ss

ரலாற்று உண்மைகளை முழுமையாக வாசித்து உணராமல் துண்டு துண்டாக வெட்டி எடுத்துப் பேசு வது என்பது வரலாற்றுத் திரிபாக அல்லது அபத்தமாகவே முடியும் என்பதற்கு, சமீபத்தில் "முஸ்லிம்கள் பற்றி தந்தை பெரியார் இப்படித்தான் பேசினார்' என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் உளறல் பேச்சே அதற்கான சான்று.

Advertisment

"பெரியார் இங்குள்ள முஸ்லிம்களை இழிவாக பேசினார். துலுக்கன் என்றும் வந்தேறி கள் என்றும் முஸ்லிம் சமூகத்தை கொச்சைப்படுத்தி னார்' என்று சீமான் மேடைதோறும் பேசி வருவது கேலிக்கூத்து. மாறாக சீமான் பல்வேறு பிரஸ் மீட்டுகளில் "முஸ்லிம்கள் எனக்கு வாக்களிப்ப தில்லை அவர்கள் திமுகவிற்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்று ஒரு சமூக கடமையாக மடைமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கடவுள் இல்லை என்று சொன்ன பெரியா ருடன் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் ஒன்றி ணைப்பது போன்று ஒரு தோற்றம் அல்லது வெற்று பிம்பம் தொடர்ந்து கட்டமைக்கப்பட்டு வருகிறது. உண்மையில் அவர்களுக்காக, அவர்களின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுப்பவன் இந்த சீமான் தான். நியாயப்படி தமிழக முஸ்லிம்கள் எனக்குத் தான் வாக்களிக்க வேண்டும்.

ஆனால் அவர்கள் அதைச் செய்வதில்லை. அவர்கள் சைத்தானின் பிள்ளைகளாக மாறிவிட்ட தன் காரணமாக அவர்கள் எனக்கு வாக்களிப்ப தில்லை' என்று ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் மிகவும் இழிவாகப் பேசிவரும் இந்த சீமான் தான் உண்மையில் சைத்தான்.

Advertisment

மேலும், நாம் தமிழர் கட்சியில் உள்ள முஸ்லிம் சமூகத்தவர்களை அவர்களின் பெயரை தமிழ்ப்படுத்துகிறேன் என்று புதிய பெயர் சூட்டுவதில் பல்வேறு குளறுபடிகளையும் செய்து வருபவர் சீமான். இஸ்லாமிய இறைநம்பிக்கையை கொச்சைப்படுத்துவது, முஸ்லிம்களின் மத வழிபாட்டில் அந்நிய மொழிக்கு இடம் இல்லை என்றும் அரபு மொழி, அரபிய நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மொழி என்றும் கடுமையாகக் கருத்து சொல்லி வருபவரும் இந்த சீமான் தான்.

இதுபோன்ற கருத்துக்களை அவர் நிர்வாகிகள் என்கிற பெயரில் உள்ள முஸ்லிம் பெண்களை அருகே வைத்துக்கொண்டே சொல் வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். தமிழக முஸ்லிம்கள் தனக்கு பெருவாரியாக வாக்களிக்க முன்வருவதில்லை என்கிற காழ்ப்புணர்விலும், முஸ்லிம் சமூக வாக்குகள் தி.மு.க.வின் பக்கம் செல்வதைக் கண்டு கடுமையாக மன உளைச்சல் காரணமாக அவர் பெரியாரை முஸ்லிம் சமூகத்துடன் கோர்த்துவிடும் வேலையை செய்து வருகிறார்.

அடிப்படையில் முஸ்லிம் சமூகத்தின் எந்த ஒரு கூறுகளையும் உள்வாங்காதவர் தான் இந்த சீமான். நாம் தமிழர் கட்சியில் பயணிக்கும் முஸ்லிம் சகோதர சகோதரிகள் இறுதியாக தங்களின் ஈமானை இழந்து நிற்கும் காட்சியைத் தான் பார்க்க முடிகிறது.

முஸ்லிம்கள் பற்றி பெரியார் விமர்சனமே செய்யவில்லை என்பதும் உண்மையல்ல. சாதியை ஒழிக்கக்கூடிய தெம்பும் திராணியும் எந்த மதத்தில் உள்ளதோ அதுவே சிறந்த மதம் என்பதுதான் பெரியாரின் மதம் பற்றிய பார்வையாக இருந்திருக்கிறது.

