தோஷம் கழிப்பதாக் கூறி மோசடி செய்யும் போலிச்சாமியார்கள் இப்போது பெருகிவருகிறார்கள். அப்படியொரு சாமியார் கும்பல் ஒன்று, இப்போது வசமாகப் பிடிபட்டிருக்கிறது.

வடலூரைச் சேர்ந்த 30 வயது ஜோதிமணி, அங்குள்ள பஸ் நிலையத்தில் தள்ளுவண்டி யில் சிப்ஸ் வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத் தன்று வியாபாரத்தை முடித்துக்கொண்டு இரவு வீட்டுக்கு அவர் சென்ற போது, அவர் வீட்டு வாசலில் ஒரு ஆடம் பர கார்வந்து நின்றது. அவர் ஆச்சரிய மாகப் பார்க்கும் போதே, அதிலிருந்து காவி அணிந்த ஒரு சாமியாரும் அவருடன் நான்கு சிஷ்யர்களும் பரபரப் பாக வந்து இறங்கினர்.

ss

நேராக ஜோதிமணியிடம் வந்த அந்த காவி நபர், "அன்பரே நாங்கள் திருவண்ணாமலையில் இருந்து வருகிறோம். உங்கள் வீட்டுக்கு அண்ணாமலையார், நேரடியாகச் சென்று அருள் கொடுக்குமாறு எங்களை அனுப்பி உள்ளார். நீங்கள் ஒரு சிவனடியாரின் தீவிர பக்தர் என்பது எனது ஞான திருஷ்டியில் தெரிந்தது. உங்கள் குடும்ப உறுப்பினர்கள், வாழ்க்கை நிலை பற்றி எல்லாம் ஞானத்தின் மூலம் எனக்குத் தெரியும். உங்களுக்கு இருக்கும் தோஷங்களை நீக்கினால்தான் உங்களுக்கு நல்ல பலன்கள் நடக்கும்''’என்று ஆசை வார்த்தைகளை அள்ளி விட்டதோடு, மணியின் குடும்ப விவபரங்கள் சிலவற்றையும் சொல்லி ஆச்சரியப் பட வைத்திருக் கிறார்.

இதைக்கேட்ட ஜோதி மணி, "தோஷங்கள் நீங்க நான் அதற்கு என்ன செய்யவேண் டும்?''” என்று பணிவோடு கேட்க, அந்த காவியோ... "சில பரிகார பூஜைகளை செய்ய வேண்டும். அதோடு, திருவண் ணாமலையில் உள்ள சிவன் கோவிலில் நீங்கள் அன்ன தானம் செய்ய வேண்டும். இதற்கான மொத்த செலவுகள் 45 ஆயிரம் ரூபாய் ஆகும்''’ என்று கூறியிருக்கிறார்.

இதைக்கேட்டு அதிர்ந்த ஜோதிமணி, "என்னிடம் அவ்வளவு பணம் இல் லையே''” என்று பரிதவிப்பாகச் சொல்ல... காவியோ, "அப்படியானால் மகனே, இருக்கும் பணத்தை இப்போது கொடு. மீதிப்பணத்தை சில மணி நேரம்கழித்து மீண்டும் வந்து பெற்றுக் கொள்கிறோம். மிச்சத்தை ஏற்பாடு செய்து வை''” என்று சொல்ல, ஜோதிமணி தன்னிடமிருந்த மூவாயிரம் ரூபாயை எடுத்துக் கொடுத்துள்ளார். அதைப் பெற்றுக்கொண்ட அந்தக் கும்பல் காரில் ஏறிச்சென்றது. அப்போது ஜோதிமணியின் எட்டு வயது மகன் வீட்டுக்குள் ஓடிவந்து, "அப்பா இப்ப வந்த ஆளுங்க நம்ம குடும்பத்தைப் பத்தியெல்லாம் என்கிட்ட விசாரிச்சாங்க'’என்று சொல்ல... இதனால், தான் ஏமாற்றப் பட்டிருக்கிறோம் என்பதை அறிந்து அதிர்ந்துபோனார் ஜோதிமணி. நேராக வடலூர் போலீசில் புகார் செய்தார்.

Advertisment

ss

உடனே இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையிலான டீம், அக்கம் பக்க ஊர்கள்வரை சென்று வலைவீசியது. அப்போது கடலூர் ராகவேந்திரா சிட்டி பகுதியில் டி.என். 05 ஏ.டி. 9891 என்ற எண் கொண்ட ஸ்கார்பி யோ காருடன் இருந்த காவிக் கும்பல் மீது சந்தேகமாகி, அவர்களை ஸ்டேஷனுக்கு அள்ளிவந்து விசாரணையைத் தொடங்கினர். அப்போது, அந்த காவி அணிந்த ஆசாமி தன் பெயர் சேகர் என்றும், திருவண்ணாமலை மாவட்டம் குருவிமலை தனது ஊர் என்று, சொன்னதோடு... தன்னுடன் இருப்பவர்கள், ரகுநாத், சந்திரசேகர், முருகன், ஜெகதீஸ் என்றும் ஒப்பித்தார். ஜோதிமணியிடம் ஏமாற்றியது போலவே பலரிட மும் இந்தக் கும்பல் கைவரிசையைக் காட்டியதாகச் சொன்னது.

அந்த மோசடிக் கும்பலிடம் மேலும் விசாரித்தபோது...

"கள்ளக்குறிச்சியில் ஒரு டாக்டர் வீட்டுக்குச் சென்றும் அவரை ஏமாற்ற முயன்றோம். அவர் போலீஸில் எங்களை பிடித்துக் கொடுத்துவிட்டார். இது தொடர்பான வழக்கும் இருக்கிறது. அதேபோல் தண்டராம்பட்டு காவல் நிலையத்திலும் ஒரு மோசடி வழக்கு எங்கள் மீது இருக்கிறது. பிடிபட்டாலும் ஜாமீனில் வெளியே வந்து இந்தத் தொழிலை ஆரம்பித்துவிடுவோம்''’என்று கூலாகச் சொல்லியிருக்கிறார்கள் அந்தத் தில்லாலங்கடிப் பேர்வழிகள்.

நம்மிடம் பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், "இப்ப காவி வேசம் போட்டு கொள்ளையடிப்பது ஃபேசனாகிவிட்டது. இது போன்ற ஒரு கும்பல் சமீபத்தில் கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஊராட்சி மன்றத் தலைவர் வீட்டுக்குச் சென்று, இதே பாணியில் தோஷம் கழிப்பதாக ரீல் விட்டிருக்கிறது. பணத்தைக் கணிசமாக வாங்கிக்கொண்ட அந்தக் கும்பல், அந்தப் பணத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் திருவண்ணாமலைக் கோயிலில் அன்னதானம் செய்கிறோம். வாருங்கள் என்று சொல்லி, ஏமாற்றி இருக்கிறது.

இதேபோல், விழுப்புரம் மாவட்டத்தில், பேருந்தில் பள்ளி செல்லும் 17 வயது ப்ளஸ் டூ மாணவியிடம், ஒரு 50 வயது நபர் பேச்சுக் கொடுத்து, "உன் அப்பாவுக்கு நேரம் சரியில்லை. அதற்குப் பரிகாரமாக நீ அணிந்திருக்கும் தங்கச் செயினில் ஒரு நிவர்த்திக் கல் பதிக்கவேண்டும். என்னுடன் விழுப்புரம் வா'' என்று சொல்லி, மாணவியை விழுப்புரத்துக்கு அழைத்துச் சென்று, அங்கே சங்கிலியை வாங்கிக்கொண்டு ஒரு இடத்தில் நிற்க வைத்துவிட்டுப் போய்விட்டார். நெடுநேரம் காத்திருந்த அந்த மாணவி, செயினைப் பறி கொடுத்துவிட்டுத் திரும்பினார். இப்படி நிறைய மோசடிகள் நடக்கின்றன. பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும். சந்தேக நபர்களைப் பார்த்தால் காவல்துறையைத் தொடர்புகொள்ள வேண்டும்''’என்றார் அக்கறையாய்.

இப்படி மோசயில் இறங்கும் காவிக் கும்பல்களை காவல் துறை விரைவில் கண்டறிந்து, முற்றிலுமாக ஒடுக்கவேண்டும்.

-சக்கரை