திண்டுக்கல் மாவட்ட பழனியில், ஆதிதிரா விடர் நலத்துறை சார்பில் செயல்படும் மாணவிகள் தங்கும் விடுதி உள்ளது. இங்கு பழனி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 100-க்கும் மேற் பட்ட மாணவிகள் தங்கிப் படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலத் துறை சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அப்போது மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்புத் துறையில் உள்ள அதிகாரிகளில் ஒருவர், இங்குள்ள மாணவிகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அவர்கள் தங்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று கூறி செல் நம்பரையும் கொடுத்துவிட்டு வந்தார். உடனே, அந்த செல் எண்... தொடர்ந்து கதற ஆரம்பிக்க, அதிர்ந்துபோன மாவட்ட குழந்தைகள் நலத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள், அந்த மாணவிகள் விடுதியில் அதிரடி விசா ரணையை மேற்கொண்டனர்.

se

Advertisment

அப்போது. இந்தப் பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள், எங்கள் விடுதி மாணவிகள் சிலரை, நட்பு வலைவிரித்து ஏமாற்றி, அவர்களிடம் சில்மிசம் செய்துவருகின்றனர். அவர்களைப் பார்க்கவரும் சாக்கில், எங்களுக்கும் டார்ச்சர் தருகிறார்கள்' என்று நடுங்கினர்.

உடனே இந்த விவகாரம் மாவட்ட கலெக்டர் விசாகன் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட, கலெக்டரின் அதிவேக உத்தரவின் பேரில், பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் தனி விசாரணை நடந்தது. அதன்பின்னர் பழனி மகளிர் காவல் நிலையத்திலும் புகார் கொடுத்துவிட்டு, விடுதி வார்டன் அமுதா மற்றும் வாட்ச்மேன் விஜயா ஆகியோரை மாவட்ட கலெக்டர் தற்காலிக பணி நீக்கமும் செய்திருக்கிறார்.

ss

Advertisment

மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாணவிகளைத் தனித்தனி யாக விசாரித்தபோது... விடுதி அருகே உள்ள சத்யா நகரைச் சேர்ந்த கிருபாகரன், ராகுல், பரந்தாமன் ஆகிய மூன்று பேர் தொடர் டார்ச்சர் கொடுத்து வருவதாகவும், திருமணமான அவர்கள், தங்களுக் குத் திருமணம் ஆகவில்லை என்று கூறிக்கொண்டு, அங்குள்ள மாணவிகளிடம் பேசி, அவர்களில் சிலரைத் தங்கள் வலையில் சிக்க வைத்து, தங்கள் வீட்டுக்கு வரச்சொல்லி, அங்கே தொடர்ந்து அவர் களுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்து வரு கிறார்கள் என்றும் திகிலூட்டினார்கள். அதோடு ஒரு கல்லூரி மாணவனும் ஒரு மாணவிக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்து வந்தானாம். பிறகு?

"எங்கள் விசாரணையில் அந்த நான்கு பேரும் மாணவிகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்தது தெரியவந்தது. அதனால், அந்த நான்கு பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்து இருக்கிறோம்'' என்கிறார் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கவிதா.

ses

இந்த வில்லங்க விவகாரம் தொடர்பாக, அதே பகுதியில் வசிக்கும் மீனா என்பவரிடம் நாம் விசா ரித்தபோது, "20 வருடங்களுக்கு மேலாக இப்பகுதி யில் இந்த மாணவிகள் தங்கும் விடுதி இருந்து வரு கிறது. நான் படிக்கும் போது இந்த விடுதியில் தங்கித்தான் படித்து வந்தேன். அப்போதே சில மாணவிகள் இளைஞர்களோடு சுற்றித் திரிந்துவிட்டு இரவு நேரங்களில் தான் வருவார்கள். அதைத் தற்போது தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள வாட்ச்மேன் விஜயா கண்டுகொள்ளமாட்டார். அந்த அளவுக்கு தவறு செய்யும் மாணவிகளுக்கு துணை போய் வந்தார். அதைக் கண்டித்து நானே பல மாணவிகளைத் திரட்டி அப்போது போராடி இருக்கிறேன். அதன்பின் கொஞ்ச நாள் பிரச்சனை இல்லாமல் இருந்து வந்தது''’என்றவர், மேலும் அங்கே நடக்கும் மாணவி கள் தரப்பின் அத்துமீறல்கள் குறித்து சொல்ல ஆரம்பித்தார்...

"இந்த விடுதியின் பின்புறம் உள்ள சுற்றுச்சுவர் ஒரு ஆள் உயரத்திற்கு மட்டுமே இருப்பதால் துணிச்சல் மிகுந்த மாணவிகள் சிலர் இரவு நேரங்களில் ஏறிக் குதித்து வெளியே போய் வரும் அவல நிலையும் உள்ளது. அதோடு சில மாணவிகள் இரவு நேரங்களில் எதிரே குடியிருப்புகளில் உட்கார்ந்திருக்கும் இளைஞர்களுக்கு செல்போன் மூலம் லைட் அடித்து சிக்னல் காட்டி வருவதையும் பார்த்திருக்கிறேன். அதுபோல் ஹாஸ்டல் திட்டு பகுதியில் ஏறி நின்று கொண்டு, சில மாணவிகள், அந்த வழியாகப் போகும் வரும் இளைஞர்களைப் பார்த்து சிரிப்பதும், கை ஜாடை செய்வதுமாக இருக்கிறார்கள். அந்த அளவுக்கு மாணவிகளை அங்குள்ள சூழல் மாற்றி வருகிறது. அங்கே எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை. விடுதியில் உள்ள வாட்ச்மேனும், வார்டனும் அதைக் கண்டுகொள்வ தும் இல்லை. காரணம், அவர்களுக்கு மாணவிகள் பண உதவிகளும், பரிசுப் பொருட்களும் கொடுத்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். அதனால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக விடுதியைச் சுற்றி யுள்ள தடுப்புச்சுவரை உயர்த்த வேண்டும். அது போல் விடுதியில் உள்ள ஒட்டுமொத்த ஊழியர் களையும் மாற்றிவிட்டு திறம்பட செயல்படக்கூடிய ஊழியர்களைப் பணிநியமனம் செய்ய வேண்டும். அதேபோல் மாணவிகளுக்கு விழிப்புணர்வு வகுப் பையும் நடத்தவேண்டும். அப்படிச் செய்தால்தான் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியும்'' என்று நம்மை ஏகத்துக்கும் அதிரவைத்தார்.

ss

இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டர் விசாகனிடம் கேட்டபோது... "மாணவிகள் சிலருக்கு இளைஞர்கள் பாலியல் தொந்தரவு செய்து வருவ தாக தகவல் வந்ததின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுத்து இருக்கிறோம். அதோடு தொடர்ந்து அந்த விடுதியைக் கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறேன். அதுபோல் விடுதியைச் சுற்றியுள்ள தடுப்புச் சுவர் உட்பட விடுதிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனடியாக செய்து கொடுப்போம்'' என்றார் உறுதியான குரலில்.

மாணவிகள் விடுதி தடம்புரளாதபடி மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்.