என பிஸியாக வேலை செய்வார்கள். மன அழுத்தம் குறைய வந்தவர்கள் இதனால் கூடுதல் மன அழுத்தத்துக்கு உள்ளாவார் கள். சிலர் காதலில் விழுவார் கள். ஒருகட்டத்தில் ஜக்கியை சந்தித்து தங்களது காதலைக் கூறி நார்மல் வாழ்க்கைக்குச் செல்கின்றோம் என்று கூற, நம்முடைய வேலையாட்கள் குறைகின்றதே என்ற கவலையில் குரு துரோகம் உள்ளிட்ட வார்த்தை களைக்கொண்டு மயக்குவார். அதிலும் சிக்காதவர்கள் இந்த மாதிரியான தற்கொலை முடிவை எட்டுவார்கள்'' என்கிறார்.
பேராசிரியர் காமராஜோ, "இந்த இளைஞன் மட்டுமல்ல! ஜக்கி வாசுதேவின் மனைவி விஜி, சுற்றுச்சூழல் ஆர்வலர் ராகேஷ் குமார், கோத்தகிரி விபத்தில் இறந்த ஈஷாவின் ஆடிட்டர், 7 வருடங்களுக்கு முன்பு சாமியார் ஒருவர், திருவண்ணாமலையைச் சேர்ந்த இஞ்சினியர் என பலரும் மர்மமாக இறந்துள்ளனர். ஜக்கியின் மூளைச்சலவையால் ஆசிரமத்திற்குள் அடிமைப்பட்டுக் கிடப்பவர்கள் மீண்டும் வெளியே செல்லவிரும்பினால், அவர்களை இருட்டறையில் அடைத்து உணவுகொடுக்காமல் சைலண்ட் ஹவர் எனும் சித்ரவதையை செய்துவருகின்றது ஜக்கி தரப்பு. அவர்களின் பெற்றோர்களும் கொல்லப்படுவார்கள் என மிரட்டலும் விடுக்கப்படுகின்றது. இதுதான் கொள்ளு ரமணாவிற்கும் நடந்திருக்கவேண்டும்'' என்கிறார் அவர்.
இது இப்படியிருக்க, மேற்படி தேதியில் செம்மேடு கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த வள்ளி ஆஜராகி, ஈஷா யோகா மையத்திலுள்ள கொன்றை பில்டிங் முதல் தளத்திலுள்ள அறை எண் 101-ல் ஆந்திரப்பிரதேசம் விசாகபட்டினத் தினைச் சேர்ந்த கொள்ளு ரமணா என்பவர் தூக்கு மாட்டி இறந்துள்ளார் என புகாரளித்துள்ளதாக எப்.ஐ.ஆரை தயார்செய்துள்ளது ஆலாந்துறை காவல் நிலையம். முந்தைய நாளில் நடை பெற்ற சட்டம் ஒழுங்கு, க்ரைம் சம்பந்தப்பட்ட வழக்குப் பதிவு குறித்த டி.எஸ்.ஆர். தொகுப்பு தற்கொலையின் விசாரணை அதிகாரியான ஆலாந்துறை காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் முத்துப் பாண்டி காலையில் 9 மணிக்கு சம்பவ இடத்திற்கு விசிட் செய்ததாகக் கூறியது. ஆனால் எப்.ஐ.ஆரில் புகார் கிடைக்கப்பெற்ற நேரம் என குறிப்பிடப் பட்டது மிகுந்த சர்ச் சையை உருவாக்கியுள் ளது.
இதுகுறித்துப் பேசிய வழக்கறிஞர் வினோத்குமார், "ஈஷா யோக மையம் தனியார் நிறுவனம். தனியார் இடத்தில் தற்கொலை செய்துகொண்ட நபர் சம்பந்தமாக செம்மேடு கிராம நிர்வாக அலுவலர் ஏன் புகார் கொடுக்க வேண்டும்? நூற்றுக்கணக்கானோர் வேலை செய்யக்கூடிய தனியார் நிறுவனமான ஈஷா யோக மையத்தின் நிர்வாகிகள், ஜக்கி வாசுதேவ் உள்ளிட்ட நபர்கள் ஏன் புகார் கொடுக்கவில்லை?
புறம்போக்கு இடம், சாலைகள், குளங்களில் சந்தேகத்திற்கிடமாக ஒரு அடையாளம் தெரியாத நபர் இறந்துபோனால் அந்த கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் புகார் கொடுப்பது வழக்கம். அவ்வாறிருக்க, ஈஷா யோகா மையம் அரசு நிலமா? கோவை மாவட்ட காவல் துறையினர் வெளியிட்ட DSR -Daily Crime Report-ல் ஆலாந்துறை காவல் ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு 22.07.2022 காலை 9 மணிக்கே சென்று விட்டதாகக் குறிப்பிடப்பட்டுள் ளது. அவ்வாறிக்க அங்கிருந்த ஈஷா பொறுப்பாளர்களிடம் ஏன் புகார் பெறப்படவில்லை? இரண்டு மணிநேரம் கழித்து ஏன் கிராம நிர்வாக அலு வலரிடம் புகார் எழுதிவாங்கப் பட்டது? 174 CrPC வழக்குகளில் உயர்நீதிமன்றம் கொடுத்துள்ள வழிகாட்டுதல்களின்படி ஏன் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தப்பட வில்லை? யாரைக் காப்பாற்ற இவ்வாறு வழக்கு ஜோடிக்கப்பட்டுள்ளது?'' என கேள்வியெழுப்பு கிறார்.
சம்பந்தப்பட்ட செம்மேடு கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தவள்ளியிடம் பேசினோம். "சார் எனக்கு எதுவும் தெரியாது. போலீஸிலிருந்து கூப்பிட்டு இந்த மாதிரி புகார் கொடுக்கச் சொன்னாங்க! கொடுத்தேன்'' என்றார் பொறுப்பற்ற தன்மையுடன். இதுகுறித்து கருத்தறிய இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டியை தொடர்புகொண்டோம்... பதிலில்லை.