"பிறக்கும் புத்தாண்டு, ஸ்ரீமதி வழக்கில் பல புதிய திருப்பங்களை ஏற்படுத்தப் போகிறது' என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். ஸ்ரீமதி வழக்கில் தடைக்கல்லாக இருப்பது சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் புலனாய்வு முடிவு பெறாமல் இருப்பது. ஸ்ரீமதி மரணமடைந்து 150 நாட்களுக்குப் பிறகும் போலீசாரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியவில்லை. அதற்கு முக்கிய காரணமாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சொல்வது, ஸ்ரீமதி செல்போனை அவர் தாயார் செல்வி ஒப்படைக்கவில்லை. அதனால் நாங்கள் முக்கியமான முடிவுகளுக்கு வரமுடியவில்லை என்பதுதான்.

இதுவரை காணாமல் போயிருந்த ஸ்ரீமதியின் செல்போன் தற்பொழுது கிடைத்திருக்கிறது. ஸ்ரீமதி இரண்டு செல்போன்களை பயன்படுத்தினார். ஒரு செல்போன், ஹாஸ்டலில் அவர் மரணமடைவதற்கு முன்பு பயன்படுத்தியது. இன்னொன்று, ஸ்ரீமதி 11-ஆம் வகுப்பு படிக்கும்போது கொரோனா காரணமாக ஆன்லைன் வகுப்புகளை பள்ளி நிர்வாகம் நடத்தியபோது பயன்படுத்தியது. இந்த சமயத்தில்தான் முதல்முறையாக செல்போன் மூலம் மாணவர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆனார்கள். வாட்ஸ் அப் மெசேஜ்கள், இன்ஸ்டாகிராம் பதிவுகள் என, தங்களுக்குள் தொடர்புகொண்டு தகவல்களை பரிமாறிக் கொண்டார்கள்.

pp

Advertisment

மரணமடைவதற்கு முன்பு ஸ்ரீமதி உபயோகப்படுத்திய செல்போனில் ஹாஸ்டல் பொறுப்பு டீச்சர் கிருத்திகாவின் செல்போனிலிருந்து பெரிய அளவிற்கு தகவல்கள் பரிமாறப்படவில்லை என தெரிந்துகொண்ட சி.பி.சி.ஐ.டி., ஸ்ரீமதி ஆன்லைன் கிளாஸ் படிக்கும்போது உபயோகித்த செல்போனுக்கு குறிவைத்தது. அந்த செல்போனில் யாருக்காவது வில்லங்கமான மெசேஜ்கள் பரிமாறப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய வேண்டும் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் அந்த செல்போனை ஒப்படைக்குமாறு ஸ்ரீமதி அம்மாவிடம் கேட்டனர். ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்டார், அவருக்கும் அவரது அம்மாவுக்கும் இடையே நடந்த சண்டைதான் தற்கொலைக்கான காரணம் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் சொல்லி வந்ததால், மகளின் செல்போனை ஒப்படைத்தால் அதில், “சமூகஆர்வலர் ஸ்டேன்ஸ் சாமி கம்ப்யூட்டரில் பொய் மெசேஜ்களை புகுத்தி, அவர் திறந்துகூடப் பார்க்காத அந்த மெசேஜ்களை வைத்து தேச விரோத சட்டத்தில் அவரைக் கைது செய்து சிறையிலேயே அவர் இறந்துபோகும் அளவிற்கு செய்தார்களே, அதுபோல ஸ்ரீமதியின் செல்போனிலும் செய்வார்கள்” என ஸ்ரீமதியின் தாய் செல்வி பயந்தார்.

ஆனால், "வழக்கு விசாரணைக்கு செல்வி ஒத்துழைக்கமாட்டேன்' என்கிறார் என்ற குற்றச்சாட்டை செல்போன் விவகாரத்தை வைத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்னை உயர் நீதிமன்றத்தில் எழுப்பவே, வழக்கறிஞர் சங்கரசுப்பு மூலமாக செல்போனை ஒப்படைக்க ஸ்ரீமதி அம்மா சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு போட்டார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி “"செல்போனை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படை யுங்கள்'’என தீர்ப்பளித்தார். அதைத் தொடர்ந்து "சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம், ஸ்ரீமதியின் செல்போனை ஒப்ப டைக்கப்போகிறேன்' என நம்மிடம் சொன்னார் செல்வி.

செல்வி போனை ஒப்படைத்ததும், அதிலிருந்து ஸ்ரீமதி கொலைவழக்கில் புதிதாக என்ன கண்டுபிடிக்கப் போகிறது சி.பி.சி.ஐ.டி? இதனால் அந்த வழக்கில் திருப்பம் ஏற்படுமா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள் ளது.

"இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்கக்கூடாது. அவர்கள் தவறான பாதையில் விசாரணையை கொண்டுசெல்கிறார்கள்' என செல்வி, ஹைகோர்ட்டில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

நக்கீரன் மீது கவர்னர் தேசத்துரோக அடிப்படையில் வழக்கு தொடர்ந்தபோது, "அது தவறு' என, சுப்ரீம் கோர்ட்டில் நக்கீரனுக்காக வாதாடிய வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா, "ஸ்ரீமதியின் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பள்ளித் தாளாளர் ரவிக்குமார் மற்றும் அவரது மனைவி சாந்தி ஆகியோரை பிணையில் விட்டது சரியல்ல' என செல்வி சார்பாகத் தொடர்ந்த வழக்கு வரும் 2ஆம் தேதி கோர்ட் விடுமுறை முடிந்ததும் விசாரணைக்கு வருகிறது.

lawyer

Advertisment

ஆக, புது வருடத்தில் பல திருப்பங்களை ஸ்ரீமதி வழக்கு சந்திக்கப்போகிறது என்கிறார்கள் ஸ்ரீமதிக்காக ஆஜராகும் வழக்கறிஞர்கள். இதற்கிடையே "ஸ்ரீமதி, ஜூலை 13-ஆம் தேதி அதிகாலை மரணமடைந்து கிடந்தபோது, அவரது சித்தப்பா ஒருவர் வீடியோ எடுத்தார். அந்த செல்போனும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் இருக்கிறது' என ஒரு தகவல் சி.பி.சி.ஐ.டி. போலீசாராலேயே பரப்பப்பட்டு வருகிறது.

"அது அப்பட்டமான பொய். ஸ்ரீமதியின் போஸ்ட்மார்ட்டம் ஜூலை 14-ஆம் தேதி நடந்தது. மார்ச்சுவரியில் கிடந்த ஸ்ரீமதி உடலை உறவினர்கள் சிலர் போட்டோ எடுத்தனர் என்பதுதான் உண்மை' என்கிறார்கள் ஸ்ரீமதியின் உறவினர்கள்.

இப்படி வழக்கு, செல்போன்கள் என மாறி, மாறி பொய்கள் சுற்றிவரும் ஸ்ரீமதி வழக்கு... வரும் புத்தாண்டில் புதிய திருப்பத்தை சந்திக்கும் என்கிற எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.

படங்கள் : அஜித்