நெல்லை மாவட்டம் சாத்தான்குளம் மிலாது விழா மேடையில், பெருந்திரளாக முஸ்லிம் மக்கள் கூடியிருந்த கூட்டத்தில் பெரியார் பேசுகிறார், ''நான் இங்கு வந்து பேசுகிறேன் என்பதற்காக இஸ்லாமிய சமூகக் கொள்கைகள் முழுவதையும் ஒப்புக்கொண்டதாகவோ அல்லது எல்லாமே சுயமரியாதைக் கொள்கைகள் என்றோ நான் சொல்வதாக நீங்கள் தீர்மானித்து விடாதீர்கள்.

ss

இங்கும் சில குருட்டு நம்பிக்கைகள் காண முடிகிறது. சமாதி வழக்கங்களை சிலர் செய்து வருவதை பார்க்கிறேன். மாரியம்மாள் கொண் டாட்டம் போல இஸ்லாம் சமூகத்திலும் அல்லா சாமி பண்டிகை நடக்கிறது. நாகூர் போன்ற இடங்களில் சந்தனக்கூடு, தீமிதி ஊர்வலங்கள் நடைபெறுகின்றன. இவைகள் எல்லாம் குரானில் சொல்லப்பட்டிருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை.

ஆனால் சமூகத்தில் இந்நிகழ்வுகள் நடக்கின்றன. ஒருவேளை இதுபோன்ற வைபவங்கள் சகோதர சமய சகவாசத்தால் முஸ்லிம் சமூகத்திலும் ஏற்பட்டிருக்க லாம். மூடநம்பிக்கைகளை முழுமையாக முஸ்லிம் பெருமக்கள் ஒழித்தால்தான் நீங்கள் உங்கள் மத பெருமை பேசிக்கொள்ள முடியும். சென்ற வருடம் ஈரோடு அல்லா சாமி பண்டிகை பற்றி ஈரோடு முஸ்லிம் ஜமாத்தினர் கூட்டத்தில் நான் கண்டித்து பேசினேன்.

முஸ்லிம் சகோதரர் கள் என் மேல் கோபப் படாமல் நான் பேசியதை கேட்டு வெட்கப்பட்டார் கள். அதன் பயனாக இந்த வருடம் அல்லா சாமி பண்டிகை ஈரோட்டில் அடியோடு நிறுத்தப்பட்டு இருக்கிறது.

இங்கு பெரியார் அல்லா சாமி என்று குறிப்பிடுவது தர்கா வழிபாட்டையும் அங்கு நடைபெறும் சந்தனக்கூடு வைபவத்தையும் என்று புரிந்துகொள்ள வேண்டும். காரணம் சீமான் போன்றவர்கள் வருங்காலங்களில் பெரியார் முஸ்லிம் சமூக மக்களின் இறைவழிபாட்டை, பள்ளிவாசல் தொழுகை வழிபாடுகளை நிறுத்தச் சொன்னார் என்று பொய் பிம்பம் கட்டுவதற்கும் வாய்ப்புண்டு. தீண்டாமை ஒழியவேண்டும் என்றால் தீண்டாதவர் எனப்படுபவர்கள் இஸ்லாமியக் கொள்கையை தழுவ வேண்டியது மிக அவசியம் என வலியுறுத்தியும் சொன்னவர் சாட்சாத் தந்தை பெரியார் தான். தீண்டாமை முழுமையாக நீங்குவதற்கு ஏன் கிறிஸ்துவ மதத்தையோ ஆரிய சமாஜத்தையோ தழுவக்கூடாது என நீங்கள் கேட்கலாம். ஆனால் அங்கும் தீண்டாமையை முழுமையாக ஒழிக்க முடியவில்லை.

பறைய கிறிஸ்தவன், பார்ப்பார கிறிஸ்துவன், நாயுடு கிறிஸ்துவன், நாடார் கிறிஸ்துவன் என நாடு முழுவதும் இருப்பதாகப் பார்க்கிறேன் என்று சொன்ன பெரியார், பறையன் முஸ்லிம், பார்ப்பார முஸ்லிம், நாயுடு முஸ்லிம், நாடார் முஸ்லிம் என இருக்கிறதா எனக் கேள்வியும் எழுப்பியிருக்கிறார். இங்குள்ள கிறிஸ்தவ நாடார்கள் என்னை கோபித்துக்கொள்ளக் கூடாது, வேண்டுமானால் வெட்கப்படுங்கள் என உளமார தெரிவித்துக் கொள்கிறேன் என்பது அவர் பேசியுள்ள சொற் பொழிவு. (அச்சாக்கம் 02-08-1993 குடியரசு இதழிலும் வெளிவந்தது)

அவரின் இத்தகைய சொற்பொழிவை பார்த்து எந்தவொரு கிறிஸ்தவ நண்பரும் பெரியாரின் மேல் கோபம் கொள்ள வில்லை. கருத்துக்களில் உடன்படுவதும் முரண்படு வதும் தந்தை பெரியாரின் இயல்பான குணநலன் என்பது கிறிஸ்தவ, முஸ்லிம் சமூகங்கள் உறுதியாக நம்பினார்கள் என்றே சொல்லலாம்.

முஸ்லிம் சமூகத்தார் முழுமையாகக் கூடியிருக்கும் கூட்டத்தின் மேடையில் முஸ்லிம் பெண்களுக்கு கோஷா அணிவது பெண் அடிமைத்தனம் எனத் துணிச்சலாக சொல்கின்ற தைரியம் பெரியாருக்கு இருந்தது. மனதில் பட்டதை பட்டென்று சொல்லக்கூடிய என்னை மற்ற மதக்காரர்களை விட அதிகமான மதப்பற்று உடைய முஸ்லிம்கள் என் மேல் அதீத பிரியம் வைத்து தங்களின் மத விழாவுக்கு தொடர்ந்து அழைப்பதை நான் என்னவென்று சொல்வது என சிலாகித்தும் சொன்னவர் தந்தை பெரியார்.

பெரியார் -முஸ்லிம் சமூக உறவை புரிந்துகொள்ளாத சீமான் போன்றவர்கள் இங்கு உள்ள முஸ்லிம்களை தந்தை பெரியார் வந்தேறிகள் என்றும், துலுக்கர்கள் என்றும், இங்குள்ள பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் வேலை வாய்ப்பை சுரண்ட வந்தவர்கள் என்றும் பேசி வருவது ஆதாரமற்ற புடுகு மூட்டைகள் என்று முஸ்லிம் சமூகம் உணர்ந்தே சீமானுக்கு தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றது.

1 ஏப்ரல் 1938 ஈரோட்டில் முஸ்லிம் லீக் விழாவில் பெரியார் பேசும்போது "எனக்கு விபரம் தெரிந்து கடந்த 40 ஆண்டுகள் நான் முஸ்லிம் தோழர்களுடன் உண்மையான நண்பனாகவே இருந்து வருகிறேன் இந்தச் செய்தியை நான் உள்ளூர் விழாவில் உங்களிடத்தில் சொல்வதற்கு விரும்புகிறேன். ஏனெனில் நீங்கள் தான் இந்த உண்மையை அறிந்தவர்கள். உள்ளம் அறிந்த பலரும் இதோ என் கண்முன்னே அமர்ந் திருக்கிறார்கள்'' இப்படித்தான் தந்தை பெரியாருக்கும் முஸ்லிம் சமூகத்திற்குமான உறவு இருந்தது.

மதம் குறித்து தந்தை பெரியாரின் பார்வையும், இஸ்லாம் குறித்த அவரது அணுகுமுறையும் பல்வேறு விமர்சனங்கள் நிறைந்தது என்றாலும், இஸ்லாம் என்றால் இழிவு நீங்க சகோதரத்துவம், மானத்தோடு வாழ்தல் என்கிற சமூகநீதிக் கூறுகளை உள்ள டக்கிய மார்க்கம் என்பதில் மாற்றுக் கருத்து அவரிடம் இறுதி வரையில் உருவாக வில்லை என்பதே நிதர்சன உண்மை.

நாம் தமிழர் நிர்வாகிகளாக இருக்கும் முஸ்லிம் பெண்கள் தலையில் ஹிஜாப் அணிந்து சீமானின் அருகே அமர வைக்கப்பட்ட பின்னர் முஸ்லிம் சமூகம் பற்றிய கருத்துக்களை பிரஸ்மீட்டிலும் பேசுவது சீமானின் வழக்கமாக இருக்கிறது. நான் மதத்தை வைத்து அரசியல் செய்வதில்லை என்று தொடர்ந்து சொல்லிவரும் சீமான் இதுபோன்ற நாடக பிரஸ்மீட்கள் அவர் தொடர்ந்து நடத்தி வருவது ஏன்? மற்றவர்கள் வாக்கு வங்கி அரசியல் செய்கிறார்கள் என்று சொல்லும் சீமான் செய்வதுதான் அப்பட்டமான வாக்கு வங்கி அரசியல்!