டந்த வாரம் திருச்சி மாநகரில் விசித்திரமான வழக்கு ஒன்று பதிவாகியது. அதில் திருச்சி இராம லிங்க நகரைச் சேர்ந்த திருமண மாகாத 36 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரிய அளவில் பேசப்பட வில்லை என்றாலும், அவர் எழுதி வைத்திருந்த கடிதம், அந்த தற்கொலைக்கான உண்மையான காரணத்தை வெளிப்படுத்தியதோடு... போலீஸ் கவனத்தையும் ஈர்த்தது.

ss

காவல்துறையினர் 4 பக்கம் கொண்ட அந்த கடிதத்தைக் கைப்பற்றி, வெள்ளைத்தாளில் எழுதியிருந்த தகவல்களை வாசித்தனர். "தனக்கு இந்த சமூகத்தில் வாழ்வதற்குப் பிடிக்கவில்லை. எனக்கு திருமணம் ஆகவில்லை. திருமணம் செய்துகொள்வதில் விருப்பமும் இல்லை. கடவுள் கிருஷ்ணன் இந்த பூமிக்கு வருவார். அவரை மட்டும்தான் நான் திருமணம் செய்துகொள்வேன் என்ற உறுதியான நிலைப்பாட்டுடன் இத்தனை ஆண்டு காலம் நான் வாழ்ந்துவந்தேன்.

எனக்கு பரதநாட்டியம் மற்றும் நடனங்களில் அதிக ஆர்வம் வர கிருஷ்ணனும் காரணம். கிருஷ்ண பக்தி காரணமாகவே ராதா என்றும் என் பெயருடன் சேர்த்துக்கொண்டேன். அதனால் நான் நடனத்தை கற்றுக்கொண்டு வந்தேன். என்னுடைய காதல், உடல் என அனைத்தும் அந்த கிருஷ்ணனுக்குச் சொந்த மானது. எனவே நான் யாரையும் காதலிக்க விரும்பவில்லை. அதேபோல் வேறு எந்த ஒரு ஆசாபாசங்களும் இல்லாமல் வாழ்ந்துவந்தேன்.

ஆனால் நான் நடனம் கற்றுக்கொண்டு அதை இணையதளத்தில் பதிவுசெய்வதற்கான வழிமுறைகள் குறித்து திருச்சி தில்லைநகரில் இயங்கிவரும் ஒன் வே ஸ்ட்ரீட் டான்சர் ஹரிபிரசாந்த் என்பவரிடம் சில தகவல்கள் கேட்டிருந்தேன். அதற்காக நான் அவரைச் சந்திக்கச் சென்றபோது, அவர் என்னிடம் "நான்தான் அந்த கிருஷ்ணன். இந்த பூமியில் நான் மனித அவதாரம் எடுத்து வந்துள்ளேன்' என்று கூறி என்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். அவர் என்னைத் தொடும்போது எனக்கு அருவருப்பாக இருந்தது. கடவுள் கிருஷ்ணனைத் தவிர, என்னை வேறு யார் தொட்டாலும் எனக்கு எந்தவித உணர்வும் வராது. நான் முழுவதும் கிருஷ்ணனுக்குச் சொந்தமானவள் என்று பலமுறை கூறினேன். அதேசமயம் வயது வித்தியாசத்தில் நான் 5 வயது பெரியவள் என்பதால் நான் உனக்கு அக்கா என்று கூறியும், என்மீது அவருடைய வக்கிரத்தைக் காட்டினார். அதனால் இந்த மனித மிருகங்கள் நிறைந்த சமூகத்தில் வாழ எனக்கு விருப்பமில்லை. எனவே நான் என்னுடைய உயிரை மாய்த்துக்கொள்கிறேன்' என்று அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.

இந்த கடிதத்தை ஆதாரமாகக் கொண்டு வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் ஹரிபிரசாந்த் மீது பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதாவின் (பெயர் மாற்றம் செய்யப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டம்) (இசநந) பிரிவு 194-வது பிரிவின் கீழ் பாலியல் துன்புறுத்தல் வழக்கும், பி.என்.எஸ். 108-ன் கீழ் தற்கொலைக்குத் தூண்டும் வழக்கும் (பசடஐர ஆஸ்ரீற்), தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடைச் சட்டம், 1998-ன் பிரிவு (4 இ)-ன்படி, ஒரு பெண் தற்கொலைக்கு துன்புறுத்தலால் துண்டப்பட்டு தற்கொலை செய்துகொள்ள காரணமாக இருத்தல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிபிரசாந்த் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தற்கொலை செய்துகொண்ட ராதா, கிருஷ்ணனைக் காதலித்து... அவருக்காக காத்திருப்பது விசித்திரமாக இருந்தாலும், பாலியல்ரீதியாக ஒரு பெண்ணைக் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தது மன்னிக்க முடியாத குற்றம்.

இவர் தற்கொலை செய்துகொண்ட பெண்ணிடம் மட்டும்தான் அத்துமீறினாரா,… இல்லை இவரிடம் நடனம் கற்கவந்த மற்ற வர்களிடமும் அத்துமீறினாரா என்பதையும் சேர்த்து காவல்துறை விசாரணை மேற் கொள்ளவேண்டும்.

-துரை.மகேஷ